பக்கம் எண் :

நான்காம் போர்ச்சருக்கம்125

சொல்லி அனுப்பியது போல, வீமன் இப்பொழுது துரியோதனன் தம்பிமாரைவரை
இவ்வுலகத்தைவிட்டு விண்ணுலகமடையும்படி அனுப்புதலாலும், வீமனுக்குத்
துரியோதனனை உவமைகூறினார். வானாடாளும்படிவிடுத்தல்-கொல்லுதல்:
பிறிதினவிற்சி. பீமபாஹூ- வடசொல்; பகைவர்க்குப் பயங்கரமான
தோள்களையுடையா னென்று பொருள். ஆளுதல் - இங்கே, சேர்தல். வன்பால் -
பலாத்காரமாக என்றபடி. ஸேநாபதி, ஸூஷேணன், ஸூலோசநன் ஜலஸந்தன்,
பீமபாஹூ என வடநூலிற் பெயர் காணப்படுகிறது.

29.-தருமபுத்திரன்பக்கத்து வீமன் முதலியோர்
ஆங்காங்குப் போர்புரியவே துரியோதனன்சேனை யுடைதல்.

ஒருபால்வீமன்சிலைவிசயனொருபாலொருபாலபிமன்னு
வொருபானகுலன்சாதேவனொருபாலொருபாலுரகேச
னொருபாலரக்கன்பாஞ்சாலனொருபாலடலுத்தமபானு
வொருபாலுடன்றுபொரப்பொரவேயுடைந்ததரசன்பெருஞ்சேனை,

     (இ - ள்.) ஒரு பால் - ஒருபக்கத்தில், வீமன்-வீமசேனனும், ஒரு பால்-,
சிலைவிசயன் - வில்லில்வல்ல அருச்சுனனும், ஒரு பால்-, அபிமன்னு -
அபிமன்யுவும்,ஒரு பால்-, நகுலன்-நகுலனும், ஒரு பால்-, சாதேவன் - சகதேவனும்,
ஒரு பால்-உரக ஈசன் - நாகர்களுக்குத் தலைவனான இராவானும், ஒரு பால்-,
அரக்கன் -கடோற்கசனும், ஒரு பால்-, பாஞ்சாலன் - பாஞ்சாலதேசத்து அரசனான
துருபதனும்,ஒரு பால்-, அடல் உத்தமபானு - வலிமையையுடைய உத்தமௌஜஸூம்,
உடன்றுபொர பொர - கோபங்கொண்டு மிகுதியாகப்போர்செய்ய, (அதனால்)
அரசன் பெருசேனை - துரியோதனராசனது பெரியசேனை, உடைந்தது - தோற்றுப்
பின்னிடைந்தது; (எ-று.)

     இராவான் போர்செய்யுந்தன்மை கீழ்க் களப்பலியூட்டுசருக்கத்தின் சு, எ -
பாட்டுகளிற் கூறப்பட்டது. அரக்கன் - பொதுப்பெயர் சிறப்புப்பொருளை
யுணர்த்திற்று. உத்தமௌஜஸ் - பாஞ்சாலரிற் சேர்ந்தவன்.            (168)

30.-அப்போது பகதத்தனென்பான் உடைந்தோடுஞ்சேனைக்கு
அபயமளித்துப் பாண்டவர்சேனையோடெதிர்த்தல்.

விண்ணாடருக்காவெஞ்சமத்திலசுராதிபரைவென்கண்டோன்
மண்ணாளரசர்மகுடசிகாமணியேபோல்வான்மாமரபாற்
பண்ணார்பஞ்சகதிமான்றேர்ப்பகலோனன்னபகதத்தன்
எண்ணார்துரக்கவரும்படையையஞ்சலென்றென்றெதிர்சென்றான்.

     (இ - ள்.) வெம் சமத்தில் - கொடிய (தேவாசுர) யுத்தத்தில், விண் நாடருக்கு
ஆ - தேவர்களுக்கு உதவியாக (ச்சென்று), அசுர அதிபரை வென்எண்டோன் -
அசுரத்தலைவர்களை முதுகுகாட்டியோடச் செய்தவனும், மா மரபால் - சிறந்த
வமிசமுறைமையால், மண் ஆள் அரசர் மகுட சிகாமணிஏ போல்வான் - பூமியை
ஆளுகிற அரசர்களது கிரீடத்திலுள்ள பிரதான ரத்தினத்தை