(இ-ள்.) இந்திரன் முதலிய இமையவர்தங்களால் - (போர்காணவந்த) இந்திரன்முதலான தேவர்களால், அந்தரம் இடன் அற - ஆகாயவெளி வெற்றிடமில்லையாகவும், அரவு உளைந்து அலமர - (தமது அதிபாரத்தைப் பொறுக்கமாட்டாமல்) ஆதிசேஷன் வருந்திக் கலங்கவும், இரு பெருபடைஞர்உம் - இரு திறத்துப் பெருஞ்சேனைவீரரும், வந்து வந்து - நெருங்கிவந்து,மாறுபட்டு - (ஒருவரோடொருவர்) எதிர்த்து, உந்தினார் - (ஆயுதங்களைச்)செலுத்தி, முந்தினால் - முற்பட்டு, ஒட்டினார் - வீர வாதஞ்செய்து, முட்டினார் - தாக்கிப்போர்செய்தார்கள்; (எ-று.) - இமையவர் - இமையாதவர் இமையில்விசேஷமுடையவர்; இமயமலையில் வாழ்பவர். (212) 7.-துரோணாசார்யன் வீமன்மேல் போருக்கு நெருங்குதல். பரவிநால்விதவயப்படைஞருஞ்சூழவா ளிரவிநான்வெம்பகையிருளினுக்கென்றுதன் புரவிநான்மறையெனப்பூண்டதேர்தூண்டினான் விரவினான்வீமன்மேல்விற்கையாசிரியனே. |
(இ-ள்.) நால் விதம் வய படைஞர்உம் - நான்குவகைப்பட்ட வலிமையையுடைய சேனைவீரர்களும், பரவி சூழ - பரந்து (தன்னைச்) சூழ்ந்து வர,-வில் கை ஆசிரியன் - வில்லைத் தரித்த கையையுடைய ஆசாரியனான துரோணன், வெம் பகை இருளினுக்கு நான் வாள் இரவி என்று - 'கொடிய பகைவர்களாகிய இருளை யொழிப்பதற்கு நான் ஒளியையுடைய சூரியன்' என்று கூறி, நால் மறை என புரவி பூண்ட தன் தேர் தூண்டினான்-(திரிபுரசங்கார காலத்தில் சிவபிரானுக்குக் குதிரைகளாக விருந்த) நான்குவேதங்கள்போல(ச் சிறந்த)குதிரைகளைப் பூட்டியுள்ள (தனது) தேரைச் செலுத்தினவனாய், வீமன்மேல்விரவினான்-வீமசேனன்மேல் (போருக்கு) நெருங்கினான்; (எ-று.) துரோணனது தேர்க்குதிரைகளுக்குச் சிவனது வேதக்குதிரைகளை உவமை கூறியதனால், துரோணன் அழித்தல்தொழிலில் சிவன்போல்வானென்பது தொனிக்கும். நான்குவேதம்வல்ல துரோணனது குதிரைகளுக்கு நான்குவேதங்களை உவமைகூறியது ஏற்கும். இருளினுக்கு - நான்காம் வேற்றுமை, பகைப்பொருளது. விற்கையாசிரியன் என்றதை - இரண்டாம்போர்ச்சருக்கத்து ஒன்பதாம்பாட்டிலுங் காண்க. (213) 8.-வீமன் துரோணனுடைய தேர்க்குதிரைகளையும் பாகனையும் அழித்தல். சிலைவரம்பெறுதலிற்றேசிகன்சீறவும் நிலைபெறும்புகழினானெஞ்சினஞ்சல்செயா மலையினும்பெரியதேர்வலவனும்புரவியுந் தலையறும்படிசரந்தனுவளைத்துதையினான். |
(இ-ள்.) தேசிகன் சீறஉம்-வில்லாசிரியன துரோணன் (இவ்வாறு) கோபித்து(த் தன்மேல்) போருக்கு வரவும், நிலை பெறும் புகழினான- (அழியாது) நிலைபெற்ற கீர்த்தியை |