தீர்ந்து சென்றனரென்பது கதை. இந்தக் குபேரபுத்திரர்கள் முன்பு ஒரு காலத்தில்பலதெய்வமகளிருடனே ஆடையில்லாமல் ஜலக்கீரிடை செய்துகொண்டிருக்கையில்,நாரதமகாமுனிவர் அங்கு எழுந்தருள, மங்கையரனைவரும் நாணங்கொண்டுஆடையெடுத்து உடுத்து நீங்க, இந்த மைந்தர்மாத்திரம் மதுபாந மயக்கத்தால் நிர்வாணமாகவே யிருக்க, நாரதர்கண்டு கோபங்பொண்டு 'மரங்கள் போலிருக்கிறநீங்கள் மரங்களாவீர்'என்று சபித்து, உடனே அவர்கள் வேண்டிக்கொண்டதற்குஇரங்கி, 'நெடுங்காலஞ் சென்ற பின்பு திருமால் உங்களை யடையுஞ் சமயத்தில்இவ்வடிவமொழிந்து முன்னைய வடிவம் பெற்று மீள்வீர்' என்று சாபவிடை கூறிப்போயினரென அறிக. இச்சருக்கத்திலுள்ள பத்துப்பாடல்களும் - பெரும்பாலும் ஒன்று மூன்று ஐந்துஏழாஞ் சீர்கள் மாச்சீர்களும், மற்றைநான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடிநான்குகொண்ட எண்சீராசிரியவிருத்தங்கள். (235) 2.-பாண்டவசேனையும்கௌரவசேனையும் களங்குறுக, வியூகமாக வகுக்கப்படுதல். இருவர்சேனையுஞ்சேனைமன்னருமிகலியேபலதிசைகளெங்கணு முரசமாதிவெம்பணைமுழங்கவேமுன்னைவெங்களம்பின்னுமெய்தினார் மரகதாசலம்போலுமேனிமாமாயனச்சுமாசுணவியூகமுந் தரணிகாவலன்றன்பிதாமகன்சகடவியூகமுந்தான்வகுக்கவே. |
(இ-ள்.) இருவர் சேனைஉம்-இருதிறத்தாரது சேனைகளும், சேனை மன்னர்உம்-அந்தச்சேனைகளிலுள்ள அரசர்களும், இகலி - பகைமைகொண்டு, பல திசைகள் எங்கண்உம் முரசம் ஆதி வெம்பனை முழங்க-எல்லாத்திக்குக்களினிடம் முழுவதிலும் பேரிகை முதலிய பயங்கரமான போர்ப்பறை கோஷிக்க, முன்னை வெம் களம் பின்உம் எய்தினார்-முந்தின நாள்களில் அடைந்த கொடிய போர்க் களத்தை அந்தநாளிலும் அடைந்தார்கள்: (அங்கு ஒரு பக்கத்தில்) மரகத அசலம் போலும் மேனி மா மாயன் - மரகதரத்தினமயமானதொரு மலையை யொத்த திருமேனியையுடைய மிக்க மாயையுள்ள கண்ணபிரான், நஞ்சு மாசுணம் வியூகம்உம் - விஷத்தையுடைய சர்ப்பத்தின் வடிவமான வியூகத்தையும், (மற்றொருபக்கத்தில்), தரணி காவலன் தன் பிதாமகன் - பூமியையாளும் அரசனானதுரியோதனனது பாட்டனான வீடுமன், சகடம் வியூகம்உம் - வண்டி வடிவமானவியூகத்தையும், வகுக்க - அமைக்க,-(எ-று,) - 'பாண்டியன் அஞ்சி யோடினான்'என்று அடுத்த கவியோடு குளகமாக இயையும், வகுக்கவே, களம் எய்தினார் எனஇக்கவியிலேயே இயைத்தலு மொன்று தான் - அசை. ஏழாம்நாட்போரில் பாண்டவசேனை வச்சிரவியூகமாகவும், கௌரவசேனை மண்டலவியூகமாகவும் வகுக்கப்பட்டதாக முதனூலில் உள்ளது. பி - ம்: பணைகொழிக்கவே. (236) |