பக்கம் எண் :

124பாரதம்வீட்டும பருவம்

27.-இதுவும்அடுத்த கவியும்-வீமன் வந்தவரை யெதிர்த்துவென்று
ஐந்துதம்பிமாரைச் சுவர்க்கம் அனுப்பினமை கூறும்.

வின்மேல்விசையிற்கடும்பாணமேன்மேனிறுத்திவேந்தரைப்
                                     பார்த்தென்
மேனினைவென்றவரவர்பேரிதந்துணித்துச்சிலைதுணித்துத்
தன்மேல்வந்ததம்பியரிற்றரியாதுடன்றவைவர்க்கு
மன்மேலெய்தவாளியெனத்தொடுத்தானைந்துவயவாளி.

     (இ - ள்.) (அப்பொழுது வீமன்), வில்மேல் - (தனது) வில்லிலே,
விசையின் -வேகத்தோடு, கடு பாணம்-கொடிய அம்புகளை, மேல் மேல் நிறுத்தி -
மேலேமேலேவைத்துத் தொடுத்து, வேந்தரை பார்த்து - (எதிர்த்து வந்த அந்த)
அரசர்களைநோக்கி, மேல் நினைவு  என் என்று - இனிமேல் (உங்கள்)
ஆலோசனை என்ன வென்று (இகழ்ச்சிதோன்றச்) சொல்லி, அவர் அவர் -
அந்தந்தஅரசர்களது, பேர் இரதம்- பெரியதேர்களை, துணித்து-அழித்து, சிலை-
விற்களை,துணித்து-அறுத்து, தன்மேல் வந்த தம்பியரில் தரியாது உடன்ற
ஐவர்க்குஉம் -தன்மேல் (போருக்கு) வந்த (துரியோதனன்) தம்பிமார்களுள்
பொறுக்கக்கூடாதபடி[மிகுதியாகப்] போர் செய்த ஐந்துபேருக்கும், மன் மேல்
எய்த வாளி என (கீழ்த்)துரியோதனன்மேல் (தான்) தொடுத்த அம்புகள்போல,
ஐந்து வயவாளி-வெற்றியைத்தருதற்குரிய ஐந்தபாணங்களை, தொடுத்தான்-
செலுத்தினான்; (எ-று.)    

     முன்இரண்டடி - வீமனதுதொழில்; துணித்துத்தொடுத்தான் என்க:
துரியோதனன் தம்பிமாரது தொழிலாயின், துணித்துத் தன்மேல்வந்த என்க. என்
மேல்நினைவு என்றது, இனி அழிவுநிச்சயம் என்பதைக் காட்டும். ஐவர்பெயர் -
அடுத்த கவியிற் கூறப்படும். மன்மேல்எய்தவாளி - கீழ் 24-ஆம் பாட்டிற்
காண்க.                                                   (166)    

28.சேனாவிந்துசுதக்கணன்பொற்றேர்ப்பிங்கலசன்சலாசந்தன்
ஆனாவீமவாகுவெனுமடல்வாணிருபரைவரையும்
வானாடாளும்படிவிடுத்தான்வன்பாற்றம்மையைவரையுங்
கானாள்கென்றகாவலனைப்போல்வான்வீரக்கழல்வீமன்.

     (இ - ள்.) வன்பால் - கொடுமையால், தம்மை ஐவரைஉம் -
(பாண்டவர்களாகிய) தங்களைந்து பேரையும், கான் ஆள்க என்ற -
'காட்டையாளுவீர்களாக' என்று சொல்லியனுப்பின, காவலனை -
துரியோதனராசனை, போல்வான்-ஒப்பவனாகிய, வீரம் கழல்வீமன் -
வீரக்கழலையுடைய வீமன்,-சேனாவிந்து-,சுதக்கணன்-,பொன்தேர்-
பொன்னாலாகியதேரையுடைய, பிங்கலசன்-,சலாசந்தன்-,ஆனா-(போரில்) நீங்காத,
வீமவாகு-,எனும்-என்று பேர்சொல்லப்படுகிற, அடல் வாள் நிருபர் ஐவரைஉம் -
வலிமையையுடையவாளாயுதத்தையுடைய அரசர்கள் ஐந்து பேரையும்,  வான்
நாடு ஆளும்படிவிடுத்தான் - வீரசுவர்க்கத்தை ஆளும்படி அனுப்பினான்; 
(எ-று.)

     துரியோதனனும் வீமனும் சமபலமுடையவராதலாலும் துரியோதனன்
பஞ்சபாண்டவரை இந்நாட்டைவிட்டு வனமடையச்