மந்தரமும் மந்தரமு மென்ன - இல்பொருளுவமை; இருவரும் வலிமையில் ஒத்தவரென்பதை விளக்கும். இதல்ல - ஒருமைப்பன்மைமயக்கம். இது அந்தரமல்ல என - இந்தப்பூமி(நாம் போர் செய்தற்கு ஏற்ற) இடமல்லவென்று எண்ணி எனினுமாம். சுந்தரம்-நீரைத்தரிப்பது: மேகம்: வடசொல். இனி, சுந்தரம் - குகையுமாம். பி - ம்: எடுத்துச். (305) 23. | எறியுமளவிற்குரிசிலிளவறிருமைந்தன் குறியினொடுவெஞ்சிலைகுனித்தருகுநின்றான் பொறியிலவன்வீசியபொருப்பொரணுவாகி முறியும்வகைபல்பகழிமுகிலெனவிடுத்தான். |
(இ-ள்.) எறியும் அளவில்-(அரக்க) மலையை வீமன்தோளில்) வீசிய அளவில்,-குறியினொடு வெம் சிலை குனித்து அருகு நின்றான் - (வீமனுக்குத் துணைசெய்யுங்) கருத்தோடு கொடியவில்லைவளைத்து அவனருகில் நின்றவனாகிய, குரிசில் இளவல் திரு மைந்தன் - அவ்வீமராசனது தம்பியான அருச்சுனனது சிறந்த புத்திரனான அபிமந்யு, பொறியில் அவன் வீசிய பொருப்பு ஓர் அணு ஆகி முறியும் வகை-(வீமனது) தோளில் அவ்வரக்கன் எறிந்த அந்தமலை ஒரு சிறுபொடியாய் அழியும்படி, பல் பகழி-பல அம்புகளை, முகில் என- மேகம் (மழைபொழிவது) போல, விடுத்தான் - செலுத்தினான்; (எ-று.) குறியினொடு - இலக்கை எதிர்நோக்கி என்னவுமாம். பொறி இலவன் எனஎடுத்து,(ஒருதோளாகிய) உறுப்பில்லாதவ னென்றும், அறிவற்றவனென்றும், (இனிவாழும்,விதிஇல்லாதவனென்றும் கொள்ளினுமாம். (306) 24. | வில்லபிமன்வெங்கணைகள்விசையொடவனெறியுங் கல்லசலநீறுபடுவித்ததிறல்கண்டே கொல்லவினிவேண்டுமெனவெய்யதொருகூர்வேல் வல்லடலரக்கனகன்மார்பின்மிசைவிட்டான். |
(இ-ள்.) வில் அபிமன் வெம் கணைகள்-விற்போரில்வல்ல அபிமனது வெவ்விய அம்புகள், விசையொடு-வேகத்தோடு, அவன் எறியும் கல் அகலம் நீறு படுவித்த - அவ்விராக்கதன்(தன்மேல்) வீசின கல்மலையைப் பொடிபடச்செய்த, திறல்-வல்லமையை, கண்டு - பார்த்து,- (வீமன்), இனி கொல்லவேண்டும் என-'இனி இவ்வரக்கனைக் கொன்றுவிடவேண்டும்' என்று கருதி, வெய்யது ஒரு கூர் வேல் - கொடியதொரு கூர்மையையுடைய வேலாயுதத்தை, வல் அடல் அரக்கன் அகல் மார்பின்மிசை விட்டான்-மிகுந்தவலிமையையுடைய அலம்புசனது பரந்த மார்பின்மேல் எறிந்தான்;(எ-று.) அசலத்திற்குக் கல்என்ற அவசியமில்லாத அடைமொழி கொடுத்தது. அதன் உறுதியைக் குறிக்கும். வல் அடல் - ஒரு பொருட்பன்மொழி, விட்டான் என்பதற்கு - (வீமன்) தோன்றா எழுவாயாதலை, மேல்27 - ஆம் பாட்டால் அறிக. விசையொடு |