பக்கம் எண் :

238பாரதம்வீட்டும பருவம்

பின் நிணம் - உடம்பிலுள்ளகொழுப்புகள், எத்தனை-! கொடி குடர்கள்உம்-
கொடிபோலச்சுற்றிய குடல்களும், எத்தனை-! நிணம் தடிகள்-கொழுத்துள்ள
தசைத்திரள்கள், எத்தனை-! நரம்புவகை-நரம்புகளின்வகைகள், எத்தனை-! எலும்பு
நிரை-எலும்புகளின் வரிசைகள், எத்தனை-! மேல் இன்னும், மணிதொடைகள்-
அழகியதுடையென்னும் உறுப்புகள், எத்தனை-! மலர் கழல்கள்-தாமரைமலர்போன்ற
கால்கள், எத்தனை-! (எ-று.)

       மிகப்பல வீரர்கள் தலைமுதலியன சின்னபின்னப்பட்டு அழிந்தன
ரென்பதாம்.தொடையெனினும், துடையெனினும் ஒக்கும். நரம்புவகை, எலுப்பு 
நிரை-மென்றொடர் வன்றொடராயின. பி. ம்: குடல்களோடு.          (349)

26.விரிந்தனவு ரங்களும்வெ குண்டனம னங்களும்வி
                    ழுந்தனப சுங்கு ருதிநீர்,
தெரிந்தனவெ லும்புகள ழிந்தனகொ ழுந்த சைநி
                மிர்ந்தனத ரம்பின் விசியுஞ்,
சரிந்தனபெ ருங்குடர்து ணிந்தனசி ரங்கடைத
                   வழ்ந்தனநெ டும்பு ருவமு,
மெரிந்தனமு கங்களுமெ ழுந்தனசி ரங்களுமி றந்தனர்
                       கடுங்க ணிளையோர்.

     (இ-ள்.) (மற்றும் வலவீரர்களது), உரங்கள்உம்-மார்புகளும், விரிந்தன-பிளந்தன;
மனங்களும்-, வெகுண்டன - கோபங்கொண்டன; பசு குருதி நீர்-புதிய
இரத்தப்பெருக்குகள், விழுந்தன-கீழ்ப்பாய்ந்தன; எலும்புகள்-, நெரிந்தன-
நொருங்கின; கொழு தசை-கொழுத்த சதைகள், அழிந்தன-; நரம்பின் விசிஉம்-
நரம்புகளின் கட்டுக்களும், நிமிர்ந்தன - நெக்கு விட்டன; பெரு குடர் - பெரிய
குடல்கள், சரிந்தன-; சிரம்-தலைகள், துணிந்தன - அறுபட்டன; நெடு புருவம்உம்-
நீண்ட புருவங்களும், கடை தவழ்ந்தன - நுனி நெறித்தன; முகங்களும்-, எரிந்தன-
தீந்துபோயின; சிரங்கள்உம்- தலைகளும், எழுந்தன-(உடலினின்று துணிபட்டு)
மேலெழுந்தன; (இவ்வாறு போரில் வீடுமனம்புகளால்), கடுங் கண் இளையோர்-
பயங்கரமான கண்களையுடைய வீரர்கள், இறந்தனர்-; (எ-று.)

   வெகுண்டனமனங்களும், கடைதவழ்ந்தனநெடும்புருவமும் என்ற இரண்டும்-
அவர்கள்கொண்ட கோபத்தையும், மற்றவை அவர்கள் பலவகையாக அழிந்ததையும்
விளக்கும். எரிந்தனமுகங்களும் என்பதற்கு-முகங்கள் கோபாக்கினியாற் கொதித்தன
எனினும் அமையும். கடுங்கண் என்றது, கோபக்கண்களை; இனி, கடுமையான
தன்மையுமாம். பி-ம்: முகங்களுமிடிந்தனமனங்களும்.                  (350) 

வேறு. 

27.சோமகரின் மச்சரிற் றென்னரிற் றுளுவரிற் றுருப தேயரில்
                                       வளவரிற்
றேமருவ லங்கற்கு லிங்கரிற் சேரரிற் சிஞ்சிய ரில்வெஞ்ச
                                       மர்விடா
மாமகுட வர்த்தனரின் மண்டலிக ரிற்பட்ட வர்த்தனரின்
                                 மற்றிவ்வுரவோ
னேமருக ணைக்கிலக் காகாத மன்னவர்க ளெம்மண்ன
                              ரென்றுமொழிவாம்.

     (இ-ள்.) சோமகரில் - சோமககுலத்தவரிலும், மச்சரில்-மத்ஸ்ய தேசத்தவரிலும்,
தென்னரில் - பாண்டியநாட்டவரிலும், துளுவரில்-துளுவதேசத்தவரிலும்,
துருபதேயரில்-துருபதேசத்தவரிலும், வளவரில்-சோழநாட்டவரிலும், தேன் மருவு
அலங்கல்-