பக்கம் எண் :

ஏழாம் போர்ச்சருக்கம்171

பிறந்த அருச்சுனன் காலத்தாற் பிந்தியவனாதலால், செயந்தனுக்கு அருச்சுனன் தம்பியாவன்.பி-ம்: எதிரில் வல்லரோர்.                            (239)

6.ஒருவரெய்தவம்பொருவர்மேலுறாதோரொரம்பினுக்கோரொரம்புதொட்
டிருவரும்புகுந்தெய்தவல்லபமின்னதாகுமென்றுன்னலாகுமோ
வரிவில்வெங்கடகரியின்வந்ததராகனுமாமயிற்குகனுமன்றியே
மருவுவெங்குரற்கொண்டல்வாகனும்வலனும்ராமராவணருமென்னவே.

     (இ-ள்.) வரி - கட்டமைந்த, வில் - வில்லுடனே, வெம் கடகரியின் வந்த -
வெவ்விய மதயானைமுகமாக வந்த, தாரகன்உம் - தாரகாசுரனும், மா மயில்
குகன்உம் - சிறந்த மயில்வாகனத்தையுடைய சுப்பிரமணியனும்,-அன்றி -
அல்லாமல், மருவு வெம் குரல் கொண்டல் வாகன்உம் - பொருந்திய பயங்கரமான
இடி முழக்கத்தையுடைய மேகத்தை வாகனமாகக்கொண்ட தேவேந்திரனும்,
வலன்உம் - பலாசுரனும்,-(அன்றியும்), ராமராவணர்உம் - ஸ்ரீராமபிரானும்
இராவணனும்,-என்ன - என்னும் இவர்கள்போல,-இருவர்உம்- (அருச்சுனன்
வீடுமன் என்ற) இரண்டு பேரும், புகுந்து - (போர்க்களம்) அடைந்து, ஒருவர்
எய்தஅம்பு ஒருவர்மேல் உறாது -ஒருத்தர் தொடுத்த பாணம் மற்றொருத்தர் மேற்
படாதபடி, ஓர் ஓர் அம்பினுக்கும் ஓர் ஓர் அம்பு தொட்டு எய்த-ஒவ்வொரு
அம்புக்கும் ஒவ்வொரு எதிரம்பை (வில்லில்) தொடுத்துப் பிரயோகித்த, வல்லபம் -
போர்த்திறமை, இன்னது ஆகும் என்று - இப்படிப்பட்டதாகு மென்று, உன்னல்
ஆகும்ஓ-(மனத்தில்) நினைத்தலுங் கூடுமோ? (எ-று.)-எண்ணுதற்கும்
முடியாதெனவே, சொல்லுதற்குஞ் செய்தற்கும் முடியாமை பெறப்படும்.

     ராவணண் - கூவினவன்; கைலாசகிரியின் கீழ்க்கையகப்பட்டுக்
கொண்டபொழுது பேராரவாரமிட்டதுபற்றி, இவனுக்கு இப்பெயர்
சிவபிரானால் அளிக்கப்பட்டது. இனி, ராவணன் - கூச்சலிடச் செய்தவ னென்றுங்
கொள்ளலாம்; தான் செய்யும் பல துன்பங்களால் உலகத்தாரை அலறிக் கதறிக்
கூவச்செய்தான் இவன், இனி, விஸ்ரவஸின்மகன் என்னும் பொருளில் ஆதேசம்
வந்து ராவணன் என்று ஆயிற்று என்றும் இப்பெயர்க்குக் காரணங் கூறுவர்.
இப்பாட்டின் பின் இரண்டடிகளில் எதிர்நிரனிறைப்பொருள்கோள் உள்ளது.
அருச்சுனனுக்கு-முருகக்கடவுளும், இந்திரனும், இராமனும்; வீடுமனுக்கு-தாரகனும்,
வலனும், ராவணனும் உவமையாவர். என்ன எய்தஎன்க.

     சுப்பிரமணியக் கடவுளால் வேல்கொண்டு பிளக்கப்பட்ட சூரபதுமனது
உடம்பின் கூறுஇரண்டும் மயில்வடிவமும் கோழி வடிவமும் பெற்று
அக்கடவுளருளால் அப்பிரானுக்கு வாகனமுங் கொடியுமாய் அமைந்த சிறப்பைக்
கருதி, 'மாமயில்' என்றார். குஹன் என்னும் வடசொல்லுக்கு - அஞ்ஞான
இருளைப் போக்குபவனென்று பொருள்; கு - இருள்; இது இப்பொருளதாதலை
'குரு' என்ற சொல்லிலுங் காண்க. இனி, இச்சொல்லுக்கு-