பக்கம் எண் :

பத்தாம் போர்ச்சருக்கம்229

ஒன்றுபட்டசேனையோடியாவரும்முடன்றுபோய்
நின்றசேனைநிருபன்மேனிரைத்துவாளிதூவவே.

     (இ-ள்.) என்றபோது-என்று (அருச்சுனன்கண்ணனிடம்) சொன்ன பொழுது,-
குன்றம் அன்ன தேர் கடாவி அருகு அணைந்த கொற்றவர் யாவர்உம்-
மலையையொத்த (தம்தம்) தேரைச் செலுத்திக்கொண்டு அருச்சுனனருகில் வந்த
அரசர்களெல்லோரும், ஒன்று பட்ட சேனையோடு-தம்முடன்
கூடியசேனைகளுடனே, தேவவிரதன் வந்து நின்ற எல்லையில்-பீஷ்மன்
(போர்க்களத்தில்) வந்துநின்ற இடத்திலே, உடன்று போய்-பகைமை கொண்டு
சென்று, நின்ற சேனை நிருபன்மேல்-(எதிரில்) நின்ற சேனைத்தலைவனான
அவ்வீடுமன்மேல்,  வாளி நிரைத்து தூவ-அம்புகளை வரிசையாகச் செலுத்த,-
(எ-று.)- "பலரும் எய்தவாளி மெய்படப்பட'' என அடுத்த கவியோடு தொடரும்.
யாவரும் முடன்று-விரித்தல்.                                     (335)

12.-அப்போது வீடுமன் தளர்ச்சியுறுதல்.

பலருமெய்தவாளிமெய்படப்படப்பனித்துநாப்
புலரநொந்துகங்கைமைந்தனிதயமும்புழுங்கினான்
மலருகின்றவார்பனிக்குடைந்துசாலமாழ்கிநீ
டலருமந்தநிறமழிந்தவம்புசாதமென்னவே.

     (இ-ள்.) பலர்உம்-(அவ்வரசர்கள்) அநேகரும், எய்த-பிரயோகித்த, வாளி-
அம்புகள்,மெய் பட பட-(தன்) உடம்பிலே மிகுதியாகத் தைக்க, கங்கை மைந்தன்-
வீடுமன்,பனித்து-வருந்தி, நாபுலர-(அவ்வருத்த மிகுதியால்) நாக்கு உலர,
நொந்து-,-மலருகின்ற வார் பனிக்கு உடைந்து-பரவுகிற மிகுந்த பனிக்கு வருந்தி,
சால மாழ்கி-மிகுதியாக வாடி, நீடு அலரும் அந்த நிறம் அழிந்த-பெரிதாக
மலர்ந்துவிளங்குகிறதனக்குரிய நிறம் கெட்ட, அம்பு சாதம் என்ன- தாமரை
போல. (உடம்பு மெலிந்து),இதயமஉம் புழுங்கினான் - மனமுந் தவித்தான்; (எ-று.)

     எப்பொழுதும் மிக அழகிதாக விளங்குந்தன்மையதான தாமரை
பனிக்காலத்தில் வாடுதல்போல, எப்பொழுதும் பலபராக்கிரமங்களையுடைய
வீடுமன் அப்பொழுது பகைவர் எய்த அம்புகளால் மெலிந்தனனென்பதாம்.
காலவித்தியாசத்தாலாகும் தீங்கை நன்கு விளக்குவது, இவ்வுவமை.
இதயம்=ஹ்ருதயம். அம்புஜாதம் - நீரிற் பிறப்பது; வடசொல். மலருகின்ற
வார்பனி-மூடுபனி. நீடு-பகுதியே வினையெச்சப்பொருள்பட்டது.     (336)

13.-வீடுமன் மன்னரெய்த அம்புகளை விலக்குதல்.

துன்னிமித்தமும்பலதொடர்ந்துசெய்யவெய்யவா
மந்நிமித்தநன்னிமித்தமாகுமென்றகந்தெளிந்
துன்னிமித்திரர்க்குநாளுமுதவிசெய்யுமுறுதியோன்
வின்னிமித்தவாளியாலவ்வாளிகள்விலக்கினான்.