குமாரனான அந்தச் சிகண்டியை, பத்துஆம் நாளில் - பத்தாவது யுத்த தினத்தில், அமரில் - போரில், என் எதிர் காட்டில் - எனது எதிரில் நிறுத்திக்காட்டினால், யான்படை யாஉம் தீண்டேன் - (பெண்ணாயிருந்து ஆணான அவனோடு போர்செய்ய) நான் ஆயுதங்களில் எவற்றையுந் தொடவும்மாட்டேன்; பின் - பின்பு, அவன் வெகுண்டு செய்யும் - அந்தச்சிகண்டி கோபித்துப்போர் செய்கிற, பெருமிதம் - பராக்கிரமத்தை, கண்டு - பார்த்து, மீண்டு - பின்பு, கன்னனை வெல்ல நின்ற காளை கை கணையால் வீழ்வேன் - கர்ணனைச் சயிக்குமாறு உறுதியாய்நின்ற இளவீரனான அருச்சுனனது கையிலுள்ள அம்பினால் (அடிபட்டுப் போர்க்களத்தில்) விழுவேன்; யாகசேனனென்பது, துருபதனுடைய மற்றொருபெயர். இவன் குமரனென்றது, சிகண்டியை. பெருமிதம் - மிக்க அளவு; ஒருவன் மற்றையோரினுஞ் சிறந்துவிளங்குதற்குத் காரணமாகுதலால், பெருமிதமென்று பராக்கிரமத்துக்குக் காரணப்பெயர்: வீரத்தினைப் பெருமிதமென் றெண்ணினான்; என்னை? எல்லாரோடும் ஒப்பநில்லாது பேரெல்லையாக நிற்றல் பெருமித மெனப்படும் என்றற்கு என்பது; என உரைத்ததை அறிக. 'கன்னனை வெல்லநின்றகாளை' என்றது, திரௌபதியைத் துகிலுரிந்தபோது அருச்சுனன் 'துரியோதனனுக்கு உற்ற துணையான கர்ணனை யான் கொல்வேன்' என்று சபதஞ் செய்துள்ளா னாதாலென்க: கர்ணனிடத்துத் தனக்குள்ள துரபிப்பிராயத்தாலும், அருச்சுனனுக்கு ஒரு ஆசீர்வாதமாகவும், வீடுமன் இவ்வாறு கூறினான்: இனி, நடப்பவற்றைஅறியும் எதிர்காலவுணர்ச்சியாற் கூறினானுமாம். காளை-அது போன்றவனுக்கு உவமவாகுபெயர். (11) 12.-பின்புவீடுமன் 'நீ இருக்கையில் வெற்றி இவர்க்கே' என்ன, க்ருஷ்ணன் துரோணனிடஞ் செல்லுதல். நின்றனையருளொடாங்கேநீலமாமேனியாய்நீ வென்றிமற்றிவரேயல்லால்வேறியாரெய்துகிற்பார் என்றனனென்றபோதப்பிதாமகனிருதாள்போற்றி நின்றவர்தம்மைக்கொண்டுசிலைமுனிநிலையிற்போனான். |
(இ-ள்) நீலம் மா மேனியாய் - நீலநிறமுள்ள அழகிய திருமேனியை யுடையவனே ! நீ-, ஆங்கே - அந்தப்பக்கத்திலே [பாண்டவர்திறத்திலே], அருளொடு - கருணையுடனே, நின்றனை - (துணைசெய்ய) நின்றாய்; (ஆகையால்), இவர்ஏ அல்லர்ல் - இப்பாண்டவர்களேயன்றி, வேறு யார்-, வென்றி - வெற்றியை, எய்துகிற்பார் - அடையவல்லவராவர்? [எவருமில்லை யென்றபடி], என்றனன் - என்று (வீடுமன் கண்ணனை நோக்கிக்) கூறியருளினான்; என்றபோது - அங்ஙனங்கூறினபொழுது, (கண்ணபிரான்), அப்பிதாமகன் இரு தாள் போற்றி நின்றவர் தம்மை கொண்டு - (தமது) பெரியபாட்டனான அவ்வீடுமனது உபயபாதத்தை வணங்கி நின்ற பாண்டவர்களைக் கூட்டிக் கொண்டு, சிலை முனி நிலையில் போனான்-விற்றொழிலில்வல்ல துரோணாசாரியன் நிற்கிறவிடத்துச் சென்றான்; (எ-று.) நீலம் ஆம் மேனியாய் என்றும் எடுக்கலாம். மற்று - அசை. |