என அடுத்த கவியில் தொடரும். இதுவும் அடுத்த கவியும், அது கேட்ட வீடுமன் பதில்கூறி விடைகொடுத்தமையைத் தெரிவிக்கும். பாட்டன்பெயரைப் பௌத்திரனுக்கு இடுவது பெரும்பாலும் உலகமர பாதலால், அம்மகன்மகனுக்கு, பேரன் என்பது-காரணப் பெயர், வீமன் செய்த சபதத்தை "பாஞ்சாலிக் கரசவையிற்பழுதுரைத்தோனுடலெனது படையா மேழி, போஞ்சாலி னிணஞ்சொரியத் துணைவரொடு குலமாளப்பொருவன் யானேÓஎனக் கீழ்ச் சூதுபோர்ச்சருக்கத்திற் காண்க. மகுடம் - தலைக்கு, தானியாகுபெயர். பி - ம்:துணிப்பனினியென். (290) 8. | ஒருநாளுநீவிர்பொறுமின்களும்மையுலகாளுவிக்கவருவோர் வருநாடொடங்கியமர்செய்துதெவ்வைமடிவிப்பர்சொன்ன வகையே குருநாடுமற்றைவளநாடுமெய்திநுமரோடியைந்துகுழுமிப் பெருநாளிருத்துநனிவாழ்திரென்றுவிடைநல்கிவிட்டபிறகே. |
(இ-ள்.) ஒரு நாள்உம் நீவிர் பொறுமின்கள் - (இன்னும்) ஒருநாள் மாத்திரம்நீங்கள் பொறுத்துக்கொண்டிருங்கள்; உம்மை உலகு ஆளுவிக்க வருவோர் -உங்களை உலகத்தையாளும்படி செய்ய (த் துணையாய்) வருபவர், வரு நாள்தொடங்கி - (அவ்வொருநாள்கழித்ததபின்)வருகிற நாள் முதல், அமர் செய்து -போர்செய்து, சொன்ன வகைஏ - (தாம்) சொன்ன விதமாகவே, தெவ்வை மடிவிப்பர்- பகைவர்களை அழித்திடுவார்; (அதன்பின் நீங்கள்), குரு நாடுஉம் - இந்தக்குருநாட்டையும் மற்றை வளம் நாடும்உம் - வளங்களையுடைய மற்றைநாடுகளையும், எய்தி - (உங்களுக்குஉரியவையாக) அடைந்து, நுமரோடு இயைந்து - உங்களுடைய பந்துமித்திரர்களோடு சேர்ந்து, குழுமி - கலந்து, பெரு நாள் இருந்து- பலகாலம் (உயிரோடு) இருந்து, நனி வாழ்திர்-நன்றாக வாழ்வீர்,' என்று - என்றுசொல்லி, விடைநல்கி - (துச்சாதனனுக்கு) விடைகொடுத்து, விட்டபிறகு - (அவனை) அனுப்பின பின்பு,-(எ-று.)-"கண்ணுந் துயின்று" என அடுத்தகவியோடு தொடரும். இந்த எட்டுநாளும் பொறுத்தீர்கள்: இன்னும் ஒருநாள் பொறுங்கள்: பத்துநாளில் நான் அழிவேன், அதன்பின் உங்ளைக் காப்பவர் காக்கட்டும்: அவர்கள் பகைவரை அழிக்கட்டும்; நீங்கள் அரசாண்டு வெகுகாலம் க்ஷேமமாக வாழுங்களென்றன னென்பதாம். ஒருநாளும். உம் - இறந்ததுதழுவிய எச்சத்தோடு இழிவுசிறப்பு, நீவிர் - முன்னிலைப்பன்மைப்பெயர்: இது முதல் வேற்றுமைக்குமாத்திரமே வரும். 'வருவோர்' என்றது கர்ணனை; இகழ்ச்சிப்பன்மை; (291) 9.-இதுவும் அடுத்தகவியும்-வீடுமன்துயின்றெழுத்து போர்க்களங்குறுகி அணிவகுத்துநின்றமை கூறும். கண்ணுந்துயின்றுதுயிலும்முணர்ந்துசிறுகாலையுள்ளகடனும் எண்ணுங்கருத்தின்வழியேயியற்றியிகன்மன்னர்சூழவரவே. |
|