கருத்து, கருங்கடல் குருதியாற் சிவந்தது என்பது, பின்வாக்கியத்தின் கருத்து: பிறிதின்குணம்பெறலணி, பங்கேருஹம் - சேற்றில் முளைப்பது; வடசொல்: தாமரைக்குக் காரணவிடுகுறி. தேமாலை- (நன்-மெய்,கக) நீத்தம்-நீந்தப்படுவது. (318) 36.-மூன்றுகவிகள் - வீடுமன் கடும்போர்புரியச் சதாநீகன் வந்தெதிர்த்து உயிரொழிந்தமை கூறும். மன்னுஞ்சேனைபடக்கண்டவாட்சந்தனுவின்றிருமைந்தன் பின்னுந்தனதுசிலையேந்திப்பேணாரெவரும்பின்காட்டத் துன்னும்பகழிமழைபொழிந்துதுரக்கும்பொழுதுவிராடபதி என்னுங்குரிசிறனக்கிளையோனிராமற்கிளையோனெனத் தக்கோன். |
(இ-ள்.) மன்னும் - நிலைபெற்ற, சேனை - (தம்பக்கத்துச்) சேனை, பட- (அருச்சுனனால்) அழிய, கண்ட-, வாள் சந்தனுவின் திருமைந்தன் - ஆயுதப்பயிற்சியில் வல்ல சந்தனுமகாராசனது சிறந்தபுத்திரனான வீடுமன்,-பின்உம் தனது சிலை ஏந்திமீண்டும் தன்னுடைய வில்லை வளைத்து, பேணார் எவர்உம் பின்காட்ட - பகைவர்கள்எல்லோரும் புறங்காட்டி அழியும்படி, துன்னும் பகழி மழை பொழிந்து - நெருங்கிய அம்புமழையைச் சொரிந்து, துரக்கும் பொழுது - (எதிர்ப்பக்கத்துச் சேனையை) ஓட்டுகிற சமயத்தில், விராடபதி என்னும் குரிசில் தனக்கு இளையோன் - விராடதேசத்தரசனென்கிற வீரனுக்குத் தம்பியும், இராமற்கு இளையோன் என தக்கோன் - இராமபிரானுக்குத் தம்பியாகிய இலக்குமண னென்று சொல்லத்தக்கவனும்,-(எ-று.)- (ஆகிய) "சதானிகன்" என அடுத்த கவியோடு தொடரும், சிகண்டி எதிரில் வந்தபொழுது, வீடுமன் தன்கைவில்லைக்கீழ் எறிந்ததனாலே, 'பின்னுந் தனது சிலை யேந்தி' என்றார். இலக்குமணன்-போர்த்திறத்துக்கும், தமையனுக்குக் கீழ்ப்படிந்திருக்குந் தகுதிக்கும் உவமை. (319) 37. | பண்ணும்பரிமான்றேருடையான்படைத்தேர்மன்னர்பலர்சூழ வெண்ணுஞ்சிலைக்கைச்சதானிகன்வந்தேதிரூன்றுதலு மெண்டிசையு மண்ணுந்திகைக்கும்படிமலைந்தான்மன்பேருயிருக்காருயிருங் கண்ணும்போல்வான்கருதலர்க்குக்கடுங்காலெழுப்புங்கனல் போல்வான். |
(இ-ள்.) பண்ணும்-அலங்கரிக்கப்பட்ட, பரி மான் - குதிரைகளைப் பூட்டிய, தேர் உடையான்- இரதத்தையுடையவனும் ஆகிய, எண்ணும் சிலை கை சதானிகன்-(யாவரும்) நன்குமதிக்கும் வில்லையேந்திய கையையுடைய சதாநீகனென்பவன், படை தேர் மன்னர் பலர் சூழ- சேனைகளையுடைய ரதாதிபதிகளான அரசர்கள்பலர்(தன்னுடன்)சூழ்ந்துவர, எதிர் வந்து ஊன்றுதலும் - வீடுமனெதிரில் வந்து(போருக்கு) நின்றவளவில்,-மன் பேர் உயிருக்கு-(உலகத்தில்) நிலைபெற்ற மிகுந்த பிராணிகளுக்கெல்லாம், ஆர் உயிர்உம் |