பக்கம் எண் :

எட்டாம் போர்ச்சருக்கம்183

மன்னவைதன்னினின்றமாசிலாவடமீன்போல்வாள்
தன்னிருகண்ணீரின்னமிவைகொலோதருவதம்மா.

     (இ-ள்.) இரு செவிக்கு ஏறாது ஏன்உம் - (உனது) இரண்டு காதுகளிலும்
(ஒப்பாக) நுழையாதாயினும், இன்னம் ஒன்று உரைப்பகேள் -
இன்னுமொருசெய்தியை (யான்) சொல்ல (நீ) கேட்பாய்; முன் அரசு ஆண்ட
வேந்தர் - (உனக்கு) முன் அரசாட்சி செய்த அரசர் (எவராயினும்), முறைமையில்
சிதைந்தது உண்டுஓ-நீதியில் தவறினது உண்டோ? [இல்லையென்றபடி]; மன்
அவைதன்னில் - இராசசபையிலே, நின்ற - (முன்புஉன்னால்துச்சாதனனைக்
கொண்டு வலியப்பிடித்து இழுத்துவரப்பட்டு) நின்ற, மாசு இலா
வடமீன் போல்வாள்தன் - குற்றமில்லாத அருந்ததியை ஒப்பவளான
திரௌபதியினது, இரு கண் நீர் -  இரண்டுகண்களினின்று பெருகிய நீர்,
இன்னம்இவை கொல்ஒ தருவது - இனி இத்தீங்குகளைமாத்திரமா
விளைப்பது?-(எ-று.)அம்மா - ஈற்றசை. இரக்கப்பொருளதுமாம்.

     இன்னும் பலதீங்குகளைத்தருமென்றபடி; உனக்கும் மரணத்தையுண்டாக்கு
மெனக் குறிப்பித்தவாறாம். இவைகொலோ தருவது, இன்னம் தருவது எனத்
தனித்தனிகூட்டி முடிப்பினுமாம். "ஏழை யழுத கண்ணிர் கூரியவாளொக்கும்",
"தோற்றத்தாற்பொல்லார் துணையிலர் நல்கூர்ந்தார். மாற்றத்தாற் செற்றாரென
வலியார்- ஆட்டியக்கால், ஆற்றா தவரழுத கண்ணீ ரவையவர்க்குக். கூற்றமாய்
வீழ்ந்துவிடும்", "அல்லாற்பட்டாற்றாதழுத கண்ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும்
படை"என்பன காண்க. மாசு இலா-கற்பு நிலைமையிற் கலங்குதலில்லாத என்க;
"கலங்கலில் கற்பினருந்ததி" என்றார் கம்பரும். அருந்ததி-வசிஷ்ட முனிவரது
மனைவி, கற்புடையார்பலரினும் இவளுக்கு மேன்மை என்னவெனின்? -
நக்ஷத்திரநிலையிலும் கணவனைப் பிரியாதிருக்கை. அதனை இங்ஙனம் அறிக:-
வடக்கில் சப்தருஷி மண்டலமென்று (இரண்டாயிரத்தெழுநூறுவருஷங்களுக்கு ஒரு
சுற்றுச்சுற்றுகிற) நக்ஷத்திரக்கூட்டமொன்று இருக்கிறது. அதில் நான்குநக்ஷத்திரங்கள்
நீண்ட சதுரமாய்ப் பெட்டிப்பண்டிபோலிருக்கின்றன; அவற்றின்முன்புறத்து அடியில்
நடுவளைந்த ஏர்க் காலைப்போல மூன்றுநட்சத்திரங்கள் இருக்கின்றன: இவற்றில்
நடு நட்சத்திரம் வசிஷ்டநட்சத்திரம், அதனடியிற்கிட்டினதாய் நுட்ப நோக்கினாற்
காணப்படத்தக்கதொரு நக்ஷத்திரம் இருக்கின்றது; அதுதான் அருந்ததி நக்ஷத்திரம்.
வடமீன் - வடக்கில் மின்னுவதெனக் காரணப்பெயர். எதிர்காலங் குறிக்கும்
இனியென்னும்  இடைச்சொல் - விகாரப்பட்டு, இன்என்று ஆகி, அம் சாரியை
பெற்று, இன்னம் என நிற்கும் கேண்மோ, மோ-முன்னிலையசை.

13.கால்வருகவனமான்றேர்க்கன்னனுங்கன்னபாக
மால்வருகலுழிவேகமாவலான்சகுனிதானும்
நூல்வருபழுதில்கேள்விநும்பியுநீயுமிந்த
நால்வருங்குறித்தவெண்ணநாளையேதெரியுமையா.