பக்கம் எண் :

156பாரதம்வீட்டும பருவம்

இல் பாகன் ஊர் வான் தட தேரொடுஉம் - (போரில்) சோர்தலில்லாத சாரதி
செலுத்திய சிறந்த பெரிய தேருடனே, சென்று - போய், வருக என எதிர்
ஊன்றினான் - (துரியோதனன் முதலியோரை) வருவீர்களாக' என்றுசொல்லி
எதிர்த்து நிலைநின்றான்.

     அரித்துவசன், மைந்தர்முதலியோர் புடைவரத் தேரொடுஞ் சென்று
ஊன்றினானென்க. ஸோகம் - வடசொல். 'உயிரையே போன்ற' என்ற
அடைமொழியை 'மைந்தர்' முதலியோர்க்குக் கூட்டுதலு மொன்று.   (219)

14.-இருபுறத்து வீரரும் பொருமாறு நெருங்குதல்.

நின்றிருசேனையுநேர்படவேலினும்
வன்றிறல்வில்லினும்வாளினுமலைவுறக்
குன்றனதோளினாரிருவருங்கொக்கரித்
தொன்றினார்வில்வளைத்தொருவருக்கொருவரே.

     (இ-ள்.) இரு சேனைஉம்-இருதிறத்துச் சேனைகளும், நேர் படநின்று-
(ஒன்றுக்கொன்று) எதிராக நின்று, வேலின்உம் - வேல்களாலும், வல்திறல்
வில்லின்உம் -கொடிய வலிமையையுடைய விற்களாலும் வாளின்உம்-
வாள்களாலும்,மலைவு உற-போரைச் செய்ய,-குன்று அன தோளினார்
இருவர்உம்-மலையையொத்த தோள்களையுடையவரான (வீமன் துரியோதனன்
என்ற) இரண்டுபேரும்,வில் வளைத்து- (தம் தம்) வில்லை வளைத்து,
கொக்கரித்து - கர்ச்சித்துக்கொண்டு,ஒருவருக்கு ஒருவர் ஒன்றினார் -
ஒருத்தருக்கொருத்தர் நெருங்கினார்; (எ-று.)                    (220)

15.-வீமதுரியோதனரின் கைகலந்த போர்.

அவனுமம்பிவனுரத்தழகுறவெழுதினான்
இவனுமம்பவன்மணித்தோளின்மேலெழுதினான்
புவனமெங்கணுமிகப்பொறியெழப்போர்செய்தார்
பவனனுங்கனலியுநிகரெனும்பரிசினார்.

     (இ-ள்.) அவன்உம் - துரியோதனனும், இவன் உரத்து - வீமன்மார்பிலே,
அம்பு - பாணங்களால், அழகு உற எழுதினான் - அழகாகப் பதிவுசெய்தான்;
இவன்உம் - வீமனும், அவன் மணி தோளின்மேல் - துரியோதனனது அழகிய
தோள்களின்மேல், அம்பு - அம்புகளால் எழுதினான் - பதிவுசெய்தான்;
(இவ்வாறு),பவனன்உம் கனலிஉம் நிகர் எனும் பரிசினார்-காற்றும் நெருப்பும்
(தமக்கு) உவமையென்றுசொல்லப்படுந்தன்மையையுடைய அவ்விருவரும்,-புவனம்
எ கணும் மிகபொறி எழ போர் செய்தார் - பூமிமுழுவதிலும் மிகுதியாக(க்
கோபாக்கினியின்)பொறிகள் சிந்தும்படி யுத்தம்பண்ணினார்கள்; (எ-று.)

     அம்பெய்தற்கு மார்புதோள் சிறந்த இலக்காதல் தோன்ற, 'அழகுறஎழுதினான்' என்றார்.அவன்-வந்தவன். இவன்- எதிரூன்றி நின்றவன்.                 (221)