பக்கம் எண் :

224பாரதம்வீட்டும பருவம்

பெருமனோடுசென்றுதக்கபெற்றிபேசிவெற்றியிற்
பொருமகீபர்சூழநின்றவிளைஞரோடுபோதவே.

இதுமுதல் நான்கு கவிகள் - குளகம்.

     (இ-ள்.) தருமராசன் மதலை-யமதருமராசனது புத்திரனான யுதிட்டிரன்,
பஞ்சசயனம் நின்று-படுக்கைமெத்தையில் நின்று, எழுந்த பின்-துயிலொழிந்து
எழுந்தபின்பு, காலையில் கடன் ஆன கருமம் கழித்து-உதயகாலத்திற் செய்யத்தக்க
கடமைகளாகிய (சந்தியாவந்தநம் முதலிய வைதிகத்) தொழில்களைச் செய்து
முடித்து, நேமி அம் பெருமனோடு சென்று தக்க பெற்றி பேசி -
சக்கராயுதத்தையுடைய அழகியபெருமையயுடைய தலைவனான கண்ணபிரானிடம்
போய் அவனோடு (அன்றைக்குச்செய்யத்) தக்க தன்மைகளைப்பற்றிப் பேசி,
வெற்றியின் பொரு மகீபர் சூழ-சயத்தையுடைய போர்செய்யவல்ல அரசர்கள்
(தன்னைச்) சூழ்ந்து வர, நின்ற இளைஞரோடு போத-கூடநின்ற தம்பிமார்களோடு
புறப்பட,-(எ-று.)- "ஆகவத்துள் அணிய'' என அடுத்தகவியோடு தொடரும்.

     பஞ்சசயனம்-அன்னத்தூவி, இலவம்பஞ்சு, செம்பஞ்சு, மயில் தூவி,
வெண்பஞ்சு என்னும் இவ்வைந்துபொருளாற் செய்யப்பட்ட மெத்தை;“சிறுபூளை
செம்பஞ்சு வெண்பஞ்சு சேணம், உறுதூவி சையையோ ரைந்து'' என்றார்,
முன்னோரும்; இனி, திருப்பாவையில்,“மெத்தென்றபஞ்சசயனத்தின் மேலேறி''
என்றவிடத்து,
'பஞ்சவிதமானபடுக்கையாவது-அழகு, குளிர்த்தி, மார்த்தவம்,
பரிமளம், தாவள்யம் ஆக இவை; அஞ்சுஉருவிட்டுச் செய்த படுக்கை யென்றுமாம்:
பஞ்சாலேசெய்தபடுக்கை யென்னவுமாம்' என்று பெரியவாச்சான்பிள்ளை
வியாக்கியானமிட்டருளியுள்ளார். பெருமன்-பெருமான் என்பதன் குறுக்கல்.  (326)

3.திரண்டுபல்லியங்கடேவர்செவிபுதைக்கவானிடைப்
புரண்டெழுந்ததூளிகண்புதைக்கமெய்பதைக்கவே
முரண்டொடங்குசேனைவந்து முன்னர்நாளையூகமே
யரண்டொடங்குயூகமாகவாகவத்துளணியவே.

       (இ-ள்.) பல் இயங்கள் - அநேகவாத்தியங்கள், திரண்டு-(தம்மிற்) கூடி
(முழங்கி), தேவர் செவி புதைக்க-தேவர்களுடைய காதுகளை அடைக்கவும்,
வானிடை புரண்டு எழுந்த தூளி-ஆகாசத்தில் துள்ளியெழுந்த புழுதிகள், கண்
புதைக்க-(தேவர்களது இமையாக்) கண்களை மறைக்கவும், மெய் பதைக்க-
(போர்செய்வதற்கு) உடம்பு பதறவும்,-முரண்தொடங்கு சேனை-போரைச்
செய்யத்தொடங்குகிற (தங்கள்) சேனை, ஆகவத்துள்வந்து-போர்க்களத்தில் வந்து,
முன்னர் நாளை யூகமே அரண் தொடங்கு யூகம் ஆக அணிய-முந்தியநாளில்
(செய்த பதும) வியூகமே (அன்றைக்குக்) காவலைச்செய்யும் வியூகமாகும்படி
அணிவகுத்துநிற்க,-(எ-று.)-“வீடுமன்எனும்மன்(4) தேரிலேறினான்'' (5) என
அடுத்தகவிகளோடு தொடரும்.