பக்கம் எண் :

218பாரதம்வீட்டும பருவம்

     (இ -ள்.) (அதுகண்டு), 'எம் குலத்திலவன்ஓ - எங்கள் குலத்தில் மூத்தவனான
வீடுமனோ, என் பகழிக்கு இவன்ஓஇலக்கு ஆம் என்பான் போல - 'எனது
அம்புகளுக்கு (இயற்கையில்) ஆண்மையில்லாத இச்சிகண்டியோ ஏற்ற குறியாவன்'
என்று இகழ்பவன்போல, செம் கை சிலை வீழ்த்தான் - (சிகண்டியோடு)
போர்செய்யாமல் சிவந்த கையிற்பிடித்துள்ள (தன்) வில்லைக் கீழே போட்டான்;
(பின்பு), இவன்உம் - இச்சிகண்டியும், அரசன் தம்பிக்கு அழிந்து -
துரியோதனராசனது தம்பியான துச்சாதனனுக்குத் தோற்று, தவன(ன்) உதயத்தில்
இருள் என்ன - சூரியனது உதயகாலத்தில் இருள்கெடுதல்போல், சாய்ந்தான் -
உறுதிநிலைகெட்டான்,' என்று - என்று அறிந்து, தனஞ்சயன்- அருச்சுனன், தன் -
தனது, பவன(ம்) உதயம் தேர்-காற்றுவருதல் போன்ற (வேகத்தையுடைய) தேரை,
நடு விட்டான் - (எதிரிகளின் சேனை) மத்தியிலே செலுத்தினான்; (அப்பொழுது)
பணியார் தாம் உம் புறம் இட்டார் - பகைவர்களும் புறங்கொடுத்து ஓடினார்கள்;

     'இவனோ' என்பது முதல் 'சாய்ந்தான்' என்றது வரையில் அருச்சுனன்
எண்ணும் எண்ணம்; அதனுள், 'இவனோ இலக்காம் என்பகழிக்கு' என்றது,
வீடுமன்மனத்திற் கருதியதை; தபநோதயம், பவநோதயம்-குணசந்திபெற்ற
வடமொழித் தொடர்கள். பணியார்-வணங்காதவர்-பி-ம்: அழிந்தவனும். (317)

35.- கவிக்கூற்று: அருச்சுனன் வென்ற சிறப்பு.

பார்த்தன்கணையாற்பட்டவரைப்பங்கேருகத்தோன்பலகோடி
நாத்தந்திலனேயெண்ணுதற்குநாமார்புகலத்தேமாலை
மாத்தந்திகளும்புரவிகளுந்துணியத்துணியவழிசோரி
நீத்தந்தன்னால்வடவைமுகநெருப்பொத்ததுகார்நெடுவேலை.

     (இ - ள்) (அப்பொழுது) பார்த்தன் கணையால்- அருச்சுனனுடைய
அம்புகளால், பட்டவரை - இறந்தபகைவர்களை, எண்ணுதற்கு - கணக்கிட்டுச்
சொல்லுதற்கு, பங்கேருகத்தோன் - தாமரை மலரில் வாழும் பிரமன், பலகோடி நா
தந்திலன்ஏ - அநேக கோடி நாக்குக்களைக் கொடுத்தானில்லையே! நாம் புகல
ஆர்-(ஒருநாக்கையுடைய) நாம் (அவர்களை எண்ணிச்) சொல்லுதற்கு யார்?
(சொல்லத்தரமுடையோமல்லோம் என்றபடி); தேன் மாலை - தேனையுடைய
பூமாலைகளைத் தரித்த, மா தந்திகள்உம் - பெரியயானைகளும், புரவிகள்உம்-
குதிரைகளும், துணிய துணிய - மிகுதியாக வெட்டுப்பட, வழி-
(அவற்றினின்று)பெருகுகிற, சோரி நீத்தந்தன்னால்- இரத்தவெள்ளஞ் சென்று
பாய்தலால், கார் நெடு வேலை - கருநிறத்தையுடைய பெரியகடல், வடவை முகம்
நெருப்புஒத்தது-படபாஎன்னும் பெண்குதிரையின் முகத்தினின்று வெளிப்படும்
நெருப்புபோலச் செந்நிறமடைந்தது; (எ-று.)

     மிகப்பலவாகிய நாக்குக்கள் இருந்தால்மாத்திரத்திரமே அப்போர்த்திறத்தைச்
சொல்லுதல்கூடு மென்பது, முன்னிரண்டடிகளின்