மார்களின் தன்மையைப் பற்றி(த்துரியோதனனை) விசாரித்திருந்த சமயத்து,- (எ-று.) முன்னையிரவு-இராத்திரியின் முன்பாகம். "முற்பகல் முழுவதிலும் தானஞ்செய்து பிற்பகலில் தானமொழிதல் கர்ணனது இயல்பாதலை"அடுத்ததானமும் பரிசிலு மிரவலர்க் கருளுடன் முற்பகலளவுங், கொடுத்து" என்றதனாலும் அறிக. தன்போலும் வேறு உவமைபெறாத என்றுமாம். (285) 3. | மாவில்லெடுத்தென்னிளையோர்கள்கந்தவகன்மைந்தன்முன்பு சிவன்முன் பூவில்லெடுத்தமதனானவாறுபுகல்கிற்பதல்லவனிகக் கோவில்லெடுத்தென்மறைநாலும்வல்லகுருவில்லெடுத் தெனினிமேல் நீவில்லெடுக்கிலனைவேமுமுய்துநினையாரும்வாகைபுனையார். |
(இ-ள்.) என் இளையோர்கள்-எனது தம்பிமார்கள் (இருபதுபேர்), கந்தவகன் மைந்தன் முன்பு-வாயுகுமாரனானவீமனுக்கு எதிரில், மா வில் எடுத்து - பெரிய வில்லை யேந்தி (ப் போர்செய்து), சிவன் முன் பூ வில் எடுத்தமதன் ஆன ஆறு- சிவபிரானெதிரிலே புஷ்ப வில்லையெடுத்துப்போர்செய்த மன்மதன்போல் (எளிதில்) அழிந்த விதம் புகல்கிற்பது அல்ல - சொல்லுந்தரமுடையதல்ல; அனிகம் கோ- (எனது) சேனைத்தலைவனாகிய பீஷ்மன், வில் எடுத்து - வில்லையெடுத்துப் போர்செய்து, என்-என்னபயன்? மறை நால்உம் வல்ல குரு வில் எடுத்து என்- நான்குவேதங்களையும், வல்ல ஆசிரியனான துரோணன் வில்லையெடுத்துப் பொருது என்ன பயன்? இனி மேல்-,நீ-,வில் எடுக்கில் - வில்லையெடுத்துப் போர்செய்தால், அனைவேம்உம் உய்தும்-நாங்கள் எல்லோரும் பிழைப்போம்; நினையார்உம் வாகை புனையார்-பகைவர்களும் வெற்றிமாலை சூடமாட்டார்கள்:(எ- று.) -இது-கர்ணனை நோக்கித் துரியோதனன் கூறுவது. 'பூவில்லெடுத்த' என்ற, 'புஷ்பதந்வா' என்னும் மன்மதனது வடமொழிப்பெயரின் பொருள்பற்றி: காமநூலென்னும் பூவிசேடம் காமனுக்கு வில்லாமென்று தமிழ்நூலிலும், மன்மத தந்திரமென்னும் புஷ்பம் மன்மதனுக்கு வில்லா மென்று வடநூலிலுங் கூறுமாறு உணர்க; இனி, பூ வில் எடுத்த - புஷ்பபாணங்களையுடைய கரும்புவில்லைத் தரித்த என்றுமாம். (286) 4. | என்னுஞ்சொலண்ணல்செவியேறநெஞ்சமெரியேறவெய்தின் மொழிவான் முன்னுந்தைதந்தையுரைசெய்தமேன்மையறியாய்கொலம் பொன்முடியாய் தன்னுந்துதேரும்வரிவில்லுமுண்டுசரமுண்டுநாளையவனே உன்னுங்களத்திலவர்வானமாளவுலகாளுவிப்பனுனையே. |
(இ - ள்.) என்னும் சொல்-என்று (துரியோதனன்) சொன்னவார்த்தை, அண்ணல் செவி ஏற-பெருமையையுடைய கர்ணனது காதில் பட, (அதனைக் கேட்டவுடனே), (அக்கர்ணன்), நெஞ்சம் எரி ஏற- மனத்தில் கோபாக்கினி மிக, வெய்தின் - கடுமையாக, மொழிவான் - சொல்லுவான்; (என்னவென்றுஎனில்.)- முன்-முன்னே [அணிவகுத்தபொழுது], உந்தைதந்தை-உனதுதந்தை |