பக்கம் எண் :

210பாரதம்வீட்டும பருவம்

உரத்தொடு உரம் மூழ்க-மார்போடு மார்பு அழுத்து, தத்துவர் -பாய்வார்கள்;
சினத்தொடு - கோபத்தோடு, மொத்துவர் - அடிப்பார்கள் முது தகர்போல் -
பெரிய ஆட்டுக்கடாக்கள்போல, சிரத்தால் எதிர் முட்டுவர் - தலையால் எதிரில்
தாக்குவார்கள்; (எ-று.) எதிர்க்கும்போது இருவர் தோளும் இருகுன்றனைய
என்றபடி.

19. அரக்கன் மற்போரில் தோற்று வில்லெடுக்க,
இருவரும் விற்போர் புரிதல்.

மல்வலியழிந்துபிறைவாளெயிறரக்கன்
வில்வலியறிந்திடுதுமென்றுவிலெடுத்தான்
கல்வலியதோள்விடலைகன்றிவிலெடுத்தான்
தொல்வலியினோடிவருங்கணைதொடுத்தார்.

     (இ-ள்.) மல் - (அங்ஙனஞ்செய்து) மற்போரில், பிறை வாள் எயிறு அரக்கன்
- பிறைச்சந்திரன்போன்ற கூர்மையான பற்களையுடைய அலம்புசன், வலி அழிந்து-
பலமொடுங்கி, வில் வலி அறிந்திடுதும் என்று - '(இனி) விற்போரில் (நமக்குள்ள)
வலிமையை அறிவோம்' என்று சொல்லி, வில் எடுத்தான் -
(அவ்வொற்றைக்கையில்) வில்லை யெடுத்துக்கொண்டான்; கல்வலியதோள்
விடலை- கற்போல்வலிமையுடைய தோள்களையுடைய வீரனான வீமனும், கன்றி -
கோபித்து, வில் எடுத்தான்-; (உடனே), தொல் வலியினோடு - பழமையான
[முதிர்ந்த] பலத்துடனே, இருவர்உம்-இந்தஇரண்டு பேரும், கணை தொடுத்தார்-
அம்புகளைத் தொடுத்தார்கள்; (எ - று.)

     ஒருகையற்று மற்றொருகையில் வில்லையேந்திய அரக்கன் பற்களால்
அம்பையெடுத்துத் தொடுத்து விடுத்தா னென அறிக; அதைக்குறிப்பிக்கவே,
'எயிறரக்கன்' என்றார்: முதற்போர்ச்சருக்கத்தின் 28 ஆம் பாட்டை இங்கே
காண்க.எயிறரக்கன் - சிறுபான்மை வேற்றுமையில் உயிர்த்தொடர் றகர வொற்று
இரட்டாதுநின்றது. விடலை - ஆண்பாற்சிறப்புப்பெயர்.               (302)

20.-வீமஅலம்புசரின் போர்த்திறனைத் தேவர்கள் கொண்டாடுதல்.

கணைகளவையொன்றினுடனொன்றெதிர்கடித்துப்
பிணைபடவிழுந்தசெயல்கண்டுநனிபேதுற்
றிணையிலதிவர்க்கினியிரண்டனிகினிக்கும்
புணையுமிவரென்றனர்புரந்தரனொடிமையோர்.

     (இ-ள்.) கணைகள் அவை - (இரண்டுபேரும் பிரயோகித்த) அம்புகள்,
ஒன்றினுடன் ஒன்று எதிர்கடித்து- ஒன்றோடொன்று எதிரிலே கௌவிக்கொண்டு,
பிணை பட விழுந்த - இரண்டும் ஒரு படியாகக் கீழ்விழுந்திட்ட, செயல் -
செய்கையை, கண்டு - பார்த்து, நனி பேது உற்று-மிகுதியாக
மதிமயக்கத்தையடைந்து [திகைத்து], புரந்தரனொடு இமையோர் - (போர்காண
வானத்து வந்த) இந்திரனும் (மற்றைத்) தேவர்களும், 'இவர்க்கு இனிஇணை
இலது -இவ்விருவர்க்கும் வேறு உவமையில்லை; இரண்டு அனி