பக்கம் எண் :

146பாரதம்வீட்டும பருவம்

பக்கத்தில், கால் கொண்டு உகு செந்நீர் விரிகளம்ஏ - வாய்க்கால்களாகிப்பெருகுகிற
இரத்தம் பரந்த போர்க்களமே, ககனம் அது ஆ - (செவ்) வானமாக, மால்
கொண்ட கரி கோடு -  மதமயக்கங்கொண்ட யானைகளின் தந்தங்கள், இள மதி
ஆவன - பிறைச் சந்திரனாக இருப்பன; (எ-று.)

     முதல்வாக்கியத்துக்கு முற்று வருவிக்கப்பட்டது. இரண்டாவதுவாக்கியம் -
வடிவொப்புமைபற்றிய உருவகவணி. உபமேயத்தில் 'செந்நீர்விரி' என்ற
அடைமொழிக்கு ஏற்ப, ககனம் 'செவ்வானம்' எனப்பட்டது. பி-ம்; கைக்குலம்.
                                                           (201)
21.முந்நீர்தருபவளங்கொடுமுன்னஞ்சமைவனபோற்
செந்நீரின்மிதந்தோடுவதேராழிகளொருசார்
நன்னீர்மழைமொழிசெம்புனனதிவாய்வருநுரைபோ
லந்நீரிடைபுகுமூளைகளலைபாய்வனவொருசார்.

     (இ - ள்) ஒரு சார் - ஒருபக்கத்தில், தேர் ஆழிகள்-தேர்ச் சக்கரங்கள்,
முந்நீர் தரு பவளங்கொடு முன்னம் சமைவன போல்- கடலிலுண்டாகிற
பவழத்தால் முன்னமே  செய்யப்பட்டவை போல, செந்நீரில் மிதந்து ஓடுவ -
இரத்தத்திலே மிதந்து ஓடுவன; ஒருசார்-, நல் நீர் மழை பொழி செம் புனல்
நதிவாய் வரும் நுரை போல் - நல்லநீரை மேகம்சொரிவதனாற் பெருகிய
சிவந்த புதுநீர்வெள்ளத்தையுடைய நதியிலே வருகிற நுரைகள் போல, அ
நீரிடை  புகும் மூளைகள் அலை பாய்வன - அவ்விரத்தநீரிலே விழுந்த
(வெண்மையான) மூளைகள் (எப்புறத்தும்) அலைவன;

     நல்நீர்மழை - உலகத்துக்கு நன்மைசெய்யுந் தன்மையுள்ள மேக
மென்றுமாம். தற்குறிப்பேற்றவுவமையணி.                      (202)

22.- போர்க்களத்து இறந்த மன்னவரின் தொகை. 

வையாரயில்கணைதோமரம்வாள்கப்பணமுதலாங்
கையாயுதமுழுகுந்துளை வழிசெம்புனல்கால
மெய்யாயிரவிதமாய்விழவெம்போரிடையிருபத்
தையாயிரமுடிமன்னவரகல்வானமடைந்தார்.

     (இ-ள்.) வை ஆர் - கூர்மை மிகுந்த, அயில் - வேலும், கணை-அம்பும்,
தோமரம்-ஈட்டியும், வாள்-வாளும், கப்பணம் - யானை நெருஞ்சிமுட்படையும்,
முதல் ஆம்-முதலாகிய, கை ஆயுதம்-(பகைவர்) கையிலுள்ள ஆயுதங்கள்,
முழுகும்- (தம் உடம்பில்) அழுந்திய, துளை வழி - துவாரத்தின் வழிகள்,
செம் புனல்கால-இரத்தத்தைக் கக்கவும், மெய் ஆயிரம் விதம் ஆய் விழ -
உடம்புகள்பலவகைத்துண்டுகளாய் விழவும், வெம் போரிடை-கொடிய
அப்போரிலே, இருபதுஐ ஆயிரம் முடி மன்னவர் - இருபத்தைந்து ஆயிர
மென்னுந் தொகையுள்ளகிரீடாதிபதிகளான அரசர்கள், அகல் வானம்
அடைந்தார் - விசாலமானவீரசுவர்க்கத்தை அடைந்தார்கள் [இறந்தார்கள்
என்றபடி]; (எ-று.)-கப்பணம் -இரும்பால் பெருநெருஞ்சிமுள்ளின் வடிவமாகச்
செய்