கினிக்கும்உம் - இரண்டுசேனைகளுக்கும், புணைஉம் - (போர்க்கடலைக்கடக்கத்) தெப்பமாகவுள்ளவர்களும், இவர் - இவர்களே,' என்றனர் - என்றுசொல்லிக் கொண்டாடினார்கள்; (எ-று.)-பிணைபட - ஒன்றோடொன்றுகலக்க. (303) 21.-இதுமுதல்ஐந்துகவிகள்-வீமஅலம்புசர்புரிந்த கடும்போரில் வீமனால் அரக்கனுயிரழிய மற்றையரக்கர்கள் கெட்டமையைக் கூறும். மலையினையும்வாசுகியையும்பொருவுநாணுஞ் சிலையுமறமேலொருசெழுங்கணைதொடுத்தான் தொலைவில்பகையானபகன்மார்புமிருதோளுங் குலைகுலையுமாறுபலகுத்தினுயிர்கொண்டான். |
(இ - ள்.) தொலைவு இல் - அழிதலில்லாத, பகை ஆன - பலஉயிர்களுக்குப்) பகைவனான), பகன்-பகாசுரனது,மார்புஉம்-, இரு தோள் உம்-, குலைகுலையும் ஆறு - நடுநடுங்கி அழியும்படி, பலகுத்தின் - (ஆயுதமில்லாமல்) பல கைக்குத்துக்களால், உயிர்கொண்டான்-அவனுயிரை(முன்பு) பறித்தவனான வீமன், (அவன் தம்பியான அலம்புசனது), மலையினைஉம் வாசுகியைஉம் பொருவும் சிலை உம் நாண்உம் - (சிவபிரானுக்கு வில்லாகிய) மேருவையும் (வில்நாணியாகிய) வாசுகியையும் ஒத்த வில்லும் நாணியும், அற-துணிபடும்படி, மேல்- அவனெதிரிலே, ஒரு செழு கணை தொடுத்தான் - சிறந்த ஒரு அம்பைச் செலுத்தினான்; (எ-று.) இரண்டாம்போர்ச்சருக்கத்து "மேருவை வளைத்து நெடு வாசுகி பிணித்து" என்றது காண்க. இனி, முதலடிக்கு - மந்தர மலையையும் அதைச் சுற்றிக் கடைகயிறான வாசுகியையும் ஒத்த எனப்பொருள் கொள்ளுதலும் ஒன்று. மலையினைப் பொருவும் சிலையும், வாசுகியைப் பொருவும் நாணும் என மாறவேண்டுதலால், பெயர்களும் பெயர்ப்பயனிலைகளுமாய் நின்ற எதிர்நிரனிறைப் பொருள்கோள். குலைகுலைதல்- இரட்டைக்கிளவி, குத்து - முதனிலைத் தொழிற்பெயர். பி - ம்: நனிகுத்தி. (304) 22. | மந்தரமுமந்தரமுமென்னவமர்மலைவா னந்தரமிதல்லவெனவந்தரநெறிப்போய்க் கந்தரநெடுங்கிரகரத்தினிலெடுத்தச் சுந்தரன்வயங்குதிரடோடனிலெறிந்தான். |
(இ-ள்.) மந்தரம்உம் மந்தரம்உம் என்ன - இரண்டுமந்தர மலைகள்(இருந்து அவை ஒன்றோடொன்று போர்செய்தாற்)போல,அமர் மலைவான்-(வீமனுடன்) போர்வெய்பவனான அலம்புசன், இது அந்தரம் அல்ல என-இப்படிப் போர்செய்தல் (வெல்வதற்கு) உபாய மன்றென்று கருதி, அந்தரம் நெறி போய்-ஆகாச மார்க்கத்திற் சென்று, கந்தரம் நெடு கிரி - மேகங்கள் தவழும்படியான பெரிய ஒருமலையை, கரத்தினில் எடுத்து-ஒற்றைக்கையில் எடுத்து, அ சுந்தரன் வயங்கு, திரள் தோள்தனில் எறிந்தான் - அழகிய அந்த வீமனது விளங்குகிற வலியதோளின்மேல் வீசியெறிந்தான்; (எ - று.) |