பக்கம் எண் :

216பாரதம்வீட்டும பருவம்

31.-வீடுமன்கணையால் பாஞ்சாலரிற்பலர்
தமதுவாகனங்களோடு படுதல்.

வரிவெஞ்சிலைக்கைக்கௌரவர்க்குமுதலாமுதல்வன்வடிக்கணைகள்
தெரியுங்கணத்திற்றெரியாமற்றேருந்தாமுஞ்சிலர்பட்டார்
கரியுந்தாமுஞ்சிலர்பட்டார்கலுழ்வாய்மதுகைக்கால்வேகப்
பரியுந்தாமுஞ்சிலர்பட்டார்படாதாருண்டோபாஞ்சாலர்.

     (இ-ள்.) வரி - கட்டமைந்த, வெம் - கொடிய, சிலை-வில்லையேந்திய,
கை -கையையுடைய, கௌரவர்க்கு முதல் ஆம் முதல்வன் - (அக்காலத்திலுள்ள)
குருகுலத்தார்க்குள் மூத்தவனான சிறந்த வீடுமன், வடி கணைகள் - கூர்மையான
அம்புகளை,தெரியும் கணத்தில்-ஆராய்ந்து விடும்பொழுதே,-(பகைவர்களில்),
தெரியாமல் - (அழிவது) தெரியாமல், தேர்உம் தாம்உம் சிலர் பட்டார்-தேர்களும்
தாங்களுமாகச் சிலர் அழிந்தார்கள்; கரிஉம் தாம்உம் சிலர் பட்டார்- யானைகளுந்
தாங்களுமாகச் சிலர் அழிந்தார்கள்; கலுழ் வாய் மதுகை கால் வேகம் பரிஉம்
தாம்உம் சிலர் பட்டார்-நுரையையுடைய வாயையுடையனவும்
வலிமையையுடையனவும் காற்றுப்போன்ற வேகத்தையுடையனவுமாகிய குதிரைகளுந்
தாங்களுமாகச் சிலர் அழிந்தார்கள்; (இவ்வாறு), பாஞ்சாலர்-பாஞ்சால தேசத்தாருள்,
படாதார் உண்டுஓ - (வீடுமன்முன்) பங்கப்படாதவர்கள் உளரோ? [யாவரும்
பங்கப்பட்டனர்]; (எ-று.)-கால்வேகம்-கால்களின் விசையுமாம். 'கலிவாய்'  என்ற
பாடத்துக்கு ஒலி அல்லது செருக்கு வாய்ந்த பரி என்க: "கலிமான்" என்று
குதிரையைக் கூறுதல் காண்க.                                   (314)

32.-வீடுமன் சிகண்டியின்கணைக்கு இலக்காதல்.

நீயுங்ககனங்குடியேறநின்பேருடலநீணிலத்திற்
றோயும்படிநிற்பொரநின்றேனென்றேசொல்லாயிரஞ்சொல்லிச்
சேயுந்தனக்குநிகரில்லாச்சிகண்டிகடுங்காற்சிலைவாங்கிக்
காயுங்கணைகட்கிலக்கானான்காமன்கணைக்குங்கலங்காதான்.

     (இ-ள்.) (அப்பொழுது), சேய்உம் தனக்கு நிகர் இல்லா - முருகக்கடவுளும்
(பலபராக்கிரமங்களில்) தனக்கு ஒப்பாகப்பெறாத, சிகண்டி-, (வீடுமன்முன் வந்து),
'நீஉம் ககனம் குடி ஏற - நீயும் மேலுலகத்தை அடையவும், நின் பேர் உடலம் -
உனது பெரிய உடம்பு, நீள் நிலத்தில் தோயும்படி - பெரியபூமியிலே விழும்படியும்,
நின் பொர - உன்னைப் போர்செய்து அழிக்க, நின்றேன் - வந்துநின்றேன்', என்று-
, சொல் ஆயிரம் சொல்லி - மிகப்பலவான வீரவாதங்களைச் சொல்லிக்கொண்டு,
கடு கால் சிலை, வாங்கி- பயங்கரமான விற்கழுந்தை வளைத்து, காயும் -
கோபித்துஎ றிகிற, கணைகட்கு - அம்புகளுக்கு,-காமன் கணைக்குஉம் கலங்காதான்
- மன்மதனது அம்புக்கும் சலியாத வீடுமன், இலக்கு ஆனான் - குறியானான்:
(எ-று.)

     சிகண்டி வீரவாதஞ்செய்து வீடுமன்மேல் கொடிய அம்புகளை எய்தன
னென்பதாம். காமன்கணைக்கும், உம் - உயர்வுசிறப்பு;