பக்கம் எண் :

முதற் போர்ச்சருக்கம்21

வின்மகபதியையொக்கும்வேந்தர்முன்சொல்லிற்சூரன்
றன்மகன்மகனேபின்னைச்சாபமென்றெடுக்கிலேனே.

     (இ-ள்.) 'சூரன்தன் மகன் மகனே-சூரனென்னும் அரசனது புத்திரனான
வசுதேவனது குமாரனே! மன் மகன் தருமன்-பாண்டுராசனதுபுத்திரனான யுதிட்டிரன்
தான், வென்று - (பகைவரைச்) சயித்து, வையகம் எய்த நிற்பான் - (இனிப்) பூமியை
அடையநிற்பவன்; வானில் - சுவர்க்கத்தில்வாழ்கிற, வில்-ஒளியையுடைய, மகபதியை
- தேவேந்திரனை, ஒக்கும் - போன்ற, வேந்தர் முன் - அரசர்களது முன்னிலையில்.
என் மகன் எனக்கு முன்னே இறந்தனன்  என்று சொல்லின் - என் குமாரனான
அசுவத்தாமா யானிறப்பதற்குமுன்னே (போரில்) இறந்தானென்று (தகுந்தவர்
யாராவதுசொன்னால், பின்னை - அதன்பின்பு, சாபம் என்று எடுக்கிலேன் -
வில்லென்றுகையில் எடுக்கவும்மாட்டேன் ; (எ - று)-இங்ஙனங் கூறினதனால்,
துரோணனுக்குப்புத்திரன்பக்கலுள்ள மிக்கஅன்பு விளக்ங்கும்.

     தேரில் விற்பிடித்துநிற்கையில் என்னைக் கொல்லவல்லாரில்லை யாதலால்,
நம்பத்தகுந்த புருஷனைக் கொண்டு எனக்கு மிகவும் அநிஷ்டமான
நிகழ்ச்சியொன்று நிகழ்ந்ததாகக் கூறின், கையிற்  பிடித்த சாபத்தைச் சோகத்தினால்
விட்டிடுவேன்: அப்போது என்னைக் கொல்லலா மென்று உபாயங் கூறினானென்று
வியாசபாரதம் கூறும். "என்மகனே யென்முன்னிறந்தானெனுமாற்ற, மன்னவையுட்
கேட்பிக்க வல்லையேல் - பின்னை, அடலுக வென்றிண்டோ ளம்புகவா வென்கை,
யுடலுகவா வென்ற னுயிர்" என்பது, பாரதவெண்பா. மகபதியென்னும்
வடமொழிப்பெயர்க்கு - யாகத்துக்குத் தலைவனென்று பொருள்; நூறு
அசுவமேதயாகங்களைச் செய்து இந்திரபதவி பெறுதலால், இவனுக்கு இப்பெயர்.
இந்திரன், அரசர்க்குச் செல்வத்திலுஞ் சிறப்பிலும் உவமை. சூரனது பௌத்திர
னாதலால், கண்ணனுக்கு 'சௌரி' என ஒரு திருநாமமுங் காண்க. சூரன் -
ஸூரனென்னும் வடமொழித்திரிபு.

15.என்பெருஞ்சாபங்கைவிட்டியானெதிர்நிற்றலானும்
தன்பெருஞ்சாபத்தாலுஞ்சமரிடைத்திட்டத்துய்மன்
வன்புடனெனக்குக்கூற்றாய்மலைகுவன்மலைந்தவன்றே
நின்பெருங்கருத்துமுற்றுமேகுவீர்நீவிரென்றான்.

     (இ - ள்.) (அவ்வாறு), என் பெரு சாபம் கைவிட்டு யான் எதிர் நிற்றலான்உம்-
எனதுபெருமையையுடையவில்லைக் கையினின்று ஒழித்துவிட்டு [நிராயுதபாணியாய்]
நான்எதிரிலே நிற்பதாலும், தன்பெரு சாபத்தால்உம் - தனது [த்ருஷ்டத்யும்நனது]
பெரியவரத்தாலும், சமரிடை - போரிலே, திட்டத்துய்மன்-, வன்புடன் -
வலிமையுடனே,எனக்கு கூற்று ஆய்-எனக்கு யமனாய், மலைகுவன்-போர்செய்வான்;
மலைந்தஅன்றுஏ - (அங்ஙனம்) போர்செய்த அப்பொழுதே, நின் பெரு கருத்து
முற்றும்-உனது பெரிய எண்ணம் நிறைவேறிவிடும் [நான் இறந்திடுதல் திண்ணம்];
நீவிர்ஏகுவீர் - நீங்கள் போங்கள், என்றான் - என்று  (துரோணன் கண்ணனையும்
பாண்டவரையும் நோக்கிக்) கூறினான்; (எ-று.)