பக்கம் எண் :

ஏழாம் போர்ச்சருக்கம்173

தாம் - இறந்து விழாதவர்? இரு தளத்தின்உம் - இரண்டு சேனைகளிலும்,
இருவர்அம்பின்உம் - இந்த இரண்டுபேரது பாணங்களாலும், ஏவுணாத பேர்-
எய்யப்படாதவர், எந்த மன்னர்- எந்த அரசர்தாம் (உளர்)? (எவருமில்லை
யென்றபடி); (இவ்வாறு), நரன்உம் - நரனது அவதாரமான அருச்சுனனும், வெற்றி
கூர்வசுஉம் - சிறப்பு மிகுந்த வசுவினது தோற்றமான வீடுமனும், உற்ற -
பொருந்தின, போர் - யுத்தத்தை, நவிலுகிற்கின்-சொல்லத் தொடங்கினால், நாஉம்
நடுங்கும் - (பேசுங்கருவியான) நாக்கும் அஞ்சும்; (எ-று.)

   இதில் நால்வகைச்சேனையிலும் எல்லாம் அடிபட்டதன்மை கூறப்பட்டது.
அப்போர்,சொல்லுதற்கு அரிது என்பதாம். கீழ்ப்பாட்டில், 'உன்னலாகுமோ'
எனஎண்ணமுடியா தென்றவர், இப்பாட்டில் 'நவிலுகிற்கினும் நாநடுங்கும்' எனச்
சொல்லலாகாமையை வெளியிட்டார். ஏவுணாத, உண்-செயப்பாட்டுவினைப்
பொருளுணர்த்தும் இடைநிலை. ஆல் - ஈற்றசை                     (241)

8.வேறுபோரினிப்பொருதல்வேண்டுமோவிசயன்வீடுமனென்னும்
                                       வீரர்தஞ்
சீறுபோரிடைத்திசையடங்கலுசிவந்தகோலமெய்க்கவந்தமாடுமால்
கூறுபோர்பொரக்கருதிவெங்களங்கொண்டுதங்களிற்கொல்லலுற்றநா
ளாறுபோரினும்பட்டபேரினுமறுமடங்குபேரன்றுபட்டதே.

     (இ-ள்.) விசயன்வீடுமன் என்னும் வீரர்தம்-அருச்சுனன் பீஷ்மன் என்கிற
இரண்டு வீரர்களது, சீறு போரிடை-கோபித்துச் செய்த யுத்தத்திலே, திசை
அடங்கல்உம்-எல்லாத்திக்குக்களிலும், சிவந்த        கோலம் மெய் கவந்தம்
ஆடும்-(இரத்தத்தாற்) சிவந்த நிறத்தையுடைய  வடிவமுள்ள கவந்தங்கள் (எழுந்து)
கூத்தாடும்; (இருதிறத்தாரும்), கூறு போர் பொர கருதி - (சிறப்பித்துச்)
சொல்லப்படுகிற போரைச் செய்யஎண்ணி, வெம் களம் கொண்டு-கொடிய
போர்க்களத்தை யடைந்து, தங்களில்கொல்லல் உற்ற - தம்மில் (ஒருவரையொருவர்)
கொல்லத்தொடங்கிய, ஆறு நாள் போரின்உம்-(கீழ் நடந்த) ஆறுநாளை
யுத்தத்திலும், பட்ட பேரின்உம் - இறந்த சேனைத்தொகையினும், அறு மடங்கு
பேர்-ஆறளவுகொண்ட சேனைத்தொகை, அன்று பட்டது - அந்தஏழா
நாட்போரில்இறந்தது; (என்றால்), இனி வேறு போர் பொருதல் வேண்டும்ஒ -
இனிமேல் மற்றும்போர்செய்தல் வேண்டுமோ? (எ-று.)-அவ்வளவோடு
அன்றையதினத்துப்போர்முடிந்தது என்க                       (242)

9.-சூரியாஸ்தமனவருணனை.

பாரவாளினுங் கூரவேலினும் பகழிவாயினும் பட்டபட்டபோர்
வீரர்வானின்மேல்வழிநடத்தலான்மெய்தளர்ந்துவேதனைமிகுத்தபின்
சேரநீருநும்பாடியெய்துவீர்செருவினொந்ததிச்சேனையென்றுபோ
யாரவாரநீடாழியெய்தினானாழியொன்றுடைத்தேரருக்கனே.

  (இ-ள்.) பார வாளின்உம்-பெரிய வாள்களாலும், கூரவேலின்உம் -
கூர்மையையுடைய வேல்களாலும், பகழி வாயின்உம்-