பக்கம் எண் :

ஒன்பதாம் போர்ச்சருக்கம்209

     (இ-ள்.)(இவ்விருவரும்), யாளி லுர் இரண்டு இகல்புரிந்தது என - ஓர்
இரண்டுயாளிகள் (ஒன்றோடொன்று) போர்செய்ததுபோல, இகலா -
(தம்மில்)போர்செய்ய,-(பின்புஅப்போரில்), மீளிமையினால்உம் வலியால்உம் விறல்
மிக்கோன் - பராக்கிரமத்தாலும் தேகபலத்தாலும் சிறப்புமிகுந்த வீமன்,
வாளின்மிசைவாள் அதனை வைத்து- (அப்பகைவனது)  வாளின் மேல்(தன்)
வாளை வைத்து, (தாக்கி அதைத் துணித்து), அடல் அரக்கன்தோளில் ஒரு தோள்
நிலன் உறும்படி துணித்தான்-கொடிய அவ்விராக்கதனது தோள்களில்
ஒருதோளையும் தரையிலே விழும்படி வெட்டித் தள்ளினான்; (எ-று.)-யாளி -
சிங்கம், வேறொருவிலங்குமாம்.                             (299)

17.- அலம்புசன் 'மற்போர்புரிக' என்று வீமனை நெருங்குதல்.

அற்றதிரடோடுணியவச்சமறவேநின்
றுற்றுழியும்வாளுரகமென்னவுளனாகி
மற்றையொருதோளின்மிசைதட்டியினிமற்போர்

பற்றுகெனவீமனுடல்பற்றுபுபுகுந்தான்.

     (இ-ள்.) அந்த - (இவ்வாறு வீமனால்) அறுக்கப்பட்ட, திரள்தோள் - திரண்ட
(தனது) ஒரு தோள், துணிய - துண்டித்து, விழவும,் (அவ்வரக்கன்), அச்சம் அறஏ
நின்று - பயமில்லாமலே சலியாமல்நின்று, உற்றஉழி உம் - (அத்)துன்பம்
நேர்ந்தவிடத்தும், வாள் உரகம் என்ன உளன் ஆகி - கொடியபாம்புபோல (ச்
சீற்றத்தை)உடையவனாய், மற்றை ஒரு தோளின் - மற்றொரு தோளினால், மிசை
தட்டி-(உடம்பின்)மேல் தட்டிக்கொண்டு, இனிமல் போர் பற்றுக என-'இனி
மற்போர்தொடங்குவாயாக' என்று (வீமனை நோக்கிச் சொல்லி), வீமன் உடல்
பற்றுபு புகுந்தான் - அவ்வீமனது உடம்பைத் தொடர்ந்து நெருங்கினான்; (எ-று.)

     உற்றுழி, பற்றுகென-தொகுத்தல் விகாரம், பற்றுபு செய்பு என்னும்
வாய்பாட்டுத் தெரிநிலை வினையெச்சம், 'பு' விகுதியே இறந்தகாலங் காட்டும்.
உளனாகி - கையையுடையவனாயென்பாருமுளர்.                  (300)

18.-வீமனும் அலம்புசனும் கடுமையாக மற்போர்புரிதல். 

குத்துவர்திரிப்பரிருகுன்றனையதோள்கொண்
டொத்துவர்வயப்புலிகளென்னவுடனோடித்
தத்துவருரத்தொடுரமூழ்கமுதுதகர்போன்
மொத்துவர்சினத்தொடெதிர்முட்டுவர்சிரத்தால்.

     (இ-ள்.) (இவ்விருவரும் ஒருவரையொருவர்),  குத்துவர் - (கையால்)
குத்துவார்கள்; திரிப்பர் - (எடுத்து)ச் சுழற்றுவார்கள்; இரு குன்று அனைய தோள்
கொண்டு - இரண்டுமலையையொத்த தோளால், ஒத்துவர் - மோதுவார்கள்; வய
புலிகள் என்ன - வலிமையையுடைய புலிகள்போல, உடன் ஓடி-விரைந்து ஓடிவந்து,