மார்பையுடையவர்களாகிய, இருவோர்கள்உம் - (சாத்தகி பூரிசிரவா என்னும்) இருவரும், ஒருவோர் தொழில் காணல் அரிது ஆம் முறை - ஒருவரும் (தமது) தொழில் வகையைக்காண முடியாததாகும்படி, கடிதின் - விரைவாக, கணை தொட - அம்புகளை யெய்ய,-(அதனால்), நாண் அற்றன - (இருவரது) வில்நாணிகளும் அறுந்தன; வெம் சாபம்உம் நடு அற்றன - கொடியவிற்களும் நடுவிலே துணிபட்டன; எனின்உம்-என்றாலும்[ஆயினும்], அவர்க்கு - அவ்விரண்டு வீரர்கள்விஷயமாக, கோண் அற்றன புகல்வான் - குற்றமில்லாத புகழ்மொழிகளைச்சொல்லுதற்கு, ஒரு குறை அரற்றது - சிறிதுகுறையும் இல்லை; (எ-று.) சிறிதும்பழியில்லாத புகழ் பெறும்படி இருவரும் பின்வாங்காமல் தம்மாலியன்றவளவுபோர்விளைத்தனரென்பதாம். வில்லையேந்துதல் வளைத்தல் நாணேற்றல்அம்பெடுத்தல் அதனைவில்லில் தொடுத்தல் பகைவர்மேல் விடுத்தல் முதலியதொழில்கள், செய்யுங் கைவிரைவால்எவர்க்கும்வகுத்துக் காணவொண்ணாதபடியிருந்தன என்பது இரண்டாம் அடியின்கருத்து. ஏண் அற்றுஉயர் மர்ர்பு என எடுத்து, குற்றமில்லாமற் சிறந்த மார்பு எனினுமாம். (196) | 16. | ஒருகேடகவுரைதேறினருளமேயெனவமரிற் பொருகேடகநடவுங்கனபொற்றேர்மிசையிழியா முருகேடவிழ்தார்மார்பினர்முனைவாளமிரண்டோ டிருகேடகமிருகையினுமிருவோரு மெடுத்தார். |
(இ-ள்.) முருகு-வாசனையையுடைய, ஏடு அவிழ் தார்-பூவிதழ்கள் விரிந்த மாலையைத்தரித்த, மார்பினர் - மார்பை யுடையவர்களாகிய இருவோர்உம்-இந்த இரண்டுபேரும்,-ஒரு கேள் தக-ஒற்றுமையான சினேகம் பொருந்த, உரை தேறினர்- (ஒருவர்)பேச்சை(ஒருவர்) நம்புபவரான சினேகிதரது, உளம்ஏ என - மனம்போல, செய்தொழிலில் ஒற்றுமைப்பட்டு),-அமரில் போர்க்களத்திலே, நடவும்- செலுத்தப்படுகிற, கேடகம்பொரு-விமானத்தை யொத்த, கனம் பொன் தேர்மிசை- பெரியபொன்னாலாகிய தேர்களின்மேலிடத்தினின்றும், இழியா-இறங்கி,-முனை வாளம் இரண்டோடு-கூர்நுனியையுடைய இரண்டுவாளாயுதத்துடனே, இருகேடகம் - இரண்டு கேடகங்களையும், இரு கையின்உம் எடுத்தார் - இரண்டுட கையிலும் எடுத்துக்கொண்டார்கள்; (எ-று.) சமகாலத்தில் ஒருவரால் ஒருவர் வில் அறுபட்ட இவ்விருவரும் தேரினின்றுஇறங்குதல், வலக்கையில்வாளையும் இடக்கையிலே கேடகத்தையும் ஏந்துதல்என்னுந் தொழில்களை மாறுபடாது ஒருங்கேசெய்ததுபற்றி ஒருவருக்கொருவர்பகைவரான இவருக்கு, ஒருவரோடொருவர் ஒத்தமனமுள்ள உயிர்நண்பரை உவமைகூறினார். இரண்டாமடியில், கேடகம்-வடசொல்: வானத்திற் சஞ்சரிப்பதென்றகாரணம்பற்றி விமானத்தைக்காட்டும். இனி, கேடுஅகம்நடவும் என்பதற்கு-கேட்டைஅவ்விடத்திற் செலுத்தும் என்றும், கேட்டைத் தன்னிடத்தினின்று ஓட்டுகின்றஎன்றும் பொருளுரைத்தாருமுளர். கனபொன் - நிலைமொழி வட |