வயவர்கள் படைகொடு-(இறந்து) வீரசுவர்க்கஞ்சென்ற வீரர்களது ஆயுதங்களை (த்தம் கைகளில்) ஏந்திக்கொண்டு, எதிர் எதிர் பூசல் புரி-எதிரெதிராக நின்று ஒன்றோடொன்று) போர்செய்கிற, இரு பூதம்உம் - இரண்டு சேனைகளும், சோனை மழை முகில் வாகன் முதல - விடாப்பெருமழை பொழியும், சோனை மேகத்தை வாகனமாகவுடைய இந்திரன் முதலிய, தலை சிறந்த தேவர்கள், தொழுது துதிக்க. (தன்னை வந்து) வணங்கித் தோத்திரஞ்செய்ததனால், யானை முகம் அசுரேசனுடன் அமராடு - யானைமுகத்தையுடைய அசுரராசனோடுபோரைச்செய்த, தலைவனை - தலைவனானவிநாயகக்கடவுளை, ஒக்கும்-; (எ-று.) மாகதனென்னும் வீமனுக்கு விபுதையென்னும் அசுர கன்னிகையினிடத்தில் பிறந்தகஜமுகாசுரனென்பவன் அநேகவரங்களைப் பெற்று தன்னுடன் பிறந்த பல அசுரர்களுடனே உலகத்துக்கு பலவகைத் தீங்குகளை இழைத்து வருகையில், வேண்டுகோளால் அவனைக் கொல்லும்பொருட்டுச் சிவ குமாரராய் யானைமுகக்கடவுளாக அவதரித்த விநாயகர் இந்திரன் முதலிய தேவர்களின் பிரார்த்தனையாற்சென்று எதிர்த்துப் போர்செய்து அவ்வசுரனை அழித்திட்டனர் என்பது கதை. அவ்வசுரன் இரணியன்போலத் தேவர்களாலும் அசுரர்களாலும் மனிதர்களாலும் மிருகங்களாலும் மற்றும் பல பிராணிகளாலும் (தனித்தனி) இறவாதபடி வரம்பெற்றிருந்தன னாதலால், அவனைச் சிவபிரான் யானைமுகமும், தெய்வப் பிறப்பும், பூதவடிவமும் கொண்ட ஒருபுத்திரனை யுண்டாக்கி அவனால் அழித்தருளின்ரென்க. அவன் படைக்கலங்களாலும் அழியாதபடி வரம்பெற்றனனாதலால், அவன்மேல் விநாயகர் தமது தந்த மொன்றை யொடித்து வீசி அதனால் கொன்றன ரென்று நூல்கள் கூறும். யானைமுகத்தை வாயிற்கௌவியவையும், அங்குள்ள பிணங்களைத் தின்பதில் தமக்குஉண்டான மாறுபாட்டினாலும் விளையாட்டினாலும் தம்மில்ஒன்றோடொன்று போர்செய்கிறவையுயான பூதங்களுக்கு, ஒருவரோடொருவர்போர்செய்த பயங்கரரூமான கஜமுகாசுரனும் கைகால்வயிறுகளில்பூதவடிவங்கொண்ட யானைமுகக்கடவுளும் உவமை யெனக் காண்க. முதல் - குறிப்புபெயரெச்சம், வயவர் வலிமையுடையவர், எல்லாச் சுபகாரியங்களிலும் முதலில் பூசிக்கப்படுகிற தலைமைபற்றி, விக்கிநேசுவரரை 'முதல்வன்'என்றார். பி-ம்: தசைவழி. (233) 28.-சூரியாஸ்தமனமும், மறுநாள் சூரியோதயமும். இமைய மணுகினன் விசயன் மதலையை யின்றை யமரினி யுங்களுக் கமைமயு மெனமுத லனிக மடையவு மணியு மவனிபர் நால்வருந் தமைய னொடுதம பதியி னணுகினர் தங்க விரைவொடு கங்குல்போய்ச் சிமைய மணுகினன் மீள நனியிருள் சிதைய வுதய திவாகரன் |
(இ-ள்.) (சூரியன்),-விசயன் மதலையை-அருச்சுனனது புத்திரனான அபிமன்னுவை (நோக்கி),'இன்றை அமர் இனி உங்களுக்கு அமையும்' என- இன்றைய தினத்துப்போர் இப்பொழுது உங்களுக்கு அமையும்' என- இன்றைய தினத்துப்போர் இப்பொழுது உங்களுக்குப் போதுமென்று (கூறியவன் போல), முதல்-முத |