பக்கம் எண் :

ஆறாம் போர்ச்சருக்கம்151

     வீடுமன் அறத்தையே இன்பமுமாகப் பாவித்ததை, தந்தைக்கு மணஞ்
செய்விக்கும் பொருட்டுத் தான் மணஞ்செய்வதை விட்டு இவ்வுலகவின்பத்தைத்
துறந்ததனால் அறிக. அதன் பொருட்டு முன்னே இவன் தேவர்முன்னிலையில்
செய்த சபதம் தவறாமல் உறுதிநிலையாயுள்ள தன்மையை நோக்கி,
'மெய்ப்புனிதன்'என்றார்.                                     (210)

5.-வீடுமன் தன்சேனையைக் கிரௌஞ்சவியூகமாக வகுத்தல்.

பொருஞ்சமங்கருதியாள்புரவிதேர்போதகந்
தெரிஞ்சுகொண்டீரிருதிசையினுஞ்செல்லவே
பெருஞ்சனந்தன்னையப்பீடுடைவீடுமன்
கரிஞ்சமென்றுள்ளபேர்வியூகமுங்கட்டினான்.

     (இ-ள்.) ஆள்-காலாட்களும், புரவி - குதிரைகளும், தேர்-தேர்களும்,
போதகம்-யானைகளும், பொரும் சமம் கருதி - பொர வேண்டும் போரை
நினைந்து, தெரிஞ்சு கொண்டு-(தன் குறிப்பை) அறிந்துகொண்டு, ஈர் இரு
திசையின்உம் செல்ல - நான்குதிக்குக்களிலும் பரவும்படி, பெரும் சனம்
தன்னை-பெரிய அச்சேனைவீரர்களை, அ பீடு உடை வீடுமன்-
பெருமையையுடையஅந்தப்பீஷ்மன், கரிஞ்சம் என்று பேர் உள்ள வியூகம்உம்
கட்டினான் -கரிஞ்சமென்று பெயருடைய வியூகமாக அணிவகுத்தான்; (எ-று.)

     கரிஞ்சம்-க்ரௌஞ்சம் என்னும் வடமொழித் திரிபு போலும்.
அன்றில்,கிரௌஞ்சம் என்பன-ஒருபொருட்சொற்கள்; ஆதலால்,
கிரௌஞ்சவியூகமாக வகுத்தன னென்க. கிரௌஞ்சவியூகம்-அன்றிற்பறவையின்
வடிவமாகச் செய்யப்படும் படைவகுப்பு. அப்பறவையின் வாயிடத்தில்
துரோணனும்,கண்களில் அசுவத்தாமனும் கிருபனும், தலையில்: பல
அரசர்களோடுகிருதவர்மாவும், கழுத்தில் பல அரசர்களோடு துரியோதனனும்,
மார்பில் பலஅரசர்களோடும் பெருஞ்சேனையோடும் பகதத்தனும், இடச்சிறகில்
தன்சேனையோடு சுசர்மாவும், வலச்சிறகில் யவனர் முதலிய பல அரசர்களும்,
புறத்தில்சுருதாயுவும் சதாயுவும் சௌமதத்தியும் நின்றறர் என்று முதனூல் கூறும்.
அன்றில் -எப்பொழுதும் ஆணும் பெண்ணும் கூடியே நிற்பதும், கணப்பொழுது
ஒன்றையொன்று விட்டுப்பிரிந்தாலும் அத்துயரத்தைப் பொறாமல் ஒன்றையொன்று
இரண்டுமூன்றுதரம் கத்திக்கூவி அதன்பின்பும் தன்துணையைக் கூடாவிட்டால்
உடனே இறந்துபடுவதுமான ஒருவகைப்பறவை, கருதி, தெரிஞ்சுகொண்டு என்ற
வினைகளுக்கு ஏற்ப, 'தேர்' என்றது-அதனை நடத்துபவரையே குறிக்கும் பி-ம்:
தெரிந்து.                                                    (211)

6.-இருபடைவீரர்களும் நெருங்கிப்பொருதல்.

இந்திரன் முதலியவிமையவர்தங்களா
லந்தரமிடனறவரவுளைந்தலமர
வந்துவந்திருபெரும்படைஞருமாறுபட்
டுந்தினார்முந்தனாரொட்டினார்முட்டினார்.