சொற்களின் திரிபுகள். பி-ம்: மச்சநாடர் வெங்கலிங்கர். கருநடேசர் சிஞ்சியர். (338) 15.-இதுவும் அடுத்த கவியும் - வீடுமனாலெய்யப்பட்ட மன்னவ ரடைந்த நிலைமையைக் கூறும். முடிதுணிந்துபின்புவீழமுன்னடந்துடற்றுவார் அடிதுணிந்துவிழவிருத்தலங்கல்வில்வணக்குவார் கொடிதுணிந்துவிற்றுணிந்துகோறொடுத்தகையுடன் தொடிதுணிந்துசோரிவெள்ளநதியினூடுசோருவார். |
(இ-ள்.) (தருமன்சேனைவீரர்கள் வீடுமனம்புகளால்), முடி துணிந்து பின்பு வீழ-(தம்) தலை அறுபட்டுப் பின்னே விழுந்திட, முன் நடந்து உடற்றுவார்- முன்னேசென்று போர்செய்பவர்களும், அடி துணிந்து விழ-(தம்)கால்கள் அறுந்துவிழ,இருந்து-கீழிருந்து கொண்டு, அலங்கல் வில்வணக்குவார் - போர்மாலையைச் சூடிய (தம்) வில்லை வளைப்பவர்களும், கொடி துணிந்து - (தம்)துவசம் அறுபட்டு, வில் துணிந்து - வில் அறுபட்டு, கோல் தொடுத்த கை தொடியுடன் துணிந்து - அம்பையெய்கிற கை தொடியென்னும் வளையோடு துணிபட்டு, சோரி வெள்ளம் நதியினூடு சோருவார்-இரத்தப்பெருக்காகிய ஆற்றிலே தளர்ந்துவிழுபவர்களும் ஆனார்கள்: (எ-று.) முன் இரண்டடிகள், தலையும் கால்களும் அறுபட்டபின்பும் முண்டங்கள் முன்தொடர்ச்சியால் சிறிதுபொழுது தொழில்செய்தலைக் கூறி அம்முகமாக அவர்களது வீராவேசத்தை விளக்கும். கொடிதுணிந்து வில்துணிந்து கைதுணிந்து சோருவார்-சினைவினை முதல்கொண்டது. கையுடன் தொடிதுணிந்து - உருபு பிரித்துக் கூட்டப்பட்டது. வில்லையுங் கோல்தொடுத்த கையையும் உடன் கூறியதற்குஏற்ப, கொடி - கொடிபோல மெல்லிதாய் நீண்டுள்ள வில் நாணி என்றலும்பொருந்தும்; மேல் 22 - ஆம் கவியில் ''கைவரிவிலற்று நெடுநாணி நடுவற்றுவளர்கைத் தலமுமற்று விழவே'' என்பதைக் காண்க. (பி - ம்:) நதியினூடு சுழலுவார். (339) 16.- | மருந்தே றித்த பூமி யென்ன வந்த வாம டங்குவார் உருத்தே றிந்த வுருமி னொந்த வுரக மென்னவுட்குவார் ஒருத்த ரோட வென்னி தென்ற நேக ரஞ்சி யோடுவார் விருத்தன் வில்வ ளைத்த வாண்மை விசய னுக்கு மிசையுமோ. |
(இ-ள்.) (இன்னும் தருமன்சேனையார்), மருத்து எறிந்த பூழி என்ன- காற்றினால் வீசியெறியப்பட்ட புழுதிபோல, வந்த ஆ மடங்குவார் - வந்த வழியே திரும்புவார்கள்; உருத்து எறிந்த-உக்கிரமாய் இடித்த, உருமின் - இடியினால், நொந்த - வருந்திய, உரகம் என்ன - பாம்புகள்போல, உட்குவார் - அஞ்சி ஒடுங்குவார்கள்; ஒருத்தர் ஓட - (முன்பு) ஒருவர் பயந்து ஓட, அநேகர் - (மற்றும்) பலர், இது என் என்று - இது என்ன அபாயகாரணமென்று கருதி, அஞ்சி ஓடுவார் - பயந்து ஓடுவார்கள்; (இங்ஙனம் ஆகும் படி), விருத்தன வில் வளைத்த ஆண்மை - (யாவரினும்) மூத்தவ |