பக்கம் எண் :

பத்தாம் போர்ச்சருக்கம்237

கொண்டு, பறந்தனர் - (அஞ்சி) ஓடினார்கள்; (எ-று.)-யாவரும் பயந்து ஓடிப்
பிழைத்தனரென்பதாம். புகன்ற-சிறப்பித்துக்கூறப்பட்ட எனினுமாம். பருவம் -
பருமையுமாம்.    
                                        (347)
 

24.-வீடுமன் தருமபுத்திரனுக்குத் துணையானதேர்வீரர்களைக்
கடுமையாக எதிர்த்தல்.

விண்ணவரிலுற்றெழுவர்கண்டுகளிகூரவிறல்வீடுமன்விருப்பினுடனே
கண்ணிணைநெருப்பெழவுடன்றினிநமக்குமிதுகாலமெனமாலைபுனையும்
வண்ணவரிவிற்றலைவணக்கிவிதமானபலவாளிகடெரிந்துதருமற்
கெண்ணுமிரதத்தலைவரனைவரையும்விட்டிலனிமைப்
                              பொழுதினெய்தனனரோ.

     (இ-ள்.) (அப்பொழுது), விறல் வீடுமன் - பராக்கிரமத்தையுடைய பீஷ்மன்,
விண்ணவரில் எழுவர் உற்று கண்டு களி கூர (-) (போர்காணும்) தேவர்களில்
ஏழுவசுக்கள்
(அவர்களினத்தவனான - தனது போர்த்திறத்தைக்)
கவனித்துப்பார்த்துக் களிப்புமிகும்படி, விருப்பினுடன்-போர் விருப்பத்தோடு, கண்
இணை நெருப்பு எழ உடன்று - இரண்டுகண்களிலும் தீப்பொறி கிளம்பப்
பெருங்கோபங்கொண்டு, இனி நமக்குஉம் இது காலம் என - இனிமேல் நமக்கும்
(போர்முடித்தற்குக்) காலம் இதுவே யென்றுகருதி,மாலை புனையும் வண்ணம் வரி
வில் தலை வணக்கி - போர்மாலையைத்தரித்த அழகியகட்டமைந்த
வில்லின்கோடியை வளைத்து, விதம் ஆன பல வாளிகள் தெரிந்து -
பலவகைப்பட்ட அநேக அம்புகளை ஆராய்ந்து எடுத்து, தருமற்கு எண்ணும்
இரதம்தலைவர் அனைவரைஉம்-தருமபுத்திரனுக்கு (த் துணைவராக) மதிக்கப்பட்ட
தேர் வீரர்களெல்லாரையும், விட்டிலன் - (ஒருவரையும்) விடாதவனாய், இமை
பொழுதின் எய்தனன் - ஒருகணப்பொழுதிலே அம்பு செலுத்தி யெதிர்த்தான்; (எ-
று.) -அரோ - ஈற்றசை,

     அஷ்டவசுக்களுள் பிரபாசன் வீடுமனாதலால், அவனொழிந்தோரை 'எழுவர்'
என்றது. தனக்கு அழிவுகாலம் அருகிலிருத்தலால், அதற்குமுன் தனது போர்த்திறம்
முழுவதையும் காட்டக்கருதின னென்பார், 'இனி நமக்கும் இதுகாலமென'  என்றார்.

25.-மூன்றுகவிகள்-வீடுமன்செய்த கடும்போரினால் அரசர்கள்
அங்கமற்று இறந்தமை கூறும்.

எத்தனைமுடித்தலைகளெத்தனைபுயக்கிரிகளெத்தனைகரக்கமலம்வே
றெத்தனையுடற்சுமைகளெத்தனையுறுப்பினிணமெத்தனைகொடிக்
                                          குடர்களு
மெத்தனைநிணத்தடிகளெத்தனைநரப்புவகையெத்தனையெலுப்பு
                                          நிரைமே
லெத்தனைமணித்தொடைகளெத்தனைமலர்க்கழல்களிற்றனகளத்
                                        தினிடையே.

       (இ-ள்.) (அவ்வாறு வீடுமன் உக்கிரமாகப் போர்செய்த பொழுது), களத்தின்
இடை-போர்க்களத்திலே, இற்றன - துணிபட்டனவான, முடி தலைகள்-
கிரீடத்தையுடைய தலைகள், எதனை-எவ்வளவு! புயம் கிரிகள்-மலைபோலுந்
தோள்கள், எத்தனை-! கரம் கமலம்-தாமரைமலர்போலும் கைகள், எத்தனை-!
வேறு- இன்னும் உடல் சுமைகள்-பருத்த உடம்புகள், எத்தனை-!உறுப்