தம்பிமார்களை, கண்டு-பார்த்து,-உரக கேதனன்-பாம்புக்கொடியனான துரியோதனன்,-செற்றத்துடன் - கோபத்துடனே, கருத்து புகைந்து-மனங்கொதித்து, உள் கலங்கி-உள்ளே கலக்கமடைந்து, கடை கண்கள் கனல் கால-(தன்) கண்ணின் கடைகள் கோபாக்கினியைச் சொரிய, மருந்து தரும் காளை நின்றானை இன்று ஆவி மலைவேன் எனா - 'வாயுபெற்றபிள்ளையாய்நின்ற வீமனை இப்பொழுதுப் (போர்செய்து) உயிரழிப்பேன்' என்று(வீரவாதஞ்) சொல்லி, உருத்து- அதட்டிக்கொண்டு, தட தேரின்மிசை வந்து அடுத்தான்-பெரிய தேரின்மேலே வந்து(வீமனை) நெருங்கினான்; (எ-று.) - தம்பியர்க்கண்டு -இரண்டாம்வேற்றுமைச் சிறப்புவிதி. (191) 11.-இரண்டுகவிகள்-துரியோதனன் வீமனையெதிர்த்து வலிகெடுதலைக் கூறும். பேராதநிலைநின்றுவன்போடுசாபம்பிடித்தெங்கணுஞ் சோராதவயவாளியீரைந்துசேரத்தொடுத்தேவினான் ஆராவமுடனிட்டகவசம்பிளந்தோடியாண்மைக்கெலாம் வீராபிடேகஞ்செய்வயவீமனகன்மார்பின்மிகமூழ்கவே. |
(இ -ள்.) (வந்து அடுத்த துரியோதனன்), பேராத நிலை நின்று-சலியாத ஒருநிலையிலே நின்று,வன்போடு சாபம் பிடித்து-வலிமையோடு வில்லைக் கையில்ஏந்தி,-ஆண்மைக்கு எலாம் வீர அபிடேகம் செய் வய வீமன்- பராக்கிரமத்துக்கெல்லாம் (தலைவனாகத்தன்) வீரத்தனத்தால் பட்டாபிஷேகஞ்செய்யப் பெற்றுள்ள வலிமையையுடைய வீமசேனனது, இட்ட கவசம்-(மேலே) தரித்த கவசத்தை, பிளந்து ஓடி-பிளந்துகொண்டு சென்று, அகல் மார்பில்-(அவனது) பரந்த மார்பிலே, மிக மூழ்க-மிகுதியாக அழுந்தும்படி, ஏ கண்உம் சோராத வயவெளி ஈர்ஐந்து-எவ்விடத்தும்(பகைவெல்லுதலில்) சோர்தலில்லாத வலிமையையுடைய பத்துப் பாணங்களை, ஆராவமுடன்- ஆராவாரத்துடனே, சேர தொடுத்து ஏவினான்- ஒருசேரப் பிரயோகித்தான்; (எ-று.) நிலை என்றது-போரில் வில்வளைத்து அம்பைஎய்வார்க்கு உரிய நிலை. அது-பைசாசம், மண்டலம், ஆலீடம், பிரதியாலீடம் என நான்கு வகைப்படும்: இவற்றுள், ஒருகாலில்நின்று ஒருகால் முடக்கல்-பைசாசநிலை: இருகாலும் பக்கல்வளைய மண்டலித்தல்- மண்டலநிலை: வலக்கால் மண்டலித்து இடக்கால் முந்துறல்-ஆலீட நிலை: வலக்கால் முந்துற்று இடக்கால் மண்டலித்தல்- பிரதியாலீடநிலை: இனி, பிரதியாலீடம், ஆலீடம், சமபதம், விசாகம், மண்டலம் எனநிலை ஐந்தென்பாரும் உளர். ஆராவம் - வடசொல்: பேரொலி: வீரவாதத்தா லாகுவது. இனி, ஆர் ஆவமுடன் எனப்பிரித்து, நிறைந்த அம்பறாத்தூணியொடு கவசமும் பிளந்து என இயைப்பாரு முளர்.' 'ஆண்மைக்கெலாம் வீராபிடேகஞ்செய்' என்பதற்கு - பராக்கிரமசாலிகள் எல்லோர்க்குள்ளுந் தலைமைபெற்ற என்றவாறு. (192) |