பக்கம் எண் :

186பாரதம்வீட்டும பருவம்

செய்ய நீ) வா, என்று - என்றுசொல்லி, பரிதி போல்வான் - சூரியன்போல்
விளங்குபவனான வீடுமன், தேர்மேல்-, சென்றனன்-(போருக்குப்) போனான்; (எ-
று.)-இப்பாட்டின் மூன்றாமடியிலுள்ள 'ஒன்றில்' என்றசொல் இரண்டும் -
விகற்பப்பொருளன; ஒன்றில், போர்செய்து பகைவரைக்கொல்வோம்; ஒன்றில்,
போரில் அவர்களால் இறப்போம் என்க. மற்று - வினைமாற்று.

     இங்ஙன் ஒன்றற்குமாறான இருதொழிலை ஒத்தவலிமையுடையவனவாக
வைத்துக்கூறுவது விகற்பாலங்கார  மெனப்படும். வேண்டாம் எனவும் பிரிப்பர்.
சொன்னேன் - இயல்புபற்றி நிகழ்காலம் இறந்தகாலமான வழுவமைதி. பி-ம்:
முன்முனைந்தாரை.

17.அப்போது கடோற்கசன் மாயையாற் பல வடிவுகொண்டு
பகைஞரை மாய்த்து வருதல்.

காயிருங்களிற்றின்மேலான்கடோற்கசக்காளைதானோர்
ஆயிரம்வடிவாய்முந்தியரசர்பேரணியையெல்லாந்
தோயிருட்பிழம்போடுற்றசோனையம்புயலிற்றோன்றி
மாயிருவிசும்பிற்றாராகணமெனமாய்த்துவந்தான்.

     (இ-ள்.) (அப்பொழுது), கடோற்கசன் காளை - கடோற்ககசனாகிய (வீம)
குமாரன், தான்-,-காய் இருங் களிற்றின் மேலான் - கோபிக்குந்தன்மையுள்ள
பெரியஒரு ஆண்யானையின்மே லேறியவனாய்,  தோய் இருள் பிழம்போடு உற்ற
சோனை அம் புயலின் தோன்றி - திரண்ட இருளின் தொகுதியோடு பொருந்திய
விடா மழைபொழியும் அழகியகாளமேகம்போல விளங்கி, ஓர் ஆயிரம் வடிவு ஆய்
முந்தி-(மாயையாற்) பலவடிவங்கொண்டு வந்து, மா இருவிசும்பில தாரா கணம் என
- மிகப்பெரிய ஆகாயத்திலே பொருந்திய நட்சத்திரங்களின் கூட்டம்போல்
(மிகுதியாக அடர்ந்துள்ள), அரசர் பேர் அணியை எல்லாம்-பகையரசர்களது பெரிய
சேனைகளையெல்லாம், மாய்ந்து வந்தான் - அழித்துக்கொண்டு வந்தான்; (எ-று.)

     கரியயானையின்மேல் வந்த கடோற்கசனக்கு இருளினோடு பொருந்திய
காளமேகம்உவமை. மழைபொழி காளமேகம் நட்சத்திரங்களை மறைப்பது போல,
யானையோடுவந்த கடோற்கசன் பகைவர்சேனைகளை ஒழித்தன னென்க. மாயிரு -
ஒருபொருட்பன் மொழி; உரிச்சொற் புணர்ச்சி: "மாமுன் உயிர்வரின் யகரமெய்
தோன்றும்". தாராகணம் - வடசொற்றொடர்.                       (261)

18.-ஒருபுறத்தில் இராவான் பலவடிவுகொண்டு பொருதல்.

ஒருபுடையிவன்போர்செய்யவொருபுடையுரககன்னி
யருளுடைமைந்தனெண்ணிலாயிரமுருவமாகி
யிருபுடையினும்போர்வேந்தரெலிகள்போலேங்கியம்பாற்
பொருபடையுருண்டுபோகப்பொருவில்வெம்பூசல்செய்தான்.