பக்கம் எண் :

எட்டாம் போர்ச்சருக்கம்197

 நிலமான்விளிம்புசிவப்பேறியநீலவாடை
நலமாகமன்றற்குடுத்தென்னநவிலலாமே.

      (இ-ள்.) குலம் - (சிறந்த) குலங்களிற் பிறந்த, மா - பெரிய, நிருபர்-
அரசர்களது, உடல் - உடல்களிலிருந்து, சோரும்-பெருகுகிற, குருதி வெள்ளம் -
இரத்தப்பெருக்கு, பல மா நதி போய் -  அநேகம் பெரிய நதிகளாய்ச் சென்று,
திரை வேலையில் பாய்ந்த-அலைகளையுடைய கடலிலே பாய்ந்திட்ட, தோற்றம்-
காட்சி,-நிலம் மான் - பூமிதேவி, விளிம்பு சிவப்பு ஏறிய நீலம் ஆடை -
கரைகளிற்செந்நிறம் பொருந்திய நீலநிறமுள்ள சேலையை, நலம்ஆக- அழகாக
மன்றற்கு -கலியாணத்தின்பொருட்டு, உடுத்(த)து என்ன - உடுத்துக்கொண்டது
போலுமென்று,நவிலல்  ஆம்-சொல்லத்தக்கதாம்; (எ - று.)

     பூமியைச்சூழ்ந்த கடலின் ஓரங்களின் இரத்தவெள்ளம் பாய்ந்துள்ளது,
பூமிதேவி சிவப்புக்கரையுள்ள நீலச்சேலையைத் தரித்தது போலு மென்று
வருணித்தார்; (தற்குறிப்பேற்றவணி) விளிம்பு - ஓரம் பி - ம்: நிருபர்குடர்.
                                                         (280)  

37.-இருதிறத்தவரும் பாடி புகுதலும் கங்குல்வருதலும்.

தன்பாடிபுக்கான்புறந்தந்ததரணிவேந்தன்
மின்பாடிலங்குங்கணைவெஞ்சிலைவீமனோடு
மன்பாடிபுக்கான்பெரும்போரிடைமாய்ந்தமன்னர்
தென்பாடிபுக்கார்குடிபுக்கதுசேர்ந்தகங்குல்.

     (இ-ள்.) புறம் தந்த - (வீமனுக்கு) முதுகுகொடுத்த, தரணி வேந்தன் -
துரியோதனராசன், தன் பாடி புக்கான் - தனதுபடை வீட்டையடைந்தான்; மின்
பாடுஇலங்கும் - மின்னலின் தன்மையாய் விளங்குகிற, கணை - அம்புகளைத்
தொடுக்கிற, வெம் சிலை - கொடியவில்லையுடைய, வீமனோடு-வீமனுடனே, மன்-
தருமராசன், பாடி புக்கான் - (தன்) படைவீட்டை யடைந்தான்; பெரு போரிடை
மாய்ந்த மன்னர் - பெரிய அப்போரிலே இறந்த அரசர்கள். தென் பாடிபுக்கார் -
தெற்கிலுள்ள (யம) புரத்தைச்  சேர்ந்தார்கள்; சேர்ந்த கங்குல் - வந்த இராத்திரி,
குடி புக்கது - நன்றாகக் குடிபுகுந்தது; (எ - று.)

     வீரசுவர்க்கஞ் செல்பவரும் யமதரிசனம் பெற்றே செல்ல வேண்டுதலால்,
'தென்பாடிபுக்கார்' என்றார்; பாடி - ஊர். கங்குல் குடிபுக்கது - இராத்திரி
தொடங்கிற்று என்பதாம். பாடு-தன்மை.                            (281)

38-ஸ்ரீ க்ருஷ்ணன் இராவானிறந்ததற்கு வருந்தல் கூடாதெனக்
காரணங் கூறுதல்.

அன்றேகளத்திற்பலியூட்டியவாண்மைவீரன்
இன்றேயிறந்தானிதற்குன்னியிரங்கலீரென்று
ஒன்றேமொழியுமுரவோன்முதலைவருக்குங்
குன்றேகவித்தகுடைக்கோவலன்கூறினானே.