பக்கம் எண் :

220பாரதம்வீட்டும பருவம்

கண்உம் போல்வான்-அருமையான உயிரையும் கண்ணையும் ஒத்து
அன்புக்குஇடமானவனும், கருதலர்க்கு-பகைவர்களுக்கு, கடு கால் எழுப்பும் கனல்
போல்வான்-மிகுந்தகாற்றினால் வளர்க்கப்பட்ட அக்கினியை யொத்து
அழிவுசெய்பவனு மாகிய வீடுமன், எண் திசைஉம் மண்உம் திகைக்கும்படி -
எட்டுத்திக்கிலுள்ளாரும் பூலோகத்தவரும் (கண்டு)  பிரமிக்கும்படி, மலைந்தான்-
போர்செய்தான்; (எ-று.)

     திசை, மண்-ஆகுபெயர். எவர்க்கும் உயிரினும் சிறந்தது வேறுஇன்று
ஆதலாலும், எல்லாவுறுப்புக்களினும் கண் சிறத்தலாலும், அன்பு வைக்கப்படுதலில்
அவற்றை வீடுமனுக்குஉவமை கூறினார்.                           (320)

38.உற்றுச்சமரில்வில்லெடுத்தவுரவோன்றன்னையுடலோடும்
அகற்றுச்சென்னிவேறாகிவீழத்துணித்தேயம்பொன்றாற்
செற்றுக்கங்கைமகனிற்பச்சேராரோடத்தேரோனும்
இற்றுத்தெரித்தமகுடமெனவீழ்ந்தான்புணரிக்கிடையந்தோ.

     (இ-ள்.) சமரில்-போரில், உற்று-எதிரில்வந்து, வில்எடுத்த-வில்ஏந்திப்
பொருத,உரவோன் தன்னை-வலிமையையுடைய சதானிகனை, கங்கை மகன்-
வீடுமன்,உடலோடுஉம் சென்னி அற்று வேறு ஆகி வீழ-உடம்புந்தலையும்
அறுபட்டுத்தனித்தனிவிழும்படி, அம்பு ஒன்றால் துணித்து - ஒருபாணத்தால்
துண்டுபடுத்தி,செற்று-அழித்து, நிற்ப-(வெற்றியோடு) நிற்க,-(அதுகண்டு), சேரார்
ஓட-(மற்றைப்)பகைவர்கள் பயந்துஓட, (அச்சமயத்தில்) தேரோன்உம்-(சிறந்த)
தேரையுடைசூரியனும், இற்று தெறித்த மகுடம் என-(தலைதுணிபட்டுவிழுகையில்)
கழன்று சிதறிவிழுந்த (அச்சதானிகனது) கிரீடம்போல, புணரிக்கு இடை வீழ்ந்தான்-
மேல்கடலிடையிலே விழுந்தான் [அஸ்தமித்தான்]; (எ-று.)-அந்தோ-ஐயோ: ஹந்த
என்னும் வடமொழிச் சிதைவான இது-சதானிகன் இறந்ததற்குக் கவி இரங்கியதைத்
தெரிவிக்கும்.

     இப்பாட்டின் ஈற்றடி-சூரியாஸ்தமனவருணனை. எப்போதும் தேர்மீதே
வருவதனால், சூரியனுக்கு 'தேரோன்' என்று ஒருபெயர் கொடுத்தார்.     (321)

39.-இருதிறத்துச்சேனாவீரரும் சுவேதனையும் சதாநீகனையும்
அழித்ததுகுறித்து வீடுமனைப்பற்றிக் கூறியது.

திலத்திற்சின்னம்படமுன்னஞ்சிவேதனுடல்கொண்டுயிர்செகுத்தான்
தலத்திற்கனகமுடிசிந்தச்சரத்தாலழித்தான்சதானிகனை
வலத்திற்றிகிரிதனையுருட்டுமான்றேர்மச்சத்தவனிபர்தங்
குலத்திற்கிவனேகூற்றென்றார்கூற்றுங்குலையுங்கொலைவேலார்.

     (இ-ள்.) (அப்பொழுது), கூற்றுஉம் குலையும்கொலைவேலார்-யமனும்
அஞ்சும்படியான கொலைத்தொழிலைச்செய்யும் வேலையுடைய (இரண்டுபக்கத்து)
வீரர்களும், ('வீடுமன்), மு ன் ன ம் - முன்னே [முதல்நாட்போரில்], திலத்தின்
சின்னம் பட-எள்ளின்