பக்கம் எண் :

ஒன்பதாம் போர்ச்சருக்கம்207

திற்பொருந்திய தீ [கோபாக்கினி], துள்ள - மூண்டெரியவும்,- வெம் செரு
களத்தினிடைவந்து-கொடிய போர்க்களத்திலே வந்து,-(எ-று.)-"அமராடலுற்ற
பொழுது" என வருங் கவியோடு தொடரும். சொற்பொருட்பின்வருநிலையணி.
                                                   
(295)

13.செம்பற்ப ராக முடிமா மதாணி செறிதொங்கல்
                           வாகுவலயம்
பைம்பற்ப ராக மலர்வல்லி யோடு திருமேனி சோதி
                            பயில்வான்
வெம்பற்ப ராக வரையூக மாக முறையால ணிந்து
                            வெயில்கால்
அம்பற்ப ராக பதியென்ன நிற்க வமராட லுற்ற
                              பொழுதே.

     (இ-ள்.) செம்-சிவந்த, பற்பராகம் - பதுமராகத்தினங்களைப் பதிக்கப்பெற்ற,
முடி-கிரீடமும், மா-சிறந்த, மதாணி-பதக்கம், செறி-பொருந்திய, தொங்கல்-
ஆரங்களும், வாகு வலயம் - தோள்வளைகளும், பை-குளிர்ந்த, ராகம் பற்பம்
மலர்-செந்தாமரைப்பூவிலே (வீற்றிருக்கிற), வல்லியோடு - பூங்கொடி போல்மெல்லிய
திருமகளுடனே, திரு மேனி-(தன்னுடைய) அழகிய வடிவத்தில், சோதி பயில்வான் -
ஒளிவிளங்கப்பெற்றவனாகிய கண்ணபிரான்,-வெம்,-(பகைவர்களுக்குப்)
பயங்கரமானதும், ராகம் - (தம்மவர்க்கு)  ஆசையை (வளர்ப்பதும்), வரை-
மலைபோல (எதற்குஞ் சலியாததுமாக வுள்ள), பற்பயூகம் ஆக-பத்மயூகமாக,
முறையால்-ஒழுங்காக, அணிந்து-(பாண்டவசேனையைப்) படைவகுத்து,-வெயில்
கால்-உஷ்ண கிரணத்தை வீசுகிற, அம் பற்பம் ராகம் பதி என்ன - அழகிய
தாமரைக்கு அன்புள்ள கணவனான சூரியன்போல, நிற்க-விளங்கிநிற்க,-அமர்
ஆடல் உற்ற பொழுது - (எதிரிகளோடு) போர்செய்யத் தொடகினபொழுது,- (எ-
று.)-"அலம்புசன் வந்தனன்" என அடுத்த கவியோடு முடியும்.

     எம்பெருமானது திருமேனியில் கிரீடம் முதலிய ஆபரணங்களும்
இலக்குமியும் விளங்குந் தன்மையை முன் இரண்டடிகளில் விவரித்தார்.
சூரியனைக்கண்டமாத்திரத்தில் மலர்தலும், காணாதபொழுது குவிதலுமாகிய
இயல்புபற்றித்தாமரைக்குச் சூரியனைக் கணவ னென்றல், மரபு. முதலடியில்,
பற்பராகம் -பத்மராகம் என்னும் வடமொழித் திரிபு; நவரத்தினங்களுள்
மாணிக்கத்தின்வகைகளில் ஒன்று, பதுமம் - செந்தாமரைமலர் போன்ற, ராகம் -
செந்நிறமுள்ளதுஎன்று காரணப்பெயர். மதாணி - பேரணிகலனென்பர்.
பாஹு வலயம்-வடசொற்றொடர். பின் மூன்று அடிகளிலும், பற்பம் - என்னும்
வடமொழித் திரிபே,ராகம் என்னும் வடசொல்லுக்கு - இரண்டாம் அடியில்
செந்நிறமென்றும், மூன்றாம்அடியில் ஆசையென்றும், நான்காம் அடியில்
அன்பென்றும் பொருள். பைம்பற்பம்-வாடாமல் பசுமையாகவுள்ள தாமரை
யென்றுமாம். வல்லி-கொடிபோன்றபெண்ணுக்கு உவமவாகுபெயர். மூன்றாமடியில்
பற்பராகவரையூகம் என்றே எடுத்து- பற்பராகமணிதோன்றுதற்குஇடனாக
வரைவடிவான வியூகம் [அசலவியூகம்]என்றலும் ஒன்று.             (296)