யன்றோ? அவர்கள் இறக்கப் பார்த்திருப்பது தகுதியோ? என்ற கருத்துத் தோன்ற இவ்வாறு கூறினான். வீடுமன் முனைந்து போர்செய்திருந்தால் தன் தம்பியர் இவ்வாறு இறந்திரா ரென்ற எண்ணத்தால், இவ்வாறு கூறியது. (252) 9. | நீவி னைத்தலைச் சேனையின் றலைவ னாகிமுன் னிற்கவே வீவெ னக்குவே றில்லையென் றெண்ணி னேனென வேந்தர்வேந் தோவி யத்தின்மெய் யுணர்வழிந்துள்ள ழிந்துகொண் டுரைசெய்தான் வாவி நித்தில மென்னவே மலர்ந்த கண்கணீர் மல்கவே. |
(இ-ள்.) 'நீ-, வினைத்தலை - (போர்த்) தொழிலிலே, சேனையின் தலைவன் ஆகி - சேனைத்தலைவனய், முன் நிற்கஏ - முன்னே நிற்பதனால், வேறு வீவு எனக்கு இல்லை என்று எண்ணினேன் - (வாழ்வுக்கு) வேறான அழிவே எனக்கு உண்டாகா தென்று நினைத்திருந்தேன்', என - என்று, வேந்தர் வேந்து - ராஜராஜனான துரியோதனன், ஓவியத்தின் - சித்திரப்பாவைபோல, மெய் உணர்வு அழிந்து - (அதிகசோகத்தால்) உடம்பின் உணர்ச்சி ஒழிந்து, உன் அழிந்துகொண்டு- மனம் வருந்திக்கொண்டு, மலர்ந்த கண்கள் - பரந்த (தன்) கண்களினின்றும், நீர்-, வாவி நித்திலம் என்ன - நீர்நிலைகளில்வெளித்தோன்றுகிற முத்துக்கள்போல, மல்க- நிறைய, உரை செய்தான் - கூறினான்; (எ-று.) என உரைசெய்தான் என இயையும், வாலி - வாபீ: வட சொல், வாவியில் நித்திலம் - சங்கு முதலியவற்றினின்று உண்டாவன; இனி, நித்திலம் என்பதை உவமையாகுபெயராகக் கொண்டு, முத்துப்போலத் தெளிவான குளத்துநீர் கண்ணீர்க்கு உவமையெனினும் அமையும். (253) வேறு. 10.-இதுமுதல் ஏழு கவிகள்-ஒருதொடர்: இவ்வாறு சோகித்துக்கூறிய துரியோதனனுக்கு வீடுமன் கூறுவன. இரங்கனீ சிறிது மைய வெறிபடை யெடுப்ப தியாரும் உரங்கள்போ யமரிற் சாகா துய்ந்தன ரோட வன்றே சரங்களா லயிலால் வாளாற் றம்பகை செகுத்துத் தாமுஞ் சிரங்கள்வே றுடல்கள் வேறாக் கிடப்பதே செல்வ மம்மா. |
(இ-ள்.) ஐய -ஐயனே! நீ-, சிறிதுஉம் இரங்கல்-கொஞ்சமும் வருந்தாதே; (உலகத்தில்), யார்உம் - எல்லோரும், எறிபடை எடுப்பது - (பகைவர்மேல்) வீசத்தக்க ஆயுதங்களை யேந்துவது, அமரில் - போரில், உரங்கல் போய் சாகாது -வலிமைகள் அழிந்து இறவாமல், உய்ந்தனர் ஓட அன்றே - தப்பிப்பிழைத்தவர்களாய் ஓடிப்போகும் பொருட்டன்று; சரங்களால் - அம்புகளாலும், அயிலால் - வேல்களாலும், வாளால் - வாள்களாலும், தம் பகை செகுத்து - (தம்மால் இயன்றவளவு) தமது பகைவர்களை அழித்து, (தம்மால் இயலாதவிடத்துப் பகைவர்களால் அழிந்து), தாம்உம் சிரங்கள் வேறு உடல்கள் வேறு ஆ கிடப்பது எ - தாங்களும் தலைகள் வேறும் உடல்கள் வேறுமாக விழுவதே, |