பக்கம் எண் :

202பாரதம்வீட்டும பருவம்

யான திருதராட்டிரனது (பெரிய) தந்தையான வீடுமன், உரை செய்த-(என்னை
அர்த்தரதனாகச்) சொன்ன, மேன்மை-செருக்கை, அறியாய்கொல் -
அறிந்திலையோ? அம் பொன் முடியாய் - அழகிய  பொன்னினாலாகியகிரீடத்தை
யுடையவனே! தன் - அவ்வீடுமனது, உந்து தேர்உம்-செலுத்தப்படுகிற தேரும், வரி
வில்உம் - கட்டமைந்த வில்லும், உண்டு - உள்ள; சரம் உண்டு - அம்புகள்
உள்ளன; அவன்ஏ - அவ்வீடுமனே, நாளை-நாளைக்கு [இனி மேல் என்றபடி],
உன்னும் களத்தில் -கருதிச்செய்யும்போரிலே, அவர் வானம் ஆள-
(பாண்டவராகிய) அப்பகைவர்கள் (இறந்து) வீரசுவர்க்கமடைய, உனைஏ உலகு
ஆளுவிப்பன் - உன்னையே உலகமாளும்படி செய்வான்; (எ - று.)-இதுவும்,
மேற்கவியும் கர்ணனது மறுமொழி. பின்னிரண்டடி -பிறகுறிப்பு. பி-ம்:
செவியேறவெய்தினிடிபோலதிர்ந்து.                             (287)

5.விற்கவ்வுவாளியடலைவர்மீதுவிடவஞ்சிவீரரெதிரே
புற்கவ்வுமாகில்விரைவோடுகங்குல்புலராமுன்வந்துபொருவேன்
சொற்கவ்வையாகநினையற்ககொன்றுசுரர்நாடளிப்பனினியுன்
சிற்கவ்வைதீரவவருக்குநின்றதிருமாலினுக்குமெனவே.

     (இ-ள்.) வில் கவ்வு வாளி - வில்லில்தொடுக்கிற அம்புகளை, அடல்
ஐவர்மீதுவிட-வலிமையையுடைய பஞ்சபாண்டவர்கள்மேற் செலுத்துதற்கு, அஞ்சி -
பயந்து,(அவ்வீடுமன்), வீரர் எதிரே- பலவீரர்கள் முன்னிலையிலே, புல் கவ்வும்
ஆகில் -(தனது தோல்வி தோன்ற வாயினால்) புல்லைக் கௌவியெடுப்பானனால்,
விரைவோடு வந்து - (நான்) துரிதமாக வந்து, கங்குல் புலரா முன் - இராத்திரி
கழிந்து விடிவதற்குமுன்னமே, பொருவேன் - [உன்பக்கத்துப்] போர்செய்வேன்;
சொல் - (எனது) சொல்லை, கவ்வை ஆக நினையற்க-வீணொலியாக
நினையாதிருப்பாயாக; இனி உன் சில் கவ்வை தீர- இனிமேல் உனது சில
கவலைகள் நீங்கும்படி, அவருக்குஉம்-அப்பாண்டவர்களுக்கும், நின்ற
திருமாலினுக்குஉம் - (அவர்களுக்கு உதவியாய்) நின்ற கண்ணனுக்கும், கொன்று
சுரர் நாடு அளிப்பன் - கொன்று வீரசுவர்க்கத்தைக் கொடுத்திடுவேன், என-
என்று(கர்ணன்) சொல்ல,- (எ-று.) "இம்மொழி சென்று கங்கைக்சுதனுக்கு
உரைக்கவென" என அடுத்த கவியோடுதொடரும்.

     கவ்வு, கவ்வை=கௌவு, கௌவை: முதற்போலி, தோற்றவர் வாயினாற் புல்லைக்கவ்வுதல், மரபு.கௌவை - துன்பமும். பழி மொழியுமாம்.       (288)

6.துச்சாதனாவிம்மொழிசென்றுகங்கைசுதனுக்குரைக்கவெனவே
நச்சாடராவையனையானுமங்கொர்நொடியுற்றபோழ்தினடவா
எச்சாபமன்னுமணியூகமானவிரதந்தனக்குநடுவோர்
அச்சாணியானவவனுக்கிவன்சொலடைவேபுகன்றனனரோ.

     (இ-ள்.) (என்று கர்ணன் சொன்ன வார்த்தையைக்கேட்டுத் துரியோதனன்
தனது அடுத்த தம்பியை நோக்கி; 'துச்சாதனா -