யொப்பவனுமாகிய, பண் ஆர் - அலங்காரமமைந்த, பஞ்ச கதி - ஜவகை நடைகளையுடைய, மான் - குதிரைபூண்ட, தேர் - இரதத்தையுடைய, பகலோன் அன்ன - சூரியனை யொத்த, பகதத்தன்-, எண்ணார்துரக்க வரும் படையை - (அப்பொழுது) பகைவர்கள் துரத்துதலால் (தோற்றோடி) வருகிற கௌரவ சேனையை,அஞ்சல் என்று என்று - அஞ்சவேண்டா என்று பலமுறைசொல்லிக்கொண்டு, எதிர்சென்றான் - பகைவர்களெதிரிற் (போருக்குச்) சென்றான்; (எ - று.) ஒருகாலத்திலே தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில் தோல்வியடைந்த தேவேந்திரன், திருமாலின் பௌத்திரனும் நரகாசுரனது மகனும் அவன்காலத்திற்குப்பின் கண்ணனால் இளமையில் பரிபாலனஞ் செய்யப்பட்டவனும் ஆகிய பகதத்தனைத் துணையழைக்க, இவன் அவ்விந்திரன் வேண்டுகோளின்படி சென்று அசுரரையொழித்து இந்திரனுக்கு அரசாட்சியை நிலைநிறுத்தினானென்பது, வரலாறு; மேல் பன்னிரண்டாம்போர்ச்சருக்கத்திலும் "முருகனென வெற்றி நேமி முகிலென முரணவுணருக்கு வாழ்வு கெடவுயர், சுரபதி தனக்கு வாழ்வு வரும்வகை சுரருலகளித்த தோழ னிவனரோ" என்று கூறுவர். அரசர் மகுடசிகாமணியே போல்வான் - அரசர்கள் தலைமையாகவைத்துக் கொண்டாடத்தக்கவ னென்றபடி. பஞ்சகதி - மல்லகதி மயூரகதி வானரகதி வியாக்கிரகதி இடபகதி என்பன: இனி, நச்சினார்க்கினியர் "விக்கிதம் வற்கிதம் வெல்லு முபகண்டம், மத்திமஞ்சாரியோடைந்து" எனக் குதிரைகட்கு ஐவகைநடை கூறியுள்ளார். புறப்பொருள் வெண்பாமாலையுரையாசிரியர் 'விக்கிதம் வற்கிதம் உபகண்டம் ஜவம் மாஜவம் என்னும் இப்பஞ்சதாரை' என்பர். மற்றும், ஆஸ்கந்திதம், தோரிதகம், ரேசிதம், வல்கிதம், புலுதம் எனவும்படும்: அவற்றுள், நிச்சலமாக அதிவேகமும் அதிமந்தமுமாகாமற் சமமானகதி, ஆஸ்கந்திதம்; அதைக்காட்டிலும் அதிகமாய்ச் சதுரமானகதி, தோரிதகம்: தாளகதியுடன் வட்ட மிட்ட நடை, ரேசிதம்; வேகத்தினாலே முன்னங்காலைத்தூக்கிவரும் நடை, வல்கிதம்; அவ்வளவு வேகமாகவும் சமமாகவும் போகுகை, புலுதம், எண்ணார் என்றது, கீழ்க்கவியிற் கூறியவீமன்முதலியோரை. (169) 31.-பகதத்தன் செய்த கடும்போர். அலைகால்வெள்ளக்கருங்கடல்போலதிராநின்றவாகவத்தின் மலைகால்பெற்றுவருவதுபோல்வருதிண்பனைக்கைமாமிசையான் சிலைகால்வளைத்துத்தீவாய்வெஞ்சரங்கொண்டடையார் சிரங்கொண்டான் கொலைகால்செங்கட்கரியநிறக்கூற்றந்தனக்குங்கூற்றன்னான். |
(இ - ள்.) கொலை கால் - (தனக்கு உரிய) கொல்லுதல் தொழிலை வெளியிடுகிற, செம் கண் - (கோபத்தாற்) சிவந்த கண்களையும், கரிய நிறம்- கருநிறத்தையுமுடைய, கூற்றம் தனக்குஉம்-யமனுக்கும், கூற்று அன்னான் - ஒரு யமனை யொத்தவனாகிய அந்தப்பகதத்தன்,-அலை கால் - அலைகளைவீசுகிற, வெள்ளம் - |