அரசவாழ்வு என்றும், இல்லறம் நடத்தும்வாழ்வு என்றும் உரைப்பினும் அமையும்: இனி, இங்கு அறம் என்றது - எதிர்மறையிலக்கணையால் பாவத்தைக் காட்டுமென்னலுமாம். வாழ்க்கை-தொழிற்பெயர். சீயம் - ஸிம்ஹம்என்னும் வடமொழிச்சிதைவு. புறந்தருதல்-பாதுகாத்தலும், தோற்றலும். பி - ம்: பொரமாசுணத்தோன். (276) 33-சூரியாஸ்தமன வருணணை. கந்தேயனையபுயவீமன்கணைகள்பட்டுத் தந்தேரழிந்துபடுமன்னவன்றானையென்ன மந்தேகரெல்லாமலைவுற்றுமடிந்துவீழச் செந்தேரருக்கன்குடபாற்றிசைசென்றுசேர்ந்தான். |
(இ-ள்.) கந்துஏ அனைய - தூண்களையேயொத்த, புயம் - தோள்களையுடைய, வீமன் - பீமசேனனது, கணைகள் - அம்புகள், பட்டு - (மேல்) படுதலால், தம் தேர் அழிந்து படும் - தமது தேர் அழிந்து தோற்கிற, மன்னவன் - துரியோதனராசனது, தானை என்ன-சேனைபோல,-மந்தேகர் எல்லாம் - மந்தேகரென்னும் அசுரர்யாவரும், மலைவுற்று-போர்செய்து, மடிந்து வீழ - இறந்து விழும்படி, செம் தேர் அருக்கன் - சிவந்த தேரையுடைய சூரியன், குட பால் திசை - மேற்குத்திக்குகப்பக்கத்தை, சென்று சேர்ந்தான் - போய் அடைந்தான் (அஸ்தமித்தான்); (எ-று.) மந்தேகாருணமென்னுந் துவீபத்தில் வாழும் மந்தேகரென்னும் அரக்கர்கள் உக்கிரமானதவத்தைச்செய்து பிரமனிடத்து வரம்பெற்று அதனாற் செருக்கி எப்பொழுதும் சூரியனை வளைந்து எதிர்த்துத் தடுத்துப் போர்செய்கின்றன ரென்றும், அந்தணர்கள் ஸ்ந்தியாகாலங்களில் மந்திரபூர்வமாகக் கையில் எடுத்துவிடும் அர்க்கியதீர்த்தங்கள் வச்சிராயுதம்போலாகி அவர்கள்மேல் விழுந்து அவர்களை அப்பால் தள்ளிச் சூரியனது சஞ்சாரத்துக்குத் தடையில்லாதபடிசெய்கின்றன வென்றும் வேதங் கூறும். மூன்றாமடியால், பிராமணர்கள் சந்திசெய்ய என்பது தொனிக்கும். பி-ம்: மன்னவர். (277) 34,- இதுமுதல் மூன்றுகவிகள்-படுகளச்சிறப்பு. தளவொத்தமூரற்றலமானைத்தருமன்மைந்தன் வளமிக்கவெம்போர்க்களம்வென்றுவதுவைசெய்வான் உளமுற்றளித்தகலன்போலுமுகுகலன்கள் பிளவுற்றவேழநுதனித்திலப்பெட்டிபோலும். |
(இ-ள்.) உகு கலன்கள் - (அப்போர்க்களத்திலே) சிந்திக் கிடக்கிற (சேனையின்) ஆபரணங்கள்,-தருமன் மைந்தன்- தருமபுத்திரன், வளம்மிக்க வெம் போர் களம் வென்று - சிறப்புமிகுந்த கொடியயுத்தகளத்திலே (பகைவரைச்) சயித்து, தளவு ஒத்த - முல்லையரும்புகளைப்போன்ற, மூரல்-பற்களையுடைய, தலம் மானை-பூமிதேவியை, வதுவைசெய்வான் - மணஞ்செய்து கொள்ளும்படி, உளம் உற்று-விரும்பி,அளித்த-(அவளுக்குப் பரிசாகக்) கொடுத்த, |