பக்கம் எண் :

138பாரதம்வீட்டும பருவம்

கொல்லுங்கொடும்பாணமவையைந்துவிசயன்கொதித்தேவினான்
வில்லுந்தன்வின்னாணும்விறலம்புமுடனற்றுவிடைகொள்ளவே.

     (இ-ள்.) செல்லும் - (அருச்சுனனை எதிர்த்துச்) சென்ற, கலிங்க ஈசர்-
கலிங்கநாட்டு அரசர்கள், அலையுண்ட - (அருச்சுனனால்) வருத்தமடைந்த,
நிலை -நிலைமையை, கண்டு - பார்த்து, சிவன் என்று பார் சொல்லும்
பெருசெம்மல் -(அழித்தல்தொழிலில்) சிவபிரான் (போல்வான்) என்று
உலகத்தவராற் சொல்லப்படுகிற சிறந்த வீரனான வீட்டுமன், அவன் மேல்
பல்லங்கள் தொடுத்து ஏவினான்- அந்த அருச்சுனன்மேல் அம்புகளை (வில்லில்)
தொடுத்து எய்தான்:(அப்பொழுது), விசயன்- அருச்சுனன், கொதித்து -
கோபங்கொண்டு, தன் வில்உம்வில் நாண்உம் விறல் அம்புஉம் உடன் அற்று
விடைகொள்ள - (அவ்வீடுமன்)தனதுவில்லும் அவ்வில்லின்நாணியும் (அவ்வில்லில்
எய்யப்படும்)வலிமையையுடைய அம்புகளும் ஒருசேர அழிந்து மீண்டு செல்லும்படி,
கொல்லும்கொடு பாணம் அவை ஐந்து-(பகைவரைக்) கொல்லவல்ல கொடிய
ஐந்துபாணங்களை, ஏவினான்-செலுத்தினான்; (எ-று.)

    விறலம்பும் என்றவிடத்து 'அடனாணும்' எனச் சில பிரதிகளிற்பாடங்காணப்
படுகிறது; அப்பொழுது, அடல்நாண் அற்று வலிமையும்வெட்கமுங்கெட்டு என்க.
பல்லம், பாணம், - வட சொற்கள்.                                (188)

8.-இதுவும் அடுத்த கவியும்-வீமனுடன் மன்னர்பலரும்
 துச்சாதனன் முதலியோரும் பொழுது தோற்றோடினமை கூறும்.

இவர்கொண்டசெற்றத்தொடிவ்வாறுபோர்செய்யவிகல்வீமனைப்
பவர்கொண்டநெடுவேலைபோல்வந்துமொய்த்தார்கள்பலமன்னரும்
கவர்கொண்டமுனைவாளியவர்மார்புதோறுங்கழன்றோடவே
தவர்கொண்டுசெற்றான்முன்னளகேசனமர்வென்றனியாண்மையான்

     (இ - ள்) இவர் - (அருச்சுனன் வீடுமன் என்ற) இவ்விருவரும், கொண்ட
செற்றத்தொடு - (தாம் தாம்) கொண்ட பராக்கிராமத்துடனே இ ஆறு போர்
செய்ய- இப்படி (ஒருபுறத்தில்) போர்செய்து கொண்டிருக்க, - (மற்றொரு புறத்தில்),
இகல்வீமனை - வலிமையையுடைய வீமசேனனை, பல மன்னர்உம் - அநேக
அரசர்களும், பவர் கொண்ட நெடு வேலை போல்-(பிரளயகாலத்தில்)
நெருங்குதலைக் கொண்ட பெரிய கடல்கள்போல, வந்து மொய்த்தார்கள் - வந்து
நெருங்கிச் சூழ்ந்தார்கள்; (அப்பொழுது), முன் அளகேசன் அமர் தனி வென்ற
ஆண்மையான் - முன்னே குபேரனது போரில் தனியே வெற்றிகொண்ட
பராக்கிரமமுடைய வீமன், தவர்கொண்டு-(தன்) வில்லை(க்கையில்) ஏந்தி,
(அம்புதொடுத்து), கவர் கொண்ட முனைவாளி - (பகைவருயிரைக்) கவர்தலைக்
கொண்ட கூர்நுனியையுடைய (அந்த) அம்புகள், அவர் மார்பு தோறுஉம் கழன்று
ஓட -