18.-வீடுமனுக்குத் துணையாக வந்தவரெய்த அம்புகளை அருச்சுனன் விலக்குதல். மனஞ்செய்வலிகூர்கசதுரங்கமபதாதியிரதத்துடன்வளைந்துபலருந் தனஞ்சயமடங்கலெதிர்சாபமும்வளைத்தெதிர்சரங்களுமுகைத்ததமர் செய்தார் கனஞ்சலதிமொண்டுகொடொழுந்தனையவண்ணனொருகார்முகம் வணக்கியொருநூ றினஞ்சரமொரோர்தொடையிலேவியவரேவுசரம்யாவுமெதிரே விலகினான். |
(இ-ள்.) பலர்உம் - (இவ்வாறு) பலஅரசர்களும், மனம் செய்வலி கூர்- மனத்திற்பொருந்திய வலிமை [தைரியம்] மிகுந்த, கச துரங்கம பதாதி இரதத்துடன்- மிகுந்த யானை குதிரை காலாள் தேர் என்னும் நால்வகைச் சேனைகளுடனே, வளைத்து - சூழ்ந்து கொண்டு, தனஞ்சய(ன்) மடங்கல்எதிர்-அருச்சுனனாகிய சிங்கத்தி னெதிரே, சாபம்உம் வளைத்து - வில்லையும் வளைத்து, எதிர் சரங்கள்உம் உகைத்து - அவன்மேல் அம்புகளையும் செலுத்தி, அமர்செய்தார் - போரைச் செய்தார்கள்; (அப்பொழுது), கனம் சலதி மொண்டு கொடு எழுந்து அனைய வண்ணன் - மேகம் கடல்நீரை முகந்துகொண்டு எழுந்தாற்போன்ற கருநிறத்தையுடைய அருச்சுனன், ஒருகார் முகம் வணங்கி - (காண்டீவமென்னும் தனது) ஒருவில்லை வளைத்து, ஒரு நூறு இனம் சரம் ஒர் ஓர் தொடையில் ஏவி - ஒவ்வொரு நூறுதொகுதியான அம்புகளை ஒவ்வொருதொடுக்குந்தரத்திலும் பிரயோகித்து-(அந்த அம்புகளால்), அவர் ஏவுசரம் யாஉம் எதிர்ஏ விலகினான் - அப்பகைவர்கள் (தன்மேல்) ஏவிய அம்புகளையெல்லாம் எதிரிலே விலகச்செய்தான்; (எ-று.) விலக்கினான் என்ற பிறவினை, சந்தவின்பத்திற்கேற்ப, தொகுத்தல் பெற்றது. 'மனஞ்செய்வலிகூர்' என்ற அடைமொழி இரதத்துக்குப்பொருந்தாதாதலின், சதுரங்கசேனையில் இரதத்தை இறுதியில் வைத்தார். சலதி-நீர் தங்குமிடம். பி-ம்: தனஞ்சயன் மடங்கவெதிர். (342) 19.-ஒருபக்கத்தில் அருச்சுனன் பகைவெல்ல, மற்றொருசார் வீமன் தண்டு கொண்டு விரைதல். தேருதயபானுவெனநின்றவிசயன்றனெதிர்தெவ்வர்பனியென்னவகலத் தாருதயமாநிருபர்வேலைசுவறத்தனதுதண்டுதனிகொண்டுகுதியா வோருதவியின்றிமுடியோடவர்சிரங்களுமுடைந்துமுதுகிட்டுடையவே மாருதசகாயனெனமாருதனெனக்கடவுண்மாருதசுதன்கடுகினான். |
(இ-ள்.) தேர் உதய பானு என நின்ற-தேரோடுஉதித்தலையுடைய சூரியன்போல விளங்கிநின்ற, விசயன் தன்-அருச்சுனனது, எதிர் - எதிரிலே, தெவ்வர்-பகைவர்கள், பனி என்ன-மூடுபனி போல, அகல-(இருந்த இடந்தெரியாது) நீங்க,-(மற்றொருபக்கத்தில்) கடவுள் மாருத சுதன் - வாயுதேவனது குமாரனான வீமசேனன், தார் உதயம் ஆம் நிருபர் வேலை சுவற- முன்னணிச்சேனையிலே விளங்கித்தோன்றுதலையுடைய அரசர்களாகிய கடல்வற்றும்படி, தனது தண்டு கொண்டு தனிகுதியா - தன்னுடைய |