பக்கம் எண் :

166பாரதம்வீட்டும பருவம்

லிலே, இமையம் அணுகினன்-(அஸ்தமந) கிரியை அடைந்தான் (அஸ்தமித்தான்);
(உடனே), அனிகம் அடையஉம் - சேனைகளெல்லாவற்றோடும், அணியும்
அவனிபர் நால்வர்உம் - அழகு பொருந்திய (வீமன் முதலிய) நான்கு அரசர்களும்,
தமையனொடு, (தங்கள்) தமையனான தருமபுத்திரனுடனே, தம பதியின் அணுகினர்
தங்க - தமதுபடைவீட்டிற் சேர்ந்து தங்க,-கங்குல் விரைவொடு போய்-இராத்திரி
துரிதமாகக் கழிய, மீள - பின்பு, நனி இருள் சிதைய-மிகுந்த இருள் அழியும்படி,
உதயம் திவாகரன் - உதயகாலத்துச் சூரியன், சிமையம் அணுகினன் -
உதயகிரியைஅடைந்தான் [உதித்தான்]; (எ-று.)

     சூரியன் இயல்பாக அஸ்தமித்ததை அன்றைய தினம் சிறப்பாகப் போர்
செய்தஅபிமனைநோக்கி 'இவ்வளவோடு  இன்றைப் போர் போதும்' எனக்கூறிச்
சென்றதாக உத்பிரேக்ஷித்தார். முதல் இமையமணுகினன் திவாகரன், கங்குல்போய்
இருள்சிதைய மீளச் சிமையம் அணுகினன் என ஒருவாக்கியமாகவே
முடித்தலுமொன்று. இமயம், சிமயம் என்பன - எதுகைநோக்கி
இடைப்போலிபெற்றன இமயம் - இங்கே, மலையென்னுமாத்திரமாய், சிறப்புப்பெயர்
பொதுப்பொருளை யுணர்த்திற்று; பின் வருவதை நோக்கி அஸ்தகிரியாயிற்று.
தமையன் - தம் ஐயன் எனப்பிரிந்து தம் தந்தைபோல்வானென்று பொருள்படும்; '
தமையன் தந்தை போல் மதிக்கத்தக்கவன்' என்பது - நூல்வழக்கு, திவாகரன் -
பகலைச்செய்பவன்; வடமொழிப்பெயர்; 'பகலவன்' என்பது - இதற்கேற்ற
தமிழ்மொழி. உதயச்சிமயமென மொழிமாற்றியுரைப்பினும் அமையும். சிமயம் -
மலையுச்சி; இங்கே, மலைக்குச் சினையாகுபெயர்.                    (234)

ஆறாம்போர்ச்சருக்கம்முற்றிற்று.

-------

ஏழாம் போர்ச்சருக்கம்,

1.-கடவுள் வாழ்த்து.

உரலும் வேதமுந் தொடர நந்தகோப னுடன சோதைகண்டுருக
                                         வாழ்வுகூர்
தரணி மீதுசெங் கையு மாமுழந் தாளும் வைத்துவைத் தாடு
                                         மாயனார்
விரவி நின்றமாமருதி னூடுதா மெத்தெ னத்தவழ்ந் தருளி
                                         மீளவும்
புரியு நீள்கடைக் கண்ணும் வண்ணமும் போற்று வார்கண்மெய்
                                   புளகமேறுமே.

     (இ-ள்.) உரல்உம் வேதம்உம் தொடர - (தன்னைக் கட்டி வைத்த) உரலும்
(தன்னையே புகழ்கிற) வேதங்களும் உடன்வரவும், நந்தகோனுடன் அசோதை
கண்டு உருக - (தன்னை வளர்த்த தந்தை தாயாராகிய) நந்தகோபனும் யசோதையும்
பார்த்து மனமுருகவும் வாழ்வு கூர் தரணி மீது செம்கைஉம் மா முழந்தாள்உம்
வைத்து வைத்து - வாழ்க்கைமிகுந்த பூமியின் மேல் சிவந்த (தன்) கைகளையும்
அழகிய முழங்கால்களையும் மாறிமாறி எடுத்து வைத்து, ஆடும் மாயனார்-
திருவிளையாட்டுச்செய்கிற கண்ண