மொழியாதலின், வலி இயல்பு, முருகு-தேனுமாம். கேடகம்-தன் மேற் பிறர் எறியும் படைக்கலங்களைத்தடுப்பதொரு கருவி; பரிசை. 'தக' என்பது தேறுதலோடு இயையும், பி-ம்: கேடறநடவும். (197) 17, | படிவாயுடுபதியுந்தினபதியும்பொருதெனவே தொடிவார்கரதலமொன்றியதுறுதோலிடைமறையா வடிவாண்முனையசையாவிசைவருசாரிகள்பயிலா விடிவாய்முகிலதிராவெதிரெதிர்சீறினரிப்பால். |
(இ-ள்.) படிவாய்-பூமியிலே, உடுபதிஉம்-சந்திரனும், தினபதிஉம்-சூரியனும், பொருது என - (வந்து) போர்செய்தாற்போல, தொடி வார் கர்தலம் ஒன்றிய துறு தோலிடை மறையா - தொடியென்னும் அணியை அணிந்த நீண்ட (தம்) கைகளினிடத்திற்பொருந்திய நெருங்கிய கேடயத்தினுள்ளே மறைந்தும், வடி முனை வாள் அசையா-கூரிய நுனியையுடைய வாள்களைச் சுழற்றியும், விசை வரு சாரிகள் பயிலா-வேகமாக வருகிற (இடசாரி) வலசாரி யென்னும்) நடைகளை நடத்தியும், இடி வாய் முகில் அதிரா-இடிபொருந்தின மேகம்போலச் சிங்கநாதஞ்செய்தும், எதிர் எதிர் சீறினர்-எதிரெதிராகநின்று கோபித்துப்போர்செய்தார்கள்: (அதுநிற்க), இபால்- இந்தப்பக்கத்தில்,- (எ-று)-"துரகம்....,கரிமா சீறின" என மேற் கவியில் முடியும். "ஓடிய ஞாயி றுவாமதியோ டொத்தாற்போல், கேடகங்க ளோரிரண்டுங் கேழ்கிளர்-ஆடமரில், தாக்கினார் சாரிகைகள் சந்தித்தா ராயுதங்கள், ஓக்கினார் தம்மி லுடன்று" என்றார் பெருந்தேவனாரும். சந்திர சூரியருவமை- தேககாந்தியோடுகூடிய சாத்தகி பூரிசிரவாக்களுக்குப் பொருந்தும்; வட்டவடிவமானகேடயத்துக்குக் கொள்ளுதலும் ஒன்று. முதலடி - இல்பொருளுவமை. உடுபதி -நஷத்திரங்களுக்குத் தலைவன். தினபதி- நாளுக்குத்தலைவன். தோலமைத்துச்செய்யப்படுதலால், கேடகத்துக்கு 'தோல்' என்பது -கருவியாகுபெயர். (198) 18.-இரண்டுபக்கத்திலும் மன்னவரும் சதுரங்கசேனைகளும் ஒன்றோடொன்று பொருதல். தோலாதடலொடுசீறினதுரகத்தொடுதுரக மேலாளொடுமேலாள்வரிவில்லாளொடுவில்லாள் ஏலாமுடியரசோடரசிரதத்துடனிரதங் காலாளொடுகாலாண்மதகரிமாவொடுகரிமா. |
(இ-ள்.) துரகத்தொடு துரகம் - குதிரைகளோடு குதிரைகளும், இரதத்துடன் இரதம் - தேர்களோடு தேர்களும், மத கரி மாவொடு கரிமா-மதயானைகளோடு யானைகளும், மேல் ஆளொடு மேல் ஆள்-(இவற்றின்) மேலுள்ள வீரர்வகையோடு வீரர்வகையும், வரி வில் ஆளொடு வில் ஆள் - கட்டமைந்த வில்லின் வீரர்வகையோடு வில்வீரர்வகையும், முடி அரசோடு அரசு - கிரீடாதிபதிகளான அரசர்வகையோடு அரசர்வகையும், காலாளொடு |