பக்கம் எண் :

முதற் போர்ச்சருக்கம்13

வகைப்பிறப்பினுள், தேவர் மக்கள் விலங்கு பறவை ஊர்வன நீர்வாழ்வன என்ற
ஆறும் - சரமும், ஸ்தாவரம் - அசரமுமாம், தந்தையால்- எல்லாப்பிராணிகளுக்கும்
பிதாமகனான படைத்தற் கடவுளாகிய பிரமதேவனாலென்றுமாம், பகை, நண்பு -
அவற்றையுடையார்க்குப் பண்பாகுபெயர். யார் என்றதில், வினா - எதிர்மறை
குறித்தது. ஆர்-யார் என்றதன் மரூஉ.                             (4)

5.உம்பருமுனிவர்தாமும்யாவருமுணராவொன்றை
இம்பரின்றுனக்குநானேயிசைவுறவுணர்த்தாநின்றேன்
ஐம்பெரும்பூத்தானுமமைத்தனவுடலம்யார்க்கும்
நம்பனுமொருவனுள்ளேஞானியாய்நடத்துகின்றான்.

     (இ-ள்.) உம்பர்உம் - தேவர்களும், முனிவர்உம் - முனிவர்களும், யாவர்உம்-
மற்றும் எல்லோரும், உணரா - அறியாத, ஒன்றை-ஒரு தத்துவப்பொருளை, இம்பர்-
இவ்விடத்து, இன்று - இப்பொழுது, உனக்கு-, நானே-, இசைவு உற -
பொருந்தும்படி, உணர்த்தாநின்றேன்- அறிவிக்கிறேன்; (கேள்): யார்க்குஉம்-
எல்லாப்பிராணிகளுக்கும், உடலம்-சரீரங்கள், ஐ பெருபூதத்தான்உம் அமைத்தன-
ஐந்து பெரிய பூதங்களாலுஞ் செய்யப்பட்டன; உள்ளே- அவற்றினுள்ளே,   ஞானி
ஆய் -ஞானசொரூபியாய், நம்பன்உம் ஒருவன் - ஒப்பற்ற கடவுளொருவன்,
நடத்துகின்றான் - (இருந்து எல்லாத் தொழில்களையும் அவற்றைக்கொண்டு)
செய்விக்கிறான்; (எ - று.)

     சடைப்பூதங்களினுள்ளே மனிதன் புகுந்து அவற்றைக்கொண்டு தொழில்
நடத்துதல்போல, பகவான் சேதநாசேதநங்களினுள்ளேயிருந்து தொழில்
நடத்துகின்றன னென்க. ஐம்பெரும் பூதம் - பஞ்ச மகாபூதம்; நிலம் நீர் தீ காற்று
வானம் என்பன; பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாசம்  எனப்படும். இப்பஞ்ச
பூதங்களைப் பஞ்சீகரணம் பண்ணுதலாலேயே பிரபஞ்சப்பொருள்கள் உண்டாகின்றன;
பஞ்சீகரணம் பண்ணுதலாவது - பிருதிவியில் ஒருபாதி பிருதிவியும் மற்றைப்பாதி
அப்பு தேயு வாயு ஆகாசங்களும், இவ்வாறே, மற்றைப்பாதி அதுவும்
பாதிமற்றைநான்குமாகக் கலக்கச் செய்தல். 'யார்க்கும்' எனச்
சிறப்புடையுயர்திணைமேல்வைத்துக் கூறினாராயினும், அஃறிணைப் பொருள்களையும்
உபலக்ஷணத்தாற் கொள்க. நம்பன் - (யாவராலும்) நம்பிச் சரணமடையப்படுபவன்
எனக் காரணப்பெயர்; நம்பு-பகுதி, அன் - விகுதி: இனி, நம் என்பது பகுதியாக
நமக்கு இன்னானென்னும் பொருள்படுவதோர் உயர்ச்சிச்சொல்லென்றுங்
கொள்ளலாம். உணர்த்தாநின்றேன், ஆநின்று - நிகழ்கால விடைநிலை. தாம்-அசை.                                                       (5)

6.என்னைநீபுகலக்கேண்மோவெங்குமாயாவுமாகி
மன்னியபொருளும்யானேமறைக்கெலாமுடிவும்யானே
உன்னையான்பிறிவதில்லையொருமுறைபிறிந்துமேனாள்
நன்னிலாவெறிக்கும்பூணாய்நரனுநாரணனுமானோம்.

     (இ-ள்.) நல் - அழகிய, நிலா- சந்திரகாந்தியோடொத்த காந்தியை. எறிக்கும் -
வீசுகின்ற, பூணாய் - ஆபரணங்களையுடைய அருச்சுனனே! என்னை-, புகல -
(இத்தன்மையனென்று யானே)