பக்கம் எண் :

188பாரதம்வீட்டும பருவம்

அந்தணன்மனையிற் சென்று தங்கியிருக்க, ஒருநாள் அவ்வீட்டுக்குரிய முறை
நேர்ந்தது; நேரவே, தன்மகனுக்கு அழிவுண்டாவதனை நோக்கி வருந்திப் புலம்பிய
அவ்வீட்டுவேதியன்மனைவியினது சோகத்தைத் தணித்துக் குந்தி தன்மகனான
வீமனையனுப்ப, இவன் சென்று அவனுக்கென்றுகொடுத்த உணவையெல்லாந்
தானுண்டு அவனுடன்பொருது அவனையழித்து அவ்வூரவர்க்கு இடையூறில்லாதபடி
செய்தனனென்பது கதை. அந்தப் பகாசுரனது தம்பியான அலம்புசன், அதுமுதல்
வீமனிடத்துப் பகைகொண்டு, பின்பு பாரதயுத்தத்தில் வீமனைக்கொல்வதாகத்
துரியோதனனோடு சொல்லி, மற்றும் பல அரக்கர்களோடு அவன் பக்கத்தில்
துணையாய் வந்துநின்றா னென்க.                                 (263)

20.-இரண்டுகவிகள்: உடன்வந்த அரக்கரைமாய்த்து அலம்புசனை
இராவான் புறங்கொடுக்கச் செய்தமையைக் கூறும்.

என்னுடன்பிறந்தோன்றன்னையுதிட்டிரனிளவல்கொன்றான்
தன்னுடல்பிளப்பேனென்றுதானைவல்லரக்கரோடு
மன்னுடன்சொல்லிநிற்பான்வந்தெதிர்மலைந்தகாலை
மின்னுடைமுகில்போற்சென்றான்வீமனுக்கிளையோன்மைந்தன்.

     (இ-ள்.) 'என் உடன் பிறந்தோன் தன்னை - எனது உடன் பிறந்தவனான
பகனை, யுதிட்டிரன் இளவல்கொன்றான்-தருமபுத்திரனது தம்பியான வீமன்
(முன்னே) கொன்றிட்டான்; தன் உடல் பிளப்பேன் - (அதற்குப்பிரதியாக)
அவ்வீமனுடம்பை (நான்) பிளந்திடுவேன்,'என்று-, மன்னுடன்-
துரியோதனராசனுடனே, சொல்லி-, நிற்பான்,-(அவனுக்குப் படைத்துணையாய்)
நிற்பவனாகிய அலம்புசன், தானை வல் அரக்கரோடு-சேனையாகத்திரண்டவலிய
பல அரக்கர்களுடனே, வந்து-,எதிர் மலைந்த காலை - எதிரிற்போர்செய்த
பொழுது, வீமனுக்கு இளையோன் மைந்தன்-வீமனது தம்பியான அருச்சுனனது
புத்திரனான இராவான், மின் உடை முகில்போல்-மின்னலையுடைய மேகம்போல,
சென்றான் - (அவனை எதிர்த்துப்) போனான்:(எ-று.)

     யுதிஷ்டிரன் - போரிற் பின்வாங்காதவன், இராவானது தேக காந்தியை
நோக்கி, மின்னுடை முகில்' என்றது.                              (264)

21.-வலம்புரித்தாமவேந்துக்காகவேமலைவான்வந்த
அலம்புசனோடுஞ்சென்றோரடங்கலுமரக்கர்மாயக்
குலம்பழுதற்றமைந்தன்கொண்டபல்லுருவத்தோடும்
புலம்புறப்பொருதானந்தவரக்கனும்புறந்தந்தானே.

     (இ-ள்.) வலம்புரி தாமம் வேந்துக்காகஏ - நஞ்சாவட்டைப் பூமாலையுடைய
துரியோதனனுக்கு உதவியாகவே, மலைவான் - போர்செய்வதற்கு, வந்த-,
அலம்புசனோடுஉம் - அலம்புசனுடனே, சென்றோர் - வந்தவர்களாகிய, அரக்கர்
அடங்கல்உம் - எல்லாவரக்கர்களும், மாய - அழியும்படி. குலம் பழுது அற்ற
மைந்தன் - (தந்தைதாயரது) குலங்களில் ஒருகுற்றமுமில்லாத