பக்கம் எண் :

162பாரதம்வீட்டும பருவம்

பொருந்தப்பெற்ற, கனை கழல் - ஒலிக்கின்ற வீரக்கழலையுடைய (பாதத்தையுடைய),
மன்னன் - துரியோதனராசனது, இளவல் - தம்பியான, விகன்னனை -
விகர்ணனை,-முன்னர் உறு கணை - முன்னே [மார்பில்] பொருந்திய அம்புகள்,
பின்னர் விழ விழ - (ஊடுருவிக்கொண்டு) பின்னே மிகுதியாக விழும்படி, முன்னர்
அமர் பொர முன்னினான்-எதிரில்நின்று போர்செய்யத் தொடங்கி விட்டான்;
இன்னும்-பின்பும், நாம்-, என்ன அமர் பொர-என்னபோரைச் செய்வதற்கு, இன்னர்
அணுகுவது - இப்பொழுது (அபிமந்யுவை) நெருங்குவது?' என்ன - என்று கருதி,
துன்னலார் - பகைவர்கள், வெருவினர் - அஞ்சினார்கள்;(எ - று)

     'அபுமந்யு வேறுதுணையில்லாமல் தானொருவனாகவே இராசராசனான
துரியோதனனது தம்பியான விகர்ணனை மார்பு துளைக்கும்படி பல அம்புகளை
எய்தா னென்றால், நாம் அவ்வபிமனோடு எதிர்த்து என்ன போர்
செய்யமாட்டுவோம்?' என்று எதிரிகள் பலர் அஞ்சினரென்பதாம். நிகர் அன்ன
என்ற இடத்து - திருக்கோவையாரில், "கோளரிக்குந் நிகரன்னார்" என்பதற்கு -
கோள்வல்ல அரிமாவிற்கு மறுதலைபோல்வார்' என்றும், 'கோளரிக்கு ஒப்பாகிய
அத்தன்மையர் எனினும் அமையும்' என்றும் பேராசிரியர் கூறியது அறியத்தக்கது.
ஒருவனும், உம் - இழிவு சிறப்பு: அவனது துணையின்மையையும்,
இளம்பிராயத்தையும் காட்டும். இன்னர் - இத்தன்மையரெனினுமாம். இப்பாட்டு -
மெல்லோசையால் மிக்கது. முன்னும் பின்னு முள்ள இவ்வகை விருத்தங்களில்
ஒவ்வொருபாட்டும் ஒவ்வொரு ஓசைவிகற்பம் பொருந்தப் பாடப்பட்டுள்ளவாறு
காண்க.                                                    (229)

24.- அபிமன் போர்வெல்ல, தந்தைமார் எதிர்கொண்டு மகிழ்ந்து
அவனைத் தழுவுதல்.

அன்றையமரினிலொன்றுபடவவரங்கமயர்வுறுபங்கமே
தென்றுமொழிவதுதந்தமனையுறவெந்தநிருபருமுந்தினார்
வென்றுபொருமுனைநின்றவபிமனைவிஞ்சுமுவகைகொணெஞ்சுடன்
சென்றுதழுவினரிந்துவரவெழுசிந்துவெனமகிழ்தந்தைமார்.

     (இ-ள்.) அன்றை அமரினில் - அன்றையதினத்துப்போரில், ஒன்று பட -
ஒருசேர, அவர் அங்கம் - (விகர்ணன் முதலிய) பகையரசர்களது உடம்பு,
அயர்வுஉறு-தளர்ச்சியடைந்த, பங்கம் - தோல்வியை, ஏது என்று மொழிவது -
(யாம்) என்னவென்று எடுத்துச்சொல்வது? எந்த நிருபர்உம் - (துரியோதனன்
பக்கத்தில்) எல்லா அரசர்களும், தம் தம் மனை உற - தங்கள் தங்கள் வீட்டை
அடைவதற்கு, முந்தினார் - (ஒருவரினும் ஒருவர்) முற்பட்டார்: (அப்பொழுது),
இந்துவரவு எழு சிந்து என - சந்திரன் உதிக்கப்பொங்குகிற கடல்போல, மகிழ
தந்தைமார் - மகிழ்ச்சி கொண்ட (அபிமனது) தந்தையரான பாண்டவர், வென்று
பொருமுனை நின்ற அபிமனை - வெற்றி கொண்டு போர்க்களத்திலேநின்ற
அபிமந்யுவை, விஞ்சும் உவகை கொள்நெஞ்சுடன் - மிகு களிப்புக் கொண்ட
மனத்துடன், சென்று தழுவினர்-; (எ-று.)