6. | முந்தவன்றுசென்றாசுகன்மைந்தனாசுகமூழ்கவே சுந்தரன்விசாலக்கணன்வீரவாசிபௌதுண்டனு மந்தமாமகோதரனுடன்மாகவிந்துவுமபயனுஞ் சிந்தினார்களந்தன்னிலாதித்தகேதுவுஞ்சேரவே. |
(இ-ள்.) அன்று - அப்பொழுது, ஆசுகன் மைந்தன் - வாயுகுமாரனான வீமனது, ஆசுகம் - அம்புகள், முந்த சென்று - விரைவாகப் போய், மூழ்க - (அவர்களுடம்பில்) அழுந்த,- சுந்தரன்-, விசாலக் க(ண்) ணன்-, வீரவாசி-, பௌதுண்டனும்-, அந்த-, மா-பெரிய, மகோதரனுடன்-, மாகவிந்துவும்-, அபயனும்- ஆதித்தகேதுவும்-, [இப்பெயர்கொண்ட துரியோதனன்தம்பிமார் எண்மரும்]. சேர- ஒருசேர, களந்தன்னில்- போர்க்களத்திலே, சிந்தினார் - உயிர்நீத்தார்கள்; (எ-று.) சிந்தினார் என்று சொன்னது - மங்கலவழக்கு. சுநாபன், விசாலாக்ஷன், பஹ்வாசீ, பண்டிதன், மகோதரன் குண்டதாரன், அபராஜிதன், ஆதித்யகேது என இவர்கள்பெயர் வியாசபாரதத்திற் கூறப்பட்டுள்ளது. சுநாபன் சுந்தரன் என்பனவும், விசாலாஷன் விசாலக்கண்ணன் என்பனவும், பஹ்வாசீ வீரவாசி என்பனவும், அபராஜிதன் அபயன் என்பனவும் காரணப்பெயர்களாகக் கருதுமிடத்துப் பெரும்பாலும் பொருளில் ஒற்றுமைப்படும் மகோதரன்=மகா உதர அன் - பெருவயிறுடையான், ஆதித்ய கேது - சூரியக்கொடியுடையவன். பௌதுண்டனும்என்றவிடத்து 'பண்டிதனுமே' எனப் பாடங்கொள்ளலாம். குண்டதாரன், மாக விந்து என்றவை-ஒற்றுமைப்படவில்லை. மூன்றாம் அடியின் முதலில், மந்தம் ஆம் எனப்பிரித்து - மந்த புத்தியுடைய எனப் பொருள் கொள்ளலுமாம். ஆசுகன் - விரைந்து செல்பவன்; வாயு: ஆசுகம்-விரைந்து செல்வது;பாணம்: வடசொற்கள். அன்று முந்தச்சென்று - அப்பொழுது (அவர்கள் போருக்கு)முற்பட வந்து எனினுமாம். (250) 7.-தம்பிமாரெண்மர் இறந்ததுகண்ட வருத்தத்தோடு துரியோதனன் வீடுமனைக் குறுகுதல். அற்றகந்தரமுயிரினோடந்தரம்புகத்துள்ளவு மிற்றபேருடம்பவனிமேலெடுத்தவில்லுடன்வீழவு முற்றதம்பியர்மாய்தல்கண்டுள்ளுடைந்துபோயுரனுடைக் கொற்றவன்பெருங்குருகுலக்குரிசினின்றுழிக்குறுகினான். |
(இ-ள்.) அற்ற கந்தரம் - (வீமனால்) அறுபட்ட கழுத்து (தலை), உயிரினோடு- உயிருடனே, அந்தரம் புக - ஆகாயத்திலே பொருந்த, துள்ளஉம்- எழும்பிக்குதிக்கவும், இற்றபேர் உடம்பு-(தலை)போன பெரிய உடம்பு, எடுத்த வில்லுடன் -(கையிற்) பிடித்த வில்லுடனே, அவனி மேல் வீழ உம் - தரையிலே விழுந்திடவும்,உற்ற தம்பியர் மாய்தல் - மனமொத்த (தன்) தம்பிமார் இறத்தலை, கண்டு-, உரன்உடை கொற்றவன் - வலிமையையுடைய வீரனான துரியோதனன், உள்உடைந்துபோய் - மன |