இராவான், கொண்ட பல் உருவத்தோடுஉம்-(தான்) கொண்ட பலவடித்துடனே, புலம்பு உற - (அவ்வலம்புசன்) தனிமைப் படும்படி, பொருதான் - போர்செய்தான்; (செய்யவே), அந்த அரக்கன்உம் புறம் தந்தான் - அவ்வலம்புசனும் முதுகுகொடுத்தான்; (எ - று.) புலம்பு என்பது-தனிமையுணர்த்தும் உரிச்சொல்) "புலம்பே தனிமை" என்பது,தொல்காப்பியம். இனி, புலம்புற - விசனப் படஎன்றலுமொன்று, பி-ம்: அலம்புதனோடும், அலம்பசனோடும். 22.-இதுவும் அடுத்த கவியும்-அலம்புசன் கருடன்வடிவுகொண்டுமீளவந்து இராவானை அழித்தமை கூறும். அஞ்சினன்போனபின்னரரவினையடர்க்குமாய வெஞ்சினக்கலுழனாகியுருமெனமீளவந்தான் நஞ்சினையுமிழும்வெவ்வாய்நாகங்களனைத்துமொன்றா யெஞ்சினபோலநின்றானிருதருக்கிறுதிசெய்தான். |
(இ-ள்.) (அவ்வலம்புசன்),-அஞ்சினன் போன பின்னர் - பயந்து புறங்கொடுத்துப்போனபின்பு, அரவினை அடர்க்கும்வெம்சினம் மாயம் கலுழன் ஆகி - பாம்புகளைநாசஞ்செய்யும் கொடிய கோபத்தையுடைய மாயை யாலாகிய ஒருகருடனதுவடிவமாய், மீள - பின்பு, உரும் என - இடிபோல (பயங்கரமாக), வந்தான்-;(அப்பொழுது), நிருதருக்கு இறுதிசெய்தான் - (முன்னே) அரக்கர்களுக்கு அழிவைச்செய்த அவ்விராவான், (அந்தக்கருடனைக் கண்டமாத்திரத்தில்), நஞ்சினைஉமிழும் வெம் வாய் நாகங்கள் அனைத்துஉம் ஒன்று ஆய் எஞ்சின போலநின்றான்-விஷத்தைக் கக்குகிற கொடியவாயையுடைய பாம்புகளெல்லாம் ஒருசேரஒடுங்கினபோல (வலிமை யொடுங்கி) நின்றான்; (எ-று.) அரக்கனும் இராவானும் மாயையினால்பலபலவடிவங்கொண்டு பலபல வகையாகப்போர்செய்து வருகையில், இராவான் மாயையால் பலபாம்புகளின் வடிவத்தைஅடைய, அரக்கன் மாயையால் கருடவடிவங்கொண்டு அப்பாம்புகளை அழிக்கவே,இராவான் திகைப்படைந்துநின்றான் என முதனூலிற் கூறியதையுங் காண்க. பாம்புகளைஅஞ்சுவிக்குந்தன்மை பற்றியும். அரக்கனுக்கு இடியுவமை ஏற்கும். நிருதர் -நைர்ருதர், வடசொல்: நிருருதியென்னுந் திக்பாலகி மரபில் தோன்றினவர் - கலுழன் -கருடன் என்னும் வடசொல்லின்திரிபு. (266) 23. | நின்றவன் றன்னை யந்த நிருதனும் வடிவா ளோச்சிக் கொன்றனன் கொன்றா னாகக் குருகுலத் தரசன் சேனை வென்றன னர்க்க னென்று விரிகடல் போல வார்த்த தன்றவ னடர்த்த மாய மார்கொலோ வடர்க்க வல்லார். |
(இ-ள்.) நின்றவன்தன்னை - (அங்ஙனம் ஒடுக்கி) நின்ற இராவானை, அந்த நிருதன்உம் - அந்த (அலம்புசனென்ற) இராக்கதனும், வடி வாள் ஓச்சி-கூறிய வாளாயுதத்தை வீசி, கொன் |