பக்கம் எண் :

எட்டாம் போர்ச்சருக்கம்187

     (இ-ள்.) ஒரு புடை இவன் போர் செய்ய-ஒருபக்கத்திலே இந்தக்கடோற்கசன்
(இவ்வாறு)போரைச் செய்துகொண்டிருக்க,- ஒரு புடை - மற்றொரு பக்கத்தில்,
உரக கன்னி அருள் உடைமைந்தான் - நாககன்னிகையாகிய உலூபியினது
அன்புள்ளபுத்திரனான இராவான், எண் இல் ஆயிரம் உருவம் ஆகி -
அளவில்லாத பல ஆயிரம்வடிவங்கொண்டு, போர் வேந்தர் - போர் செய்யவல்ல
அரசர்கள், எலிகள் போல் ஏங்கி-(பாம்பின் முற்பட்ட) எலிகள் போல அஞ்சி
வருந்தி, பொரு படை -  போர்செய்யும் சேனைகளோடு, இருபுடையின்உம்
உருண்டு போக  - இரண்டு பக்கங்களிலுஞ் சிதறிப்போகும்படி, அம்பால் -
அம்புகளால், பொருவு இல் வெம் பூசல் செய்தான் - ஒப்பில்லாத கொடிய
போரைச்செய்தான்.

     நாககன்னிகைமகனான இவன், தலையின்மேற் படத்தோடு கூடிச் சிறிது
பாம்புவடிவம் உடையனாதலால், இவனுக்குமுன்   ஓடுங்கின அரசர்களுக்கு
எலிகளை உவமைகூறினார்; இங்கே "ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை,
நாக முயிர்ப்பக்கெடும்" என்ற திருக்குறளை யுணர்க்க, பல எலிகள் கூடி
ஆரவாரித்தாலும் ஒருபாம்பினால் எளிதில் அழிதல்போல, பலர் திரண்டு
ஆரவாரித்து வந்து இவனொருவனால் அழிவடைந்தன ரென்க.

19.-அப்போது பகாசுரன்தம்பி வீமன்மேற் பொரவருதல்.

இப்பகன்முடியுமுன்னேயாரையுமுடிப்பனென்னாப்
பைப்பகன்மகுடமைந்தன்பலபெரும்படையுமாகி
யப்பகலடுபோர்செய்யவன்றமரழிந்துமாய்ந்த
மெய்ப்பகனிளவலந்தவீமன்மேல்வெகுண்டுவந்தான்.

     (இ-ள்.) 'இ பகல் முடியும் முன்ஏ - இந்தப்பகற்பொழுது முடிவதற்கு
முன்னே, யாரைஉம் முடிப்பன்-(பகைவர்கள்) எல்லோரையும் அழிப்பேன்',
என்னா- என்றுகூறி, பை பகல் மகுடம் மைந்தன் - படத்தையும்
ஒளியையுடையகீரிடத்தையு முடைய  இராவான், பல பெரு படைஉம் ஆகி -
(தான்ஒருவனே மாயையால்) பல பெரிய சேனைகளுமாக வடிவங்கொண்டு,
அ பகல் - அன்றைத்தினத்திலே, அடு போர் செய்ய - கொல்லும்போரைச்
செய்துகொண்டிருக்க,- அன்று அமர் அழிந்து மாய்ந்த மெய்பகன் இளவல்-
முன்னொருகாலத்திலே போரில்(வீமனால்) அழிந்து  இறந்த வடிவத்தையுடைய
பகாசுரனது தம்பியான (அலம்புசனென்னும்) அரக்கன், அந்த வீமன்மேல்
வெகுண்டு - (தன் தமையனைக் கொன்றவனான) அவ்வீமசேனன்மேற்
கோபங்கொண்டு, வந்தான் -(பாண்டவசேனையை) எதிர்த்து வந்தான்; (எ-று.)

     வேத்திரகீயநகரத்தின் புறத்தி லுள்ளதொரு வனத்தில் வசித்துக்கொண்டு,
பகாசுரனென்பவன், அவ்வூரிலுள்ள வீடுகளிலிருந்து நாள்தோறும்
ஒருவண்டியுணவையும் ஓரிளமகனையும் தனக்கு முறைப்படி திறையாகப்பெற்று
உண்டுவாழ்ந்திருந்தான்; இருக்கையில், பாண்டவர்கள் அரக்கு மாளிகையினின்று
தப்பியுய்ந்து பிராமணவேடம்பூண்டு குந்தியோடுகூட அவ்வூரில் ஓர்