நீறுபடுவித்த என இயையும்; விரையொடு எறியும் என இயைப்பினும்மையும். (307) 25. | விட்டவடிவேலுருவவேலுருவுமுன்னே பட்டவனும்வீழவிருபாலும்வருசேனை முட்டவுமிவன்கணைமுனைக்கெதிரிலக்காய்க் கெட்டனர்நிசாசரர்கள்கிரிகளெனவீழ்ந்தார். |
(இ-ள்.) விட்ட - (வீமன்) எறிந்த, வடி வேல் - கூர்மையான வேலாயுதம், உருவ - (அவ்வரக்கனுடம்பைத்) துளைக்க, வேல் உருவும் முன்ஏ - அவ்வேல் (அங்ஙனம்) ஊடுருவுதற்கு முன்னே [ஊடுருவினவளவிலே என்றபடி], அவன்உம் - அந்த அலம்சுனும், பட்டு வீழ - இறந்து கீழ்விழ, இருபால்உம் வரு சேனைமுட்டஉம் - (அவ்வரக்கனது) இரண்டு பக்கத்திலும் உடன்வந்த சேனைமுழுவதும், இவன் கணை முனைக்கு எதிர் இலக்கு ஆய் - இவ்வீமனது அம்புநுனிக்கு எதிர்ப்பட்ட லக்ஷ்யமாகி,நிசாசரர்கள்-(அச்சேனையிலுள்ள பல) இராக்கதர்கள், கெட்டனர் - அழிந்தவர்களாய், கிரிகள் என வீழ்ந்தார்-(சிறகு அறுபட்ட) மலைகளைப்போல விழுந்திட்டார்கள்; (எ-று.) நிசாசரர் - இராத்திரிகாலத்திற் சஞ்சரிப்பவர்; காரணப் பெயர்; நிசிசாரெனவும் வரும்:வடசொல்: அரக்கர்க்குப்பகலினும் இரவில் வலிமை மிகுதி, முட்டவும் - நெருங்கித்தாக்கவும் எனினுமாம். முட்ட=முற்ற ஆய் -ஆக எனத் திரித்தலுமாம். (308) 26.-வீமன் கதாயுதத்தாற் பலரை மாய்த்தல். ஆறுபடிநூறுபடியாயிரமரக்கர் மாறுபடுபாடைவடமன்னரொருகோடி யூறுபடவெங்கதைகொடன்றவனுடைக்கச் சேறுபடுமூளைகடெறித்தனசிரத்தால். |
(இ-ள்.) ஆறு படி நூறு படி ஆயிரம் அரக்கர் - அறுநூறாயிரம் இராக்கதர்களும், மாறுபடு பாடை வட மன்னர் ஒரு கோடி - (ஒருவரோடொருவர்) பேதப்பட்ட பாஷைகளையுடைய வடதேசத்திலுள்ள அரசர்கள் ஒரு கோடிபேரும், ஊறு பட - காயப்படும்படி, அவன் - அவ்வீமன், அன்று-அப்பொழுது, வெம் கதை கொடு,-கொடியகதாயுதத்தால், உடைக்க - பிளக்க,- (அவர்களுடைய), சிரத்தால் - (பிளந்த) தலைகளால், சேறு படும் மூளைகள் தெறித்தன- சேறாகப்பொருந்திய மூளைகள் வெளிச்சிந்தின; படி - அளவு, மடங்கு - ஆறுபடி நூறு - ஆறளவுகொண்ட நூறு: அறுநூறு: அவ்வளவு கொண்ட ஆயிரம் - ஆறுபடிநூறு படியாயிரம் [அறுநூறாயிரம்], படிதல்-அமைதல்என்பாருமுளர். பாடை-பா பி-ம்: மூளைகடிறந்தனர். (309) 27.-தேவர்கள் வீமனைப் புகழ்தல். முற்பகலின்மைந்தனைமுருக்கியவரக்கன் பிற்பகலில்வீழவடிவேல்கொடுபிளந்தான் |
|