கனல் அளித்தன-சிறந்த அக்கினிதேவனால் கொடுத்தருளப்பட்டவையாம்; வலவன் யார் எனில்-(எனக்குத்) தேர்ப்பாகன் யாரென்றால், குறிப்பொடு என்னை ஆள வந்த நீ-திருவுள்ளக்கருத்தோடு என்னைப்பாதுகாத்தருளுதற்குஎழுந்தருளின நீயாவாய்; (ஆதலால்) தலம் மகீபர் அல்ல-நிலவுலகத்து அரசர்கள் மாத்திரமேயல்ல; தேவர் தானவர் எதிர்ப்பின்உம்-(மற்றையுலகத்திலுள்ள) தேவர்களும் அசுரர்களும் (ஒருங்கேவந்து) எதிர்த்தாலும், கொலை படாமல் ஏவர் போவர்-(என்னால்) கொல்லுதல் படாமல் யாவர் தப்பிப்போவார்? (எ-று.)-எவரையும் தப்பாமற் கொல்லவல்லேனென்பதாம். பதாகை-பெருங்கொடி. மகீபர் அல்ல - திணைவழுவமைதி; 'அல்லர்' எனப் பாடங்கொள்ளின், வழாநிலையாம்: இனி, அல்ல என்பதை, வேறு இல்லை உண்டு என்பனபோல, இருதிணையைம்பால் மூவிடத்துக்கும் பொது வென்றலும் ஒன்று: இது, புதியன புகுதல். பி.-ம்: அளித்தனன். (333) 10. | எந்தையாகதுணைவராகதனயராகவெந்தைதன் தந்தையாகநீயுரைக்கில்யாரையுந்தறிப்பன்யான் முந்தையாரணங்களுக்குமுடிவினின்றபொருளையென் சிந்தையாரமுற்றுவித்துவினையறுத்தசெம்மலே. |
(இ-ள்.) முந்தை-பழமையான, ஆரணங்களுக்கு-வேதங்களுக்கெல்லாம், முடிவில்-முடிவாகிய உபநிஷத்துக்களில், நின்ற-பொருந்திய, பொருளை-அர்த்தத்தை, என் சிந்தை ஆர-எனது மனம் கொள்ளும்படி, முற்றுவித்து-முடிய உபதேசித்து, வினை அறுத்த-(எனது) கருமத்தை ஒழித்த, செம்மலே-பெருமையிற் சிறந்தவனே! எந்தை ஆக-என் தந்தையாயினும் ஆகுக; துணைவர் ஆக-(எனது) உடன்பிறந்தவராயினும் ஆகுக; தனயர் ஆக-பிள்ளைகளாயினும் ஆகுக; எந்தைதன் தந்தை ஆக-எனது பாட்டனாயினும் ஆகுக; யாரைஉம்-(வந்து எதிர்ப்பவர்) எல்லோரையும், நீ-, உரைக்கில்-அழிக்கச்சொன்னால், யான் தறிப்பன்- நான் அழித்திடுவேன்; (எ-று.) கீழ், சுற்றத்தாரிடத்துப் பாசபந்தத்தால் ''யான்மலைவுறேனினி'' என்றவன், பின்பு கீதோபதேசத்தால் பற்றற்றுப் பகவானது கட்டளையையே பிரதானமாகக்கொண்டு இங்ஙனம் கூறினான். உற்றஉறவினரையும் ஒரு பொருளாகக் கொள்ளாமல் எம் பெருமானையே உறுதுணையாகக்கொண்ட உறுதி இதில் விளங்கும். ஆரணங்களுக்கு முடிவில் நின்ற பொருளை மனம்நிரம்ப விளைவித்தல் என்றது, வேதாந்தசாரார்த்தமான கீதையைத் தனக்கு உபதேசித்தருளியதை. ஆக- வியங்கோள். (334) 11.-சேனையோடு வீடுமன்வந்துநிற்க, அருச்சுனனைச் சார்ந்துநின்ற மன்னர் அவன்மீது அம்புகளைத் தூவுதல். என்றபோதுவந்துதேவவிரதனின்றவெல்லையிற் குன்றமன்னதேர்கடாவியருகணைந்தகொற்றவர் |
|