பக்கம் எண் :

234பாரதம்வீட்டும பருவம்

கதாயுதத்தை எடுத்துக் கொண்டு தனியே[ஒப்பில்லாமல் அல்லது வேறு
உதவியில்லாமல்] (தேரினின்று) குதித்து, அவர்-அப்பகைவர்கள், ஓர்உதவி 
இன்றி-(தம்மைக்காத்தற்குத்) துணைவருபவர் ஒருவரும்இல்லாமல், முடியோடு
சிரங்கள்உம் உடைந்து - கீரிடங்களோடு தலைகளும்உடைபட்டு, முதுகுஇட்டு-
புறங்கொடுத்து, உடைய-அழியும்படி, மாருத சகாயன்என-காற்றைத்
துணைவனாகவுடைய அக்கினி போலவும், மாருதன் என -காற்றுப்போலவும்,
கடுகினான்-விரைந்து வந்தான்; (எ-று.)

     அக்கினியை உவமைகூறுதற்கேற்பக் கடல்வற்றுதலும், வாயுவை உவமை
கூறுதற்கேற்பக் கடுகிவருதலுங் கூறினார். மேல் 21-ஆம் கவியில் 'முந்துபடைவீரர்'
என வருதலை நோக்கி, தார் என்பதற்கு - முற்சேனையென்று
பொருளுரைக்கப்பட்டது. இனி, தார் உதயம் மா எனப் பிரித்து, போர்மாலையோடு
எதிரிலே தோன்றுதலையுடையசிறந்த நிருப ரெனினுமாம். மாருதசகாயன்- பஹு
வ்ரீஹிஸமாஸம்பெற்ற வடசொல்தொடர். மாருதசுதன் ஓருதவியின்றிக்
கடுகினான்என்று இயைத்து உரைப்பினுமாம்.

20.-வீமனுடைய வீரச்செயல். 

ஏறிவருதேருடனெடுத்தெறிதருஞ்சிலரையிருபணைகள்பற்றியிறுகச்
சீறிவரும்யானையொடெடுத்தெறிதருஞ்சிலரையைந்துகதியுஞ்சிவணவே
மாறிவருவாசியொடெடுத்தெறிதருஞ்சிலரைவஞ்சினமும்வெஞ்சினமுடன்
கூறிவரும்வாளரசரேறியணிநின்றரதகுஞ்சதுரதுரங்கம்விழவே.

     (இ-ள்.) (வீமன்), வெம் சினமுடன் - கடுங்கோபத்தோடு, வஞ்சினம்உம் கூறி
வரும்-வீரவாதங்களையுஞ் சொல்லிவருகிற, வாள் அரசர் - கொடியபகையரசர்கள்,
ஏறி-,அணி நின்ற-ஒழுங்காக நின்ற, ரதகுஞ்சர துரங்கம்-தேர் யானை குதிரைகள்,
விழ-கீழ் விழும்படி, ஏறிவருதேருடன் எடுத்துசிலரை எறி தரும்-ஏறிவருகிற
தேரோடு கையால்தூக்கிச் சில அரசரை எறிவான்; இரு பணைகள் இறுக பற்றி-
இரண்டுதந்தங்களையும் (தன்கைகளால்) உறுதியாகப்பிடித்து, சீறி வரும்
யானையொடு எடுத்து சிலரை எறிதரும்-கோபித்துவருகிற யானையோடு
தூக்கிச்
சில அரசரை
எறிவான்; ஐந்து கதிஉம் சிவண - ஐவகை நடைகளும்பொருந்த,
மாறிவரு-எதிர்ப்பட்டுவருகிற, வாசியொடு-குதிரையுடனே, எடுத்து-தூக்கி, சிலரை
எறிதரும்-சிலஅரசரை எறிவான்; (எ-று.)

     இனி, 'வஞ்சினமும்........விழ' என்பதை அடுத்தகவியில் 'நொந்து'என்பதோடு
இயைப்பினும் அமையும். வஞ்சினம்-சபதம். ஐந்துகதி-நான்காம் போர்ச்சருக்கம்,
30-ஆம் பாடலினுரையிற் காண்க.                             (344)

21.-தன்சேனை வீமனுக்குப் புறங்கொடுத்தது கண்ட
துரியோதனன்கட்டளையால் ஐந்துலட்சம்வீரர் வீமனை யெதிர்த்தல்.

முந்துபடைவீரர்மிகநொந்துகதைவீமனெதிர்முதுகிடுதல்கண்டுமுனியா
வைந்துறழுநூறுபடியாயிரவர்வின்மையிலருச்சுனனையொத்தவடலோர்